திங்கள், 18 மே, 2020

மே 18, வரலாற்றில் இன்று.

ஆலிவர் ஹெவிசைடு (18 மே 1850 – 3 பெப்ரவரி 1925) பிறந்த தினம் இன்று.

 ஹெவிசைடு தானே படித்தறிந்த ஆங்கில மின்பொறியாளர், கணிதவியலாளர், மற்றும் இயற்பியலாளர் ஆவார். இவர் மின்சுற்றுக்களை ஆய்வதற்கு சிக்கலெண்களை பயன்படுத்தியவரும், வகையீட்டுச் சமன்பாடுகளை தீர்க்க கணித நெறிமுறைகளைக் (இவை பின்னாள் இலப்பிளாசு மாற்றுக்களுக்கு இணையானவை) கண்டறிந்தவரும், மாக்சுவெல்லின் களச் சமன்பாடுகளை மின்சாரம், காந்தவியல் விசைகளையும் ஆற்றல் பாயத்தையும் கொண்டு சீரமைத்தவரும் தன்னிச்சையாக திசையன் பகுப்பாய்வை வடிவமைத்தவர்களில் ஒருவரும் ஆவார்.

 தனது வாழ்நாளின் பெரும்பகுதியும் அறிவியல் சமூகத்துடன் ஒப்பாது இருந்தபோதும் அறிவியல் மற்றும் கணிதத்தின் அணுகுமுறையில் பெரும் மாற்றத்தை உண்டாக்கியவர்.

 அயனி மண்டலத்தின் ஒருபகுதி இவரது பெயரையும் தாங்கியவண்ணம் எவிசைடு-கென்னலி அடுக்கு எனப் பெயரிடப்பட்டுள்ளது.