மே 19, வரலாற்றில் இன்று.
எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட் பிறந்த தினம் இன்று (1934).
ரஸ்கின் பாண்ட் (Ruskin Bond) பிரித்தானிய வம்சாவளியில் பிறந்த ஒரு இந்திய எழுத்தாளராவார். ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்கள் மற்றும் குழந்தைகளுக்கான எழுத்தாளர்கள் ஆகியோரிடையே ஒரு தனிப்பெரும் முன்னோடியாகக் கருதப்படுகின்றார்.
ரஸ்கின் பாண்ட் இமாச்சல பிரதேசத்தில் கசோலி என்ற இடத்தில் 1934 ம் ஆண்டு இதே நாளி்ல் பிறந்தார்.
அவருக்கு எல்லன் மற்றும் வில்லியம் பாண்ட் என்ற சகோதரியும் சகோதரரும் உண்டு.
ரஸ்கினுக்கு 8 வயதான போது, அவருடைய பெற்றோரிடையே மணமுறிவு ஏற்பட்டது. தந்தை நோய்வாய்பட்டு இறந்த பின்னர் ரஸ்கின் தன்னுடை பத்து வயதில் டெஹ்ராவில் உள்ள தன் பாட்டியிடம் சென்றுவிட்டார்.
தனது குழந்தைப் பருவத்தை இளைஞர் பருவத்தையும் சிம்லா, ஜாம்நகர், மசூரி, டெராடூன், மற்றும் லண்டன் ஆகிய ஊர்களில் கழித்ததால் அவரின் பெரும்பாலான படைப்புகள் இப்பகுதிகளை மையப்படுத்தி இருக்கும்.
அவருடைய பல படைப்புகள் இமயமலை அடிவாரத்தில் உள்ள மலை நகர வாழ்க்கையைப் பின்புலமாகக் கொண்டவை.
அவரின் முதல் புதினமான "த ரூம் ஆன் த ரூஃப்" ( The Room on The Roof) 17 வயதான போது எழுதப்பட்டு அவருக்கு 21 வயதாகும் போது பிரசுரிக்கப்பட்டது. அது டெஹ்ராவில் கூரை மீது உள்ள அறை ஒன்றில் அவருடைய நண்பர்களுடன் வாடகைக்குத் தங்கி இருந்த அனுபவங்கள் சிலவற்றின் அடிப்படையில் எழுதப்பட்ட புதினர். இப்புதினத்திற்காக அவருக்கு 1957 ஆம் ஆண்டுக்கான ஜான் லெவ்லின் ரைஸ் நினைவுப் பரிசைப் வழங்கப்பட்டது.
அவர் முன்னூற்றுக்கும் அதிகமான சிறு கதைகள், கட்டுகரைகள், புதினங்களும், குழந்தைகளுக்கான 30 நூல்களும் எழுதியுள்ளார்.
அவர் "த ஆங்ரி ரிவர்" (The Angry River) "த ப்ளூ அம்ரல்லா" (The Blue Umbrella) உள்ளிட்ட புத்தகங்களால்
குழந்தைகளுக்கான எழுத்தாளர்கள் பட்டியலில் முன்னிலை வகிக்கிறார்.அவரின் The Cherry Tree உள்ளிட்ட சிறுகதைகள் தமிழக அரசின் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
தனது சுயசரிதையினை இரு பாகங்களாக வெளியிட்டுள்ளார் - ”சீன்ஸ் பிரம் எ ரைட்டர்ஸ் லைஃப்”( Scenes from a Writer's Life) என்ற பாகத்தில் ஆங்கிலேய-இந்தியாவில் அவர் வளர்ந்த பருவ வருடங்கள் பற்றி விவரிக்கிறார்.
" த லாம்ப் இஸ் லிட்” ( The Lamp is Lit ) என்ற பாகத்தில் இதழ்களில் வெளியான அவருடைய கட்டுரைகள் மற்றும் தொடர்களைத் தொகுத்துள்ளார்.
1992இல் ”அவர் ட்ரீஸ் ஸ்டில் குரோ இன் டெஹ்ரா” (Our trees still grow in Tehra) என்ற சிறுகதை தொகுப்புக்காக இந்திய சாகித்திய காதமியின் சாகித்ய அகாடமி விருது பெற்றார். 1999 இல் குழந்தைகள் இலக்கியத்திற்கு இவரது பங்களிப்புகளுக்காக இந்திய அரசின் பத்மஸ்ரீ் விருது இவருக்கு வழங்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.
தற்போது தனது குடும்பத்துடன் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள முசோரியில் வாழ்ந்து வருகிறார்.