ஜூன் 23, வரலாற்றில் இன்று.
ஒலிம்பிக் தினம் இன்று.
விளையாட்டு போட்டிகளின் சிகரம். பண்டைய கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதன்சில் நடத்தப்பட்டு வந்த இந்த போட்டி, 1894 ஜூன் 23ம் தேதி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உருவாக்கப்பட்ட பின்னர் தான் நவீன ஒலிம்பிக்காக பரிணாம வளர்ச்சி பெற்றது.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கல்வியாளரும் வரலாற்று ஆர்வலருமான பியரி டி கூபர்டின், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியை நிறுவிய தினமே தற்போது உலக ஒலிம்பிக் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1948ல் தான் முதலாவது ஒலிம்பிக் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
பல்வேறு நாடுகளை சேர்ந்த தேசிய ஒலிம்பிக் கமிட்டிகள் இணைந்து உலக ஒலிம்பிக் தின கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்தன. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, நூற்றுக்கணக்கான நாடுகளில் இந்த தினத்தையொட்டி ஒலிம்பிக் ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஒலிம்பிக் போட்டி பற்றி இளைஞர்களிடம் விழிப்புனர்வு உண்டாக்குவதே இதன் நோக்கம். விளையாட்டு மட்டுமல்லாது இசை, நடனம் இணைந்த கலாசார திருவிழாவாகவும் ஒலிம்பிக் தினம் அமைந்துள்ளது.
இதில் பங்கேற்கும் நட்சத்திர வீரர், வீராங்கனைகள் சிறுவர், சிறுமியரை சந்தித்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்வதுடன் தக்க ஆலோசனைகள் வழங்கி விளையாட்டுத் துறையில் உற்சாகமாக ஈடுபட ஊக்குவிப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒலிம்பிக் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக