புதன், 10 ஜூன், 2020

🌐ஜூன் 10,வரலாற்றில் இன்று:மாவீரன் அலெக்சாண்டர் நினைவு தினம் இன்று.

ஜூன் 10,
வரலாற்றில் இன்று.

மாவீரன் அலெக்சாண்டர் நினைவு தினம் இன்று.

மாஸிடோனியா மாவீரன் அலெக்சாண்டர்!
(Alexander the Great)

தோற்றம் : கி.மு 20 ஜூலை 356
மறைவு : கி.மு 10 ஜூன் 323 (33 வயது)
அப்பா : பிலிப்ஸ்
ஆசிரியர் : அரிஸ்டாடில்
குதிரை : ஃபுஸிபேலஸ்

மன்னன் பிலிப்ஸ் கொலை செய்யப்பட்ட பிறகு தனது 20 ஆவது வயதில் அரியனை ஏறினார் அலெக்ஸாண்டர். அடுத்த 13 ஆண்டுகளில் துருக்கி, எகிப்து, ரஷ்யா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என்று பல நாடுகளை தன் காலடியில் கொண்டு வந்தார். அவரின் கடைசி ஆண்டுகளில் அவரது கவனம் இந்தியாவின் பக்கம் திரும்பியது. இந்து சமவெளியை கடந்து பஞ்சாப் மன்னன் ஃபோரஷை கடுமையான போருக்குப்பின் முறியடித்தார் அலெக்ஸாண்டர்.

பின்னர் ஃபோரஷிடம் உங்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்று அலெக்ஸாண்டர் கேட்க ஒரு மன்னனைப்போல் நடத்த வேண்டும் என்று ஃபோரஷ் கூறினார். உடனே தான் கைப்பற்றிய தேசத்தை அவரிடமே ஒப்படைத்து அதனை மாஸிடோனியாவின் பாதுகாப்பு உட்பட்ட தேசமாக அறிவித்தார் நன்னெஞ்சம் கொண்ட அலெக்ஸாண்டர்.

பல நாடுகளை வென்ற அலெக்சாண்டர் தன் நாடு திரும்புகையில் கடும் நோய்வாய்ப்பட்டார். மருத்துவர்களும் கைவிரித்துவிட்டனர். மரணம் நெருங்கிக் கொண்டிருப்பதை அறிந்த அலெக்சாண்டர் தம் படைத் தலைவர்களை அழைத்து, "நான் இறந்தவுடன், திறந்து இருக்கும் எனது கைகள் வெளியே தெரியுமாறு சவப்பெட்டி செய்யுங்கள் என்றார். எல்லோரும் என்னை அந்தக் கோலத்தில் பார்த்தபிறகு அடக்கம் செய்யுங்கள்" என்றார். வியப்படைந்த படைத்தலைவர்களில் ஒருவர், "அரசே... எதற்காக இப்படி செய்யச் சொல்கிறீர்கள்?"என்று கேட்டார். அதற்கு அலெக்சாண்டர், "உலகையே வென்ற பேரரசனாகிய அலெக்சாண்டர், வெறுங்கையுடன்தான் மேலுலகம் சென்றுள்ளான் என்பதை மக்கள் உணர்வதற்காகத்தான்" என்று பதில் சொன்னார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக