புதன், 15 ஜூலை, 2020

*✈️ஜூலை 15, வரலாற்றில் இன்று:போயிங் விமான நிறுவனம் தொடங்கப்பட்ட தினம் இன்று.*

ஜூலை 15, வரலாற்றில் இன்று.

போயிங் விமான நிறுவனம் தொடங்கப்பட்ட தினம் இன்று.

போயிங் நிறுவனம் ஜூலை 15, 1916-ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள சியாட்டில் வில்லியம் எட்வர்ட் போயிங் என்பவரால் 'பசிபிக் ஏரோ புராடக்ட்ஸ் கோ' என்ற பெயரில் துவங்கப்பட்டது. ஐக்கிய அமெரிக்காவின் கடற்படையை சார்ந்த ஜார்ஜ் கோனார்ட் என்பவரின் தொழில்நுட்ப உதவியுடன் வளர்ந்த இந்நிறுவனத்தின் தொடக்ககால வானூர்திகள் கடல் வானூர்திகளே. 1917-ம் ஆண்டு மே மாதம் 'போயிங் வானூர்தி நிறுவனம்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

யேல் பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்த வில்லியம் போயிங், மர தச்சு வேலையில் வல்லுனர் ஆனார்.

1927-ம் ஆண்டு போயிங் நிறுவனம் போயிங் வான் போக்குவரத்து கழகம் என்ற கிளை நிறுவனத்தை தொடங்கியது. பின் இக்கிளை பசிபிக் வான் போக்குவரத்து மற்றும் போயிங் வானூர்தி நிறுவனம் ஆகிய நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டது. இந்நிறுவனமே பின் யுனைடட் வானூர்தி நிறுவனம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

போயிங் நிறுவனத்தின் புகழ்பெற்ற பயணிகள் விமானமான 'போயிங் 247' 1933-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்விமானம் நவின பயணிகள் வானூர்திகளின் முதல் வடிவாக பார்க்கப்படுகிறது. இரண்டு என்ஜீன பொருத்தப்பட்ட இவ்வானூர்தி அக்காலகட்டத்தில் வேகமான விமானமாகவும், பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கியதாகவும், ஒரு இயந்திரத்தில் பறக்கும் வல்லமை பெற்றதாகவும் விளங்கியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக