செவ்வாய், 31 மார்ச், 2020

முதலமைச்சர் செய்தி அறிக்கை நாள் 31.03.2020
*முதியோர் உதவித்தொகை  வழங்குவது சார்பாக செய்தி வெளியீடு*

கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்கில் கடன் பெற்ற ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு மூன்று மாதங்கள் தவணை செலுத்த கால அவகாசம் அளிக்க சுற்றறிக்கை -கூட்டுறவு சங்க பதிவாளர்



*✳மாவட்ட கல்வி அலுவலர்கள் 31.03.2020 ஓய்வு பெற அனுமதிக்கப்பட்டது- பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து ஆணையிடுதல்-சார்ந்து- பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்*

கொரோனா காலத்தில் திருமணம் மற்றும் இறப்பு நிகழ்வுகளுக் கான வழிகாட்டும் தமிழ்நாடு அரசின் நெறிமுறைகள்



ஊரடங்கில் பணியாற்றும் நியாயவிலைக்கடை விற்பனையாளர்களுக்கு ரூ.2,500 / பொட்டலமிடுபவர்களுக்கு ரூ.2,000/ ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.



கரோனாதொற்று தடுப்பு மருத்துவ நடவடிக்கைகள் ~ தமிழகரசின் செய்தியறிக்கை...

அரசு 1.5 கோடி Mask வெளியிலிருந்து வாங்குவதற்கு ஆர்டர் செய்துள்ளது.

அதேபோல் 25 லட்சம் N-95 Mask வாங்குவதற்கும்,

11 லட்சம் பாதுகாப்பு கவசம் 
வாங்குவதற்கும் ஆர்டர் செய்யப்பட்டிருக்கிறது.

2,500 வென்டிலேட்டர்கள் புதிதாக வாங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது.

கரோனா தொற்று தடுப்பு மருத்துவ நடவடிக்கைகள் மத்தியரசின் செய்தியறிக்கை...

என்95 முகக்கவசங்கள் மற்றும் வென்ட்டிலேட்டர்கள் பயன்பாட்டுக்குக் கிடைத்தல் 

நாட்டில் கோவிட்-19 வராமல் முன்கூட்டியே தடுத்தல், கட்டுக்குள் வைத்தல் மற்றும் நிர்வகித்தல் ஆகிய பணிகள் உயர்மட்டக் குழுவால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.  இதற்காக மாநிலங்களின் ஒத்துழைப்புடன் பல்வேறு வகையான நடவடிக்கைகள் முன்னெக்கப்பட்டுள்ளன.  பிபிஇ உபகரணங்கள், முகக்கவசங்கள் மற்றும் வென்ட்டிலேட்டர்கள் ஆகியவற்றின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த இன்றியமையாத பொருள்களைத் தொழிற்சாலைகள் 24 மணி நேரமும் தயாரித்து வருகின்றன.  தளவாடத் தயாரிப்புத் தொழிற்சாலைகள் மருத்துவப் பணியாளர்களுக்கான தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களைத் தயாரிக்க முயற்சி எடுத்து வருகின்றன.  பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் வென்ட்டிலேட்டர்களைத் தயாரிக்க இருக்கிறது.  இந்த நோய்த்தொற்று நெருக்கடியின் போது மருந்துப்பொருள்கள் பற்றாக்குறை ஏற்படாது என மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் அரசுக்கு உறுதி அளித்துள்ளன.  வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் கூட வென்ட்டிலேட்டர்களை வடிவமைத்துத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.  மருத்துவப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் எந்த ஒரு நெருக்கடியையும் சமாளிக்கும் வகையில் தயாராக இருக்கிறார்கள்.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் பணிபுரியும் மருத்துவப் பணியாளர்கள் தங்களுக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் பாதுகாப்பாக இருக்க தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ) பயன்படுத்தப்படுகின்றன.  அவை நம் நாட்டில் தயாரிக்கப்படுவதில்லை.  எதிர்வரும் காலத்தில் பிபிஇ உபகரணங்களுக்கான அதிக அளவுத் தேவையைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் அவற்றை நம் நாட்டிலேயே தயாரிப்பதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது.

ஜவுளி அமைச்சகமும்,  சுகாதாரம் மற்றும் குடும்ப நலவாழ்வு அமைச்சகமும் இணைந்து இந்த முயற்சியை நிறைவேற்ற இணைந்து செயல்படுகின்றன.  உள்நாட்டு உற்பத்தியாளர்கள் சூழலுக்கு ஏற்ப செயல்படத் தொடங்கி உள்ளனர். இதுவரை 11 உற்பத்தியாளர்கள் தரப்பரிசோதனைகளைப் பூர்த்தி செய்துள்ளனர்.  அவர்களுக்கு 21 லட்சம் ஒற்றை அங்கி பிபிஇ-க்கள் தயாரிப்பதற்கான அனுமதி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.  தற்போது அவை தினமும் 6-7,000 ஒற்றை அங்கிகளை விநியோகித்து வருகின்றன.  அடுத்த வாரத்திற்குள் இந்த எண்ணிக்கையானது ஒரு நாளைக்கு 15,000 என அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இன்று மேலும் ஒரு உற்பத்தியாளர் இதற்காகத் தகுதி பெற்றுள்ளார்.  அவருக்கு 5 லட்சம் ஒற்றை அங்கிகள் தயாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

தற்போது நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 3.34 லட்சம் பிபிஇ-க்கள் உள்ளன.  ஏற்கனவே சுமார் 60,000 பிபிஇ-க்களை கொள்முதல் செய்து இந்திய அரசு விநியோகித்து உள்ளது.  இந்திய செஞ்சிலுவைச் சங்கம் சீனாவில் இருந்து 10,000 பிபிஇ-க்களைப் பெறுவதற்கு ஏற்பாடு செய்து அவை பெறப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளன.  மேலும் நன்கொடையாகப் பெற்ற 3 லட்சம் பிபிஇ ஒற்றை அங்கிகள் ஏப்ரல் 4இல் வந்து சேரும். தளவாடத் தயாரிப்பு தொழிற்சாலைகளுக்கு 3 லட்சம் பிபிஇ-க்கான கொள்முதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது.

அயல்நாட்டு பிபிஇ உபகரணத் தயாரிப்பு தொழிற்சாலைகள் உலகளவில் அதிகரித்து வரும் தேவையை எதிர்கொண்டு வருகின்றன.  அத்தகைய தொழிற்சாலைகளை வெளியுறவு அமைச்சகம் அணுகி வருகிறது.  ஆன்லைன் மூலம் செயல்படும் ஒரு சிங்கப்பூர் நிறுவனம் 10 லட்சம் பிபிஇ உபகரணங்களை விநியோகிக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. அவற்றைப் பெறுவதற்கான ஆணை, வெளியுறவு அமைச்சகம் மூலம் அளிக்கப்பட்டுள்ளது.  கொரியாவில் உள்ள மற்றொரு விநியோகஸ்தரும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.  அவருக்கு வியட்நாம் மற்றும் துருக்கியில் உள்ள தயாரிப்பு நிறுவனங்களோடு ஒப்பந்தம் இருக்கிறது. இந்த நிறுவனம் ஒரு நாளைக்கு 1 லட்சம் பிபிஇ உபகரணங்களுக்கு மேல் தயாரிக்கும் திறனைக் கொண்டுள்ளது.  20 லட்சம் பிபிஇ உபகரணங்களை விநியோகிக்க இந்த நிறுவனத்துக்கு வெளியுறவு அமைச்சகம் மூலம் ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

என்95 முகக்கவசங்கள் இரண்டு உள்நாட்டுத் தயாரிப்பாளர்களால் தயாரிக்கப்படுகின்றன.  தற்போதைய நிலையில் அவர்களால் ஒரு நாளைக்கு 50,000 முகக்கவசங்களை மட்டுமே விநியோகிக்க முடியும். அடுத்த வாரத்திற்குள் அந்த நிறுவனங்கள் ஒரு நாளைக்கு 1லட்சம் முகக்கவசங்கள் தயாரிக்கும் அளவிற்கு தங்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்க உள்ளன. ஒரு நாளைக்கு 20,000 என்99 முகக்கவசங்கள் தயாரிப்பதற்கு உள்ளூர் தயாரிப்பாளர்களுடன் டிஆர்டிஓ (DRDO) இணைந்து செயலாற்றி வருகிறது. இன்னும் ஒரு வார காலத்திற்குள் இந்த முகக்கவசங்கள் விநியோகிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய தேதியில் நாட்டில் உள்ள மருத்துவமனைகள் 11.95 லட்சம் என்95 முகக்கவசங்களை இருப்பில் வைத்துள்ளன. கடந்த இரண்டு நாட்களில் கூடுதலாக 5 லட்சம் முகக்கவசங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.  இன்றைய தினம் 1.40 லட்சம் முகக்கவசங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

வென்ட்டிலேட்டர்கள் கோவிட்-19 நோயாளிகளுக்கு தேவை.  ஏனெனில் இத்தகைய நோயாளிகளுக்கு குறுகிய கால சுவாசநோய் (ARDS) ஏற்படும்.  அதற்கு வென்ட்டிலேட்டர்கள் அவசியம் தேவை.  இன்றைய தேதியில் 20க்கும் குறைவான கோவிட்-19 நோயாளிகள் மட்டுமே வென்ட்டிலேட்டர் உதவியுடன் உள்ளனர்.  இது தவிர, கோவிட்-19 நோயாளிக்கு சிகிச்சை அளிக்க நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 14,000க்கும் அதிகமான வென்ட்டிலேட்டர்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

நொய்டாவில் உள்ள ஆக்வா ஹெல்த்கேர் என்ற உள்நாட்டுத் தயாரிப்பு நிறுவனம் இந்த நிலைமைக்கேற்ற வென்ட்டிலேட்டர்களைத் தயாரிக்கும் தகுதி உடையதாக இருப்பதால் அந்த நிறுவனத்திற்கு 10,000 வென்ட்டிலேட்டர்கள் தயாரித்து வழங்க ஆணை வழங்கப்பட்டுள்ளது.  ஏப்ரல் மாதம் 2ஆம் வாரத்தில் இருந்து இந்த நிறுவனத்திடம் இருந்து வென்ட்டிலேட்டர்களின் விநியோகம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் 30,000 வென்ட்டிலேட்டர்களுக்கான ஆணை பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிட்டெட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது.  இந்த பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிட்டெட் உள்நாட்டு உற்பத்தியாளர்களுடன் சேர்ந்து இந்த முயற்சியை நிறைவேற்றும். இந்திய வாகனத் தயாரிப்பாளர்களும் வென்ட்டிலேட்டர்கள் தயாரிப்பதற்குத் தயாராகி வருகின்றனர்

இதற்கு இடையில் ஹேமில்ட்டன், மின்ட்ரே மற்றும் ட்ரேஜெர் போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு வென்ட்டிலேட்டர்கள் விநியோகிக்க ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. வெளியுறவு அமைச்சகம் 10,000 வென்ட்டிலேட்டர்கள் வாங்க சீன விநியோகஸ்தர்களை அணுகி வருகிறது.

கொரோனா தொற்று உள்ள இடங்களை அறிந்து கொள்ளலாம்...

Activate your location and press click here...
     http://coronatracker.in                    Shows how close are you from the nearest covid-19 confirmed case.

2020-21 நிதியாண்டு தொடங்கும் மாதம் மாற்றம் ~ 2020 ஏப்ரல் 1-க்கு பதிலாக 2020 ஜுலை 1-ல் தொடங்கும் என மத்திய அரசு அறிவிப்பு..

திங்கள், 30 மார்ச், 2020

வெளியில் சென்று வருகிறீர்களா.... வீட்டை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது எப்படி?

DSE Proceedings _School Education – COVID 19- Hon’ble Chief Minister’s Press release – Passes for two to three persons from Institutions for making arrangement for preparing the list and connected works for payment of salaries and wages – Reg




உணவு உள்ளிட்ட இன்றியமையா பணிகளுக்குச் செல்வோர் (அரசு அடையாள அட்டையில்லாதோர்) அரசு‌ அனுமதி பெற இணையம் வழி விண்ணப்பிக்க லிங்க்

உணவு உள்ளிட்ட இன்றியமையா பணிகளுக்குச் செல்வோர் (அரசு அடையாள அட்டையில்லாதோர்) அரசு‌ அனுமதி பெற இணையம் வழி விண்ணப்பிக்க

 click here.....
https://epasskki.in/

ஆசிரியர் அரசு ஊழியர் மீதான நடவடிக்கை யை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் பொதுச்செயலாளர் திரு. பாவலர் க.மீனாட்சிசுநந்தரம் அறிக்கை


ஞாயிறு, 29 மார்ச், 2020


கொரானா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறை செயலாளரின்  ஆணை..
*கோவிட்19 _ மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை*




*✳கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் அவர்களின் 29.03.2020 பத்திரிக்கை செய்தி.*👆





மனநலம் சார்ந்த ஆலோசனைகள் தேவைப்படுவோருக்கு மாவட்ட வாரியாக (நாமக்கல்: 9597806206/ 9385403517) அலைபேசி எண்கள் தரப்பட்டு உள்ளது. சென்னை மருத்துவக்கல்லூரி தொலைபேசி எண்: 044-26425585 அளிக்கப்பட்டுள்ளது-& தமிழ்நாடு அரசு

அன்பானவர்களே! வணக்கம் 🙏மனநலம் சார்ந்த ஆலோசனைகள் தேவைப்படுவோருக்கு மாவட்ட வாரியாக (நாமக்கல்: 9597806206/ 9385403517) அலைபேசி எண்கள் தரப்பட்டு உள்ளது.
சென்னை மருத்துவக்கல்லூரி  தொலைபேசி எண்: 044-26425585 அளிக்கப்பட்டுள்ளது.

சனி, 28 மார்ச், 2020

அவசர காரணங்களுக்கான பயணம் மேற்கொள்வதற்கு அனுமதி பெற தனிகட்டுப்பாட்டு அறையை தமிழகரசு அமைத்துஉள் ளது.இதற்கென அலைபேசி எண்,மின்னஞ்சல் முகவரி வெளியிட்டுள்ளது.



கொரோனா கிருமி ஒழிப்பு போரின் தன்னார்வலர்களுக்கான இணைய தொடர்பு இழை
https://stopcorona.xenovex.com/login
திராவிட வாசகர் வட்டம் நடத்தும்,

பேரறிஞர் அண்ணா நினைவு

சிறுவர் கதைப் போட்டி 2020



நோக்கங்கள்:

1) சிறுவர் கதைகள் வாசிப்பை ஊக்குவித்தல்.
2) புதிய எழுத்தாளர்களை இனங்காணுதல்.

போட்டி:

சிறுவர்களுக்கு ஆர்வமும் அறிவும் வளர்க்கும் வகையில் எந்த ஒரு பொருள் குறித்தும் கதை அமையலாம்.

கதைகளை எழுதி கிண்டில் புத்தகமாக வெளியிட வேண்டும்.

கதைகளில் கற்பனை / Fantasy கலந்து எழுதலாம். ஆனால், மூட நம்பிக்கை, புராணக் கதைகள், இட்டுக்கட்டிய போலி வரலாற்றுக் கதைகள், பாத்திரங்கள் சார்ந்து அமையக் கூடாது.

அறிவியல், வரலாறு, இலக்கியம், இயற்கை, நன்னெறிகள் (அன்பு, அறம், வீரம், சமூகநீதி, தன்மானம் முதலியவை) போன்றவற்றை அறிமுகப்படுத்தும் வகையில் கதைகள் அமையலாம். கதைகளைக் குழந்தைகளே விரும்பிப் படிக்கும் / கேட்கும் வகையில் எழுதுங்கள். வெறும் நீதி போதனையாக அமைய வேண்டாம்.



விதிகள் மற்றும் வழிகாட்டல்கள்:

* அனைத்து வயதினரும் பங்கேற்கலாம்.

* கிண்டில் நூல் ஒரே கதையாகவோ, பல சின்னஞ்சிறு கதைகளின் தொகுப்பாகவோ அமையலாம்.

* ஒருவர் எத்தனை கதை வேண்டுமானாலும் அனுப்பலாம்.

* கதை நல்ல தமிழ் நடையில் பிழையின்றி அமைய வேண்டும். கதையின் நடை 10 வயது சிறுவர்கள் தாங்களே படிக்க இயலும் வகையில் எளிமையாக இருக்க வேண்டும்.

* சொந்தமாக, புதிதாக எழுதிய கதையாக அமைய வேண்டும். ஏற்கனவே உள்ள கதைகளைத் தழுவியோ மொழிபெயர்த்தோ எழுதக் கூடாது.

* நீங்கள் ஏற்கனவே வேறு இடங்களில் எழுதிய கதைகளை அனுப்பலாம். பரிசுக்குத் தெரிவானால் அது உங்கள் கதை தான் என்று உறுதி செய்ய வேண்டி வரும்.

* கதையின் கற்பனை, எழுத்து நடைக்கு மட்டுமே மதிப்பெண். கதையின் அட்டைப்படம் / ஓவியம் / படங்களுக்கு மதிப்பெண் கிடையாது.

* கதைகளைக் கிண்டில் மின்னூலாக ஏப்ரல் 15, 2020க்குள் பதிவேற்ற வேண்டும்.

* ஒவ்வொரு கிண்டில் புத்தகத்திலும் #AnnaKidsStoryContest2020 என்ற குறிச்சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.

* கிண்டிலில் புத்தகம் வெளியிடுவது எப்படி என்ற வழிகாட்டுக்கு இந்தப் புத்தகத்தை வாங்கிப் படியுங்கள். உங்கள் கிண்டில் நூலை KDP Select என்னும் Kindle Unlimited சேவையில் கட்டாயம் இணைக்க வேண்டும். இதற்கான வழிகாட்டல் இந்தப் புத்தகத்தில் உண்டு.

* கிண்டிலில் பதிவேற்றப்பட்ட உங்கள் கதைக்கான link ஐ Dravidian Books என்ற Facebook பக்கத்தின் Inbox க்கு, உங்கள் பெயர் உள்ளிட்ட விவரங்களோடு அனுப்பி வைக்க வேண்டும். “Dravidian Books”, பக்கத்தின் இன்பாக்ஸுக்கு அனுப்பப்படும் link கள் மட்டுமே போட்டியில் கலந்துகொண்டதாக கருதப்படும்.

* நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

பரிசுகள்:

முதற் பரிசு – 10,000 INR , 2 கிராம் தங்க நாணயம், மற்றும் கணிப்பலகை (Tablet PC)

இரண்டாம் பரிசு – 5,000 INR மற்றும் 1 கிராம் தங்க நாணயம்

மூன்றாம் பரிசு – 2,000 INR மற்றும் அரை கிராம் தங்க நாணயம்.

ஐந்து சிறப்புப் பரிசுகள் – தலா 1,000 INR

இறுதிப் போட்டிக்குச் செல்லும் 25 பேருக்கு Periyarbooks.in வலைத்தளம் 500 ரூபாய் மதிப்பு மிக்க கூப்பன் அன்பளிப்பாக வழங்கும்.

* பரிசுத் தொகையை இந்திய ரூபாயில் இந்தியாவுக்குள் மட்டும் தான் அனுப்பி வைக்க முடியும்.

பெரியார் படம் பொறித்த இந்த தங்க நாணயங்களை Ingersal Selvam வழங்க இருக்கிறார்.

கணிப்பலகை பரிசாக வழங்குபவர் Neil Armstrong .

தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளை அருமையான படங்கள் சேர்த்து அச்சுப் புத்தக வடிவிலும் வெளியிட முனைவோம்.

முதற்கட்ட மதிப்பீட்டு முறை:

* மே 15, 2020 தேதி இந்திய நேரம் இரவு 11:59 வாக்கில் கிண்டிலில் குறைந்தது 10 கருத்துரைகளைப் பெறும் அனைத்து புத்தகங்களும் இறுதிப் போட்டிக்குச் செல்லும்.

* 25க்கு மேற்பட்ட/குறைவான நூல்கள் இவ்வாறு தெரிவானால், குழந்தைகளுக்கு ஆர்வம் ஊட்டக் கூடிய வகையில் உள்ளதா என்பதன் அடிப்படையில் பெற்றோர்/ஆசிரியர் அடங்கிய குழு ஒன்று 25 கதைகளை இறுதிப் போட்டிக்கு முடிவு செய்யும்.

* இந்த 25 போட்டியாளர்களில் கட்டாயம் 7 பெண்களாவது இடம் பெறுவர்.

இறுதி மதிப்பீட்டு முறை:

இறுதிப்போட்டிக்குத் தெரிவான 25 கதைகளில், முதல் மூன்று கதைகளை நடுவர் குழு தேர்ந்தெடுக்கும்.

குழந்தைகளுக்கு ஆர்வம் ஊட்டல், அறிவை மேம்படுத்தல் – இவை இரண்டும் பரிசுத் தகுதிக்கான முதன்மைக் காரணிகளாக எடுத்துக்கொள்ளப்படும். கதை வாசிக்க எளிமையாக இருக்கிறதா என்பதும் கவனிக்க வேண்டும்.

கதையின் பிற கூறுகளையும் மதிப்பீட்டு வரையறைக்குள் சேர்ப்பது நடுவர்களின் தனிப்பட்ட உரிமை.

மூன்றில் ஒரு பரிசு கட்டாயம் பெண்களுக்கு என்று ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மற்ற இரு பரிசுகள் திறந்த போட்டியாக அமையும்.

நடுவர்கள்:

* சிறார் எழுத்தாளர் திரு. விழியன் அவர்கள்
* கவிஞர் கனிமொழி MV அவர்கள்
* குழந்தைக் கவிஞர் திரு. புதுகை அப்துல்லா அவர்கள்

ஒருங்கிணைப்பாளர்: கபிலன் காமராஜ்

போட்டி ஏற்பாடு:

கொரோனாகிருமி ஒழிப்பில் இந்தியாவில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது.தமிழகத்தின் பெரும்பான்மையான மக்கள் வீட்டிற்குள் தனிமைப்படுத்திக்கொண்டு கொரோனாவின் காட்டுத்தீ பரவலைக் தடுக்கின்றனர்.இதோ ... இந்த மாநில வாரியான பட்டியல் உறுதிப்படுத்துகிறது...

மனித குலத்தை அச்சத்தில் உறைய வைத்திடும் கொரோன கிருமிக்கு எதிரான போருக்கு தன்னார்வலர்களுக்கு தமிழக அரசு அழைப்பு ...

தமிழ்நாட்டின் அத்தியாவசியப் பணிகள் இடையீடின்றி நடைபெற மூத்த இந்தியஆட்சிப்
பணி அலுவலர்களின் தலைமையில் ஏற்படுத்தப்பட்டுள ள குழுக்களின் விபரம் மற்றும் மாநில -மாவட்ட அவசர தொடர்பு எண்களின்  விபரம்:
தமிழக அரசு அறிவிப்பு

வெள்ளி, 27 மார்ச், 2020

உங்கள் குழந்தைகளில் ஒருவரோ,குடும்பத்தில் ஒருவரோ கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால்....
*தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி
போன்று ஆளும் கட்சியும்  கொரொனோ எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு நிதி அளித்திருப்பதால் ஆசிரியர் மன்றத்தின் வேண்டுகோள் ஏற்கப்பட்டிருக்கிறது.
*கொரோனா கிருமியின் அச்சக்காலத்தில் ஆசிரியர்-அரசூழியர்கள் மன உளைச்சல் இன்றி கொரோனா எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடும் வகையில் பழிவாங்கும் நடவடிக்கைகள் இரத்து செய்யப்பட வேண்டும் ! *ஜாக்டோ-ஜியோவின் அனைத்துக்கோரிக்கைகளும் ஏற்கப்படவேண்டும்! *கொரோனாகிருமி மனித குலத்திற்கு விடுக்கும் சவாலை எதிர்கொள்வோம்!*தமிழ்நாட்டின் ஆசிரியர்-அரசூழியர்-ஓய்வூதியர் ஒருநாள் ஊதியம் அளிப்போம்!
*தமிழ்நாடுதொடக் கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் பொதுச்செயலாளர் பாவலர்.திரு.க.மீ.,தமிழக அரசிடம் வேண்டுகோள்*

கொரோனா தடுப்பு நடவடிக்கை க்கு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்களது ஒரு நாள் ஊதியத்தை தமிழ்நாடு அரசுக்கு வழங்குவார்கள் - ஆசிரியர்மன்றம் பொதுச்செயலாளர் பாவலர் அய்யா திரு.மீனாட்சிசுந்தரம் அறிக்கை



ஜாக்டோ ஜியோ பத்திரிகை செய்தி நாள்:27.03.2020



ஆசிரியர்மன்றத்தின் பொதுச்செயலாளர் பாவலர்.திரு.க.மீ.,தமிழக அரசிடம் வேண்டுகோள்*

*தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி
போன்று ஆளும் கட்சியும்  கொரொனோ எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு நிதி அளித்திருப்பதால் ஆசிரியர் மன்றத்தின் வேண்டுகோள் ஏற்கப்பட்டிருக்கிறது.
*கொரோனா கிருமியின் அச்சக்காலத்தில் ஆசிரியர்-அரசூழியர்கள் மன உளைச்சல் இன்றி கொரோனா எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடும் வகையில் பழிவாங்கும் நடவடிக்கைகள் இரத்து செய்யப்பட வேண்டும் ! *ஜாக்டோ-ஜியோவின் அனைத்துக்கோரிக்கைகளும் ஏற்கப்படவேண்டும்! *கொரோனாகிருமி மனித குலத்திற்கு விடுக்கும் சவாலை எதிர்கொள்வோம்!*தமிழ்நாட்டின் ஆசிரியர்-அரசூழியர்-ஓய்வூதியர் ஒருநாள் ஊதியம் அளிப்போம்!
*தமிழ்நாடுதொடக் கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் பொதுச்செயலாளர் பாவலர்.திரு.க.மீ.,தமிழக அரசிடம் வேண்டுகோள்*
°சர்வதேசத்திற்கும்
சவாலான கொரோனா கிருமியை
ஒன்றுபட்டு முறியடிப்போம்!

° தமிழ்நாட்டின்
பொது நன்மைக்கு முப்பொழுதும் முன்நிற்போம்!

°தமிழக அரசின் பழிவாங்கல்,
பாராமுகம்,
பணிச்சுமை,
சொல்லொண்ணா  துன்ப-துயரம் ,
 இவைகளில் சிக்கித்தவிக்கும் ஆசிரியர்-அரசூழியர்கள் தாமாகவே முன்வந்து ஒரு நாள் ஊதியம் அளித்திடும் அறைகூவலை வரவேற்று
 முழுமனதுடன் ஏற்போம்!

*✳கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள துறைவாரியாக கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் நியமனம் செய்தல் சார்பான நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் செயல்முறைகள்.*