மே 21,
வரலாற்றில் இன்று.
கிரேக்கத் தத்துவவியலாளர் பிளாட்டோ பிறந்த தினம் இன்று(கி.மு.427).
பிளேட்டோ (Plato, கிமு 427 - கிமு 347 ) பெரும் செல்வாக்குள்ள கிரேக்கத் தத்துவஞானியாவார். இவர் சாக்ரட்டீசின் சீடர், அரிஸ்டாட்டிலின் குரு. பிளாட்டோ தலைசிறந்த கிரேக்க தத்துவஞானி, கணிதவியல் அறிஞராவார். சாக்ரடீஸின் மாணவரான இவர் தத்துவ தர்க்கங்களை எழுதியுள்ளார். இவர் மேற்கு உலகின் முதல் கல்விக் கூடமாக ஏதென்ஸ் நகரில் அகாடமியை நிறுவினார். இவர் சாக்ரடீஸ் மற்றும் தனது மாணவர் அரிஸ்டாட்டிலின் உடன் இணைந்து மேற்குலகின் தத்துவம் மற்றும் அறிவியலுக்கான அடிக்கல்லை நாட்டினார்.
பிளாட்டோவின் இயற்பெயர் அரிஸ்டோக்கிளீஸ். அவரே விரும்பி தனது புனை பெயராக பிளாட்டோ என வைத்துக்கொண்டார் .
"பிளாட்டோ' என்றால் பரந்த, விரிந்த என்று பொருள்படும். இச்சொல்லில் இருந்து தான் Flat எனும் ஆங்கில சொல் வந்தது.
பெயருக்கு ஏற்ப பரந்த சிந்தனைக்கு சொந்தக்காரர் அவர் .
ஒரு அரசு எப்படி இருக்க வேண்டும்.
அது எப்படி ஆள வேண்டும் என தனது அனுபவங்கள், எண்ணங்களை வைத்து பிளேட்டோ எழுதிய உலகப் புகழ்பெற்ற நூல் தான் "The Republic".
சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பே சிந்தித்து எழுதப்பட்ட நூல்தான் அது.