☀பரமத்தி ஒன்றியச் செற்குழுக்கூட்ட முடிவுகள் நாள் :15.06.2020 -ன்படி மூன்று அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஏழுகட்ட தொடர் நடவடிக்கைகளின் முதல் நடவடிக்கையாக இன்று 17.06.2020 பிற்பகல் 3.30 மணியளவில் பரமத்தி உதவி சார்நிலைக் கருவூல அலுவலர் அவர்களை பரமத்தி சார்நிலைக் கருவூல அலுவலகத்தில் சந்திக்கப்பட்டது.
இச்சந்திப்பில் ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் வீ.மாலதி,ஒன்றியப் பொருளாளர் கு.பத்மாவதி ,ஒன்றியச் செயலாளர் க.சேகர்,மாவட்டச் செயலாளர் திரு.மெ.சங்கர் ஆகியோர் பங்கேற்றனர்.
பரமத்தி ஒன்றியத்தில் அரசாணை 37 ஐக் காரணம் காட்டி ஊக்க ஊதிய உயர்வு முன்தணிக்கை செய்யப்பட்டதை மறுபரிசீலனை செய்து ஊக்க ஊதியம் அரசாணை 42 - ன் படி அனுமதிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது.
ஊக்க ஊதிய உயர்வு அரசு விதிப்படி உரிய அரசாணையின் படி ஆவன செய்யப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.
க.சேகர்.
ஒன்றியச் செயலாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக