செவ்வாய், 23 ஜூன், 2020

*🌐ஜூன் 23, வரலாற்றில் இன்று:வெள்ளுடை வேந்தர் சர் பி. தியாகராய செட்டி என்னும் பிட்டி தியாகராயர் நினைவு தினம் இன்று.*

ஜூன் 23,  வரலாற்றில் இன்று.

வெள்ளுடை வேந்தர் சர் பி. தியாகராய செட்டி என்னும் பிட்டி தியாகராயர் நினைவு தினம் இன்று.

 தியாகராயர்( ஏப்ரல் 27, 1852 - ஜூன் 23, 1925 ) நீதிக்கட்சியின் நிறுவனர்களுள் ஒருவராவார். திராவிட இயக்கத்தில் மூத்த தலைவர்களில் ஒருவராகப் போற்றப்படுபவர். இருபதாம் நூற்றாண்டின் முதல் காற்பகுதியில் சென்னை மாகாணத்தின் முக்கிய அரசியல் தலைவராக விளங்கிய இவர் தொழிலதிபராகவும் பெயர் பெற்றிருந்தார்.

1916 இல் பிராமணரல்லாத சாதியினரின் நலனுக்காக குரல் கொடுக்க டாக்டர் டி. எம். நாயருடன் சேர்ந்து நீதிக்கட்சியைத் தொடங்கினார்.

 சென்னை சட்டமன்றத்துக்கு முதன் முதலாக 1920இல் நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி வெற்றிபெற்று, முதலமைச்சராகும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. ஆனால் அதனை ஏற்காமல் கட்சித்தலைவராகவே நீடித்தார். இவர் நீதிக்கட்சியின் தலைவராக இருந்த காலத்தில் அக்கட்சியின் சுப்பராயலு ரெட்டியார், பனகல் அரசர் ஆகியோர் சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்தனர்.

1925 இல் இவர் இறந்த போது இவரது நினைவாக சென்னை நகரில் புதிதாக உருவாக்கப்பட்ட தியாகராய நகருக்கு (டி. நகர்) இவரது பெயர் சூட்டப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக