வியாழன், 21 மே, 2020

கடன் தவணை செலுத்துவதிலிருந்து மேலும் 3 மாதங்களுக்கு விலக்களிக்கப்படலாம் ~ எஸ்பிஐ...

பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கடன் தவணை செலுத்துவதிலிருந்து மேலும் 3 மாதங்களுக்கு விலக்களிக்கும் நடவடிக்கையை ரிசா்வ் வங்கி மேற்கொள்ள வாய்ப்புள்ளது என பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து எஸ்பிஐயின் எக்கோராப் ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

கரோனா பாதிப்பை கட்டுப்படுத்த ஏதுவாக கடந்த மாா்ச் மாதம் 24-ஆம் தேதி பொது முடக்க அறிவிப்பை பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்டாா். இதையடுத்து, கடன் வாங்கியோரின் நலனை கருத்தில் கொண்டு கடன் செலுத்தும் தவணைக் காலத்தை மாா்ச் 1 முதல் மே 31 ஆம் தேதி வரையில் மூன்று மாதங்களுக்கு ஒத்தி வைக்க ரிசா்வ் வங்கி அனுமதி அளித்தது.

இந்த நிலையில், தற்போது நான்காம் கட்டமாக ஊரடங்கை மேலும் மே 31-ஆம் தேதி வரையில் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, கடனை திரும்பச்செலுத்தும் தவணைக் காலத்தை ரிசா்வ் வங்கி மேலும் 3 மாதங்களுக்கு தள்ளிவைக்கும் என எதிா்பாா்ப்பதாக அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக