மே 19,
வரலாற்றில் இன்று.
ஹோ சி மின் பிறந்த தினம் இன்று.
ஹோ சி மின்
(மே 19, 1890 – செப்டம்பர் 2, 1969) வியட்நாமின் புரட்சித் தலைவராக இருந்தவர், பின்னர் வடக்கு வியட்நாமின் பிரதமராகவும் (1946–1955), அதிபராகவும் (1946–1969) இருந்தவர்.
ஹோ வியட் மின் விடுதலை இயக்கத்தை 1941 இலிருந்து முன்னின்று நடத்தி, 1954 இல் பிரெஞ்சுப் படையினருடன் சண்டையிட்டு வெற்றி பெற்றார். அவ்வெற்றி அவருக்கு கம்யூனிச நாடாக வடக்கு வியட்நாமை அமைக்க உதவியது. வியட்நாம் போரை அவரது இறப்பு வரையில் முன்னின்று நடத்தினார். ஆறு ஆண்டுகளின் பின்னர் வட வியட்நாமின் வெற்றியுடன் போர் முடிவுக்கு வந்ததுடன் இரண்டு வியட்நாம்களும் ஒன்றிணைந்தன. தெற்கு வியட்நாமின் தலைநகராயிருந்த சாய்கோன் (Saigon) நகரம் ஹோவின் நினைவாக ஹோ சி மின் நகரம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தை வீழ்த்தி வியட்நாமுக்கு கிடைத்த விடுதலையை அமெரிக்கா கம்யூனிச எதிர்ப்பு என சொல்லிக்கொண்டு உலகப்போரில் செலுத்திய குண்டுகளை விட அதிகம் செலுத்தி பறிக்க முயன்றது அமெரிக்கா. அப்பொழுது மக்களை வழிநடத்தி கொரில்லா போர் முறையால் நாட்டை வெற்றிப்பாதை நோக்கி அழைத்து சென்ற நிஜத்தலைவன் ஹோ சி மின்.
வியட்நாம் குட்டி தேசம் ; நெடுங்காலம் மன்னர் ஆட்சிக்கு உட்பட்டு இருந்த தேசம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பிரெஞ்சு அரசின் ஆதிக்கத்துக்கு உள்ளானது . உலகப்போர் சமயத்தில் நாஜிக்களின் பொம்மை அரசாங்கம் நாட்டை ஆண்டது ;பின் அங்கிருந்து ஆட்சி ஜப்பானுக்கு பாஸ் ஆனது .பிரான்ஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்க படைகளை அனுப்பியது . அங்கிள் ஹோ காட்டிய வழிகாட்டுதலில் தீர்க்கமாக மக்கள் போராடினார்கள் . கூடவே சோவியத் ரஷ்யாவின் உதவியும் சேர்ந்து கொண்டது . ஒன்பது ஆண்டுகளுக்கு பின் நாடு வடக்கு வியட்நாம்,தெற்கு வியட்நாம் என பிரித்து கொள்ளப்பட்டது.
அங்கிள் ஹோ என அழைக்கப்பட்ட ஹோ சி மின் பேசினாலே மக்கள் கண்ணீர் விட்டார்கள் ; அவரின் சிந்தனை மக்களை ஒன்றிணைந்த வியட்நாமை உருவாக்க வேண்டும் என்கிற எண்ணத்தை வார்த்து எடுத்தது . அமெரிக்கா யார் இவர் என்று பார்த்தது ; கம்யூனிஸ்ட் என்று தெரிந்தது .படைகளை அனுப்பிக்கொண்டே இருந்தது .எளிய மக்களின் வீடுகளில் போய் ஹோ சி மின் ஆதரவு திரட்டினார் ; கொரில்லா போர் முறையை பின்பற்றினார்கள் .
வருகிற எல்லா அமெரிக்க அதிபரும் போரை நிறுத்துவதாக அறிவித்து விட்டு தொடர்ந்து போர் செய்துகொண்டே இருந்தார்கள் . இரண்டாம் உலகப்போரில் போடப்பட்ட குண்டுகளை விட அதிக எண்ணிக்கையில் மக்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன . ஹோ சி மின் எங்கே போனார் என்றே தெரியவில்லை ,அவ்வப்பொழுது தோன்றுவார் ;
தொடர்ந்து ஊக்கப்படுத்திக்
கொண்டே இருந்தார்.