பள்ளிகள் கட்டண வசூலுக்கு க்ரீன் சிக்னல்!
பத்தாம் வகுப்புத் தேர்வு நடக்கவில்லை; ப்ளஸ் டூ ரிசல்ட் வரவில்லை; புதிய அட்மிஷனும் போட முடியாது; இருக்கிற மாணவர்களிடம் கட்டணமும் கேட்க முடியாது என்கிற நிலையில் கல்வித் துறையின் முக்கியப் புள்ளியிடமும் கோட்டை நிர்வாகியிடமும் தனியார் பள்ளி நிர்வாகிகள் சந்தித்து தங்கள் குறைகளைக் கொட்டியிருக்கிறார்கள். கூடவே ஒரு பள்ளிக்கு இவ்வளவு எனச் சொல்லி `படியளந்தும்’ விட்டார்களாம்.
இதனால், `ஆன்லைன் மூலம் பள்ளிகள் அட்மிஷன் போட்டுக்கொள்ளலாம். படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களிடம் இந்தாண்டுக்கான கட்டணத்தை வசூல் செய்யலாம்’ என்று உத்தரவு வரப்போகிறதாம். கொரோனா தடுப்புப் பணியில் தமிழக அரசின் செயல்பாட்டைப் பாராட்டி தனியார் பள்ளிகள் சார்பில் பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிடவும் திட்டமிட்டிருக்கிறார்களாம்.
எப்படியெல்லாம் சம்பாதிப்பது என்பதைச் சொல்லிக்கொடுப்பதற்கு இவர்களே ஒரு பள்ளிக்கூடம் திறக்கலாமே என்று சத்தமின்றிச் சிரிக்கிறார்கள் பள்ளி நிர்வாகிகள்.
-கழுகார், ஜூனியர் விகடன்