மே 11, வரலாற்றில் இன்று.
எல்லிஸ் ஆர் டங்கன் பிறந்த தினம் இன்று.
அமெரிக்க மண்ணிலிருந்து வந்து தமிழ் திரைத் துறையின் வரலாற்றில் தவிர்க்க முடியாத அடையாளம் எல்லிஸ் ஆர் டங்கன்.
நாடக மரபில் நகர்ந்து கொண்டிருந்த தமிழ் சினிமாவின் கதை சொல்லும் முறையில் புதுமையைப் புகுத்தியவர். கேமரா கோணம், ஒளியமைப்பு, குறியீட்டுக் காட்சிகள் எனப் பல அம்சங்களை அறிமுகப்படுத்தியவர்.
இவர் அறிமுகப்படுத்திய நெருக்கமான காதல் காட்சிகள் காவிய ரசம் ததும்புபவை. அந்தக் கால கட்டத்தில் ராஜா ராணிக்கதைகள் மட்டுமே எடுத்துக் கொண்டிருந்த போது, சமூகத்தில் அவல நிலைக்கு ஆளாக்கப்பட்ட "தாசிப்பெண்"ணையும் (கதை : பம்மல் சம்பந்த முதலியார்), புலவர், தாசியை உருகிக் காதலிக்கும் "காளமேக"த்தையும் (கதை : பாரதி தாசன்) திரைப்படங்களாக முன்வைத்தவர்.