திங்கள், 18 மே, 2020

மே 18, வரலாற்றில் இன்று.

1974ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி  காலை 8 மணிக்கு ஆசியாவிலேயே மிக முக்கியமான சம்பவம் ஒன்று நடந்தேறியது. இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சிறிய பாலைவனக் கிராமமான பொக்ரானில் இந்தியா தனது அணுகுண்டு ஒன்றை வெடித்துப் பரிசோதனை செய்தது.

அதன் சங்கேதப் பெயர் ‘ஆபரேஷன் புன்னகை புரியும் புத்தர்’ (Operation Smiling Buddha).

(இதை பொக்ரான்-I என்பார்கள். நாம் ஏற்கனவே எழுதிய, வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. அரசு செய்த ரகசிய அணுகுண்டு வெடிப்பு பரிசோதனையை இதனுடன் குழப்பிக் கொள்ளாதீர்கள். அது 1998இல் நடைபெற்றது. அது, ‘ஆபரேஷன் ஷக்தி’ என்ற சங்கேதப் பெயருடைய பொக்ரான்-II. இந்த அத்தியாயத்தில் நாம் குறிப்பிடும் பொக்ரான்-I, 1974இல் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது நடந்தது)

“சமாதானத்துக்கான அணுஆயுதம்” என்று இந்தக் குண்டுவெடிப்புப் பற்றி இந்தியா வர்ணித்து கொண்டது.

இந்தியாவின் அணுஆயுதப் பரிசோதனை எங்கே தாக்கத்தை ஏற்படுத்தியதோ இல்லையோ, மிக அதிகமான தாக்கத்தை இஸ்லாமாபாத்தில் ஏற்படுத்தியது.

அதுவரை பூட்டோவின் ‘இஸ்லாமிய அணுகுண்டு’ அல்லது ‘பாகிஸ்தானிய அணுகுண்டு’ பரிசோதனைகள் சுமாரான வேகத்தில்தான் சென்று கொண்டிருந்தன. திடீரென திட்டத்தின் வேகத்துக்கு டாப்-கியர் போடவேண்டிய அவசியத்தைப் பாகிஸ்தான் உணர்ந்து கொண்டது.