வியாழன், 23 ஜூலை, 2020

ஜூலை 23, வரலாற்றில் இன்று.பால கங்காதர திலகர் பிறந்த தினம் இன்று

ஜூலை 23,
வரலாற்றில் இன்று.

பால கங்காதர திலகர் பிறந்த தினம் இன்று

👓 இந்தியத் தேசியவாதி மற்றும் விடுதலைப் போராட்ட வீரருமான பால கங்காதர திலகர் 1856 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்தார். இந்திய விடுதலை இயக்கத்தின் முதல் மக்கள் ஆதரவு பெற்ற தலைவரும் இவரே ஆவார். முதன் முதலில் மக்களிடையே சுதந்திரம் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவர் ஆவார். இவர் திலக் மகராஜ் என்றும் அழைக்கப்பட்டார்.

👓 திலகரின் தலைமையில் உருவான தேசப்பற்றாளர்கள், தீவிர கருத்துடையவர்களாக அந்நிய ஆட்சியை எதிர்த்து தீவிரமாக செயல்பட்டனர்.
இதனால், 1906 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற திலகர், சிறையில் 'கீதா ரகசியம்" என்ற நூலை எழுதினார்.

இந்தியா விடுதலை பெற வேண்டும் என போராடிய பால கங்காதர திலகர் அவர்கள், ஆகஸ்ட் 1ஆம் தேதி 1920 ஆம் ஆண்டு தன்னுடைய 64ஆவது வயதில் காலமானார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக