வெள்ளி, 19 ஜூன், 2020

*🌐ஜூன் 19, வரலாற்றில் இன்று:ஆங் சான் சூகி பிறந்த தினம் இன்று.*

ஜூன் 19, வரலாற்றில் இன்று.

ஆங் சான் சூகி பிறந்த தினம் இன்று.

மக்கள் ஆட்சியே வேண்டும் என்று ஆயுதம் ஏந்தாமல் இன்றும் அகிம்சை வழியில் போராடிக் கொண்டிருப்பவர் ஆங் சான் சூகி. 1991-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றவர். ஜனநாயகம் வேண்டும் என்று கேட்டதற்காகவே இன்றைக்கும் வீட்டு காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.

1945-ம் ஆண்டு ஜூன் 19 அன்று பர்மாவில் பிறந்தார் ஆங் சான் சூகி. அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியில் பிரதம அமைச்சராக இருந்த அவருடைய தந்தை ஆங் சான், 1947-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார்.

ஆங் சான் சூகி 1964-ல் லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் பயின்றார் . அங்கு, 1972-ல், பூட்டான் ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த மைகேல் ஏரிஸ் என்ற அறிஞரைச் சந்தித்தார். பிறகு, அவரையே திருமணமும் செய்துக் கொண்டார்.

2009-ம் ஆண்டு ஆங் சான் சூகியை வீட்டுச் சிறையில் இருந்து விடுவிக்கும் முன்னர், நாட்டுக்கு விரோதமான ஒருவரை வீட்டில் இரண்டு நாட்கள் தங்க வைத்ததற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 18 மாதங்கள் சிறையில் இருந்த அவர், விடுதலைக்குப் பிறகு மீண்டும் வீட்டிலேயே அடைக்கப்பட்டார்.

ஆங் சான் சூகி தனது 21 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் 15 ஆண்டுகளை வீட்டுக்காவலில்தான் கழித்தார். 2010-ம் ஆண்டு ராணுவ ஆட்சியாளர்களால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தேர்தலில் அவரது கட்சி 81% பெரும்பான்மையைப் பெற்றிருந்தது. ஆனாலும், ராணுவ ஆட்சியாளர்கள் அவரது கட்சியினை ஆட்சிப் பீடத்தில் ஏறவிடாது தடுத்தது. அதோடு, ஆங்சான் சூச்சி வெளிநாட்டுக்காரரை மணம் செய்ததால்  அவருக்கு அரசியலில் ஈடுபட தகுதி இல்லை என்றும் அறிவித்தது.

2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மாநில ஆலோசகராக அந்நாட்டின் பெரும்புள்ளிகள் அவரை அனுமத்தித்தனர். அப்போது அவர் ஆற்றிய உரை மிகவும் முக்கியமானதாக இருந்தது. அவருடைய நோக்கங்கள் அனைத்தும் குறிப்பிடப்பட்டிருந்தது.  அமைதியாகவே போராடும் ஆங் சான் சூகி  கடைசி வரை  தன் கொள்கைகளைக் கடைப்பிடிக்க தவற‌ மாட்டார் என்பதும் தெளிவாகியது.

அவரிடம் இருந்து நாம் கற்றுக் கோள்ள வேண்டிய முக்கியமான ஒன்று - அமைதி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக