சனி, 4 ஜூலை, 2020

*🌐ஜூலை 4, வரலாற்றில் இன்று:மேரி கியூரி நினைவு தினம் இன்று.*

ஜூலை 4, வரலாற்றில் இன்று.

மேரி கியூரி நினைவு தினம் இன்று

உலகின் நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி.
(இரண்டு வெல்வேறு துறையில் நோபல் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது )
இவர் தனது கணவருடன் சேர்ந்து கண்டு பிடித்த ஒரு தனிமம் யூரேனியத்தை விட 300 மடங்கு கதிர் வீச்சு கொண்டது.
அதற்கு தனது  நாட்டின் நினைவாக பொலேனியம் என்ற பெயர் வைத்தார்.
இவர் கதிர் வீச்சு பொருட்களுடன் ஆய்வு செய்யும் போது கதிர் வீச்சு தன்னை ஊடுறுவது அறிந்தே இருந்தார். ஆனால் பின்னாளில் உலகுக்கே பயன்படப் போகும் கண்டு பிடிப்பு என்பதால் தன்னை பற்றி கண்டு கொள்ள வில்லை. அந்த கதிர் வீச்சு தாக்கத்தால் தான் இறந்தும் போனார்.
ஆனால் அவர் கண்டு பிடித்த ரேடியம் பல லட்ச கணக்கான மக்களில் புற்றுநோயை குணப்படுத்தி பல உயிரை காப்பாற்றியது.
போரில் காயம் பட்டவர்கள் புண்ணை ஆற்றியது.

அறிவியலை காசாக்கி கார்ப்பரேட்டுக்கு நல்ல ரேட்டுக்கு விற்கும் விஞ்ஞானி அல்ல மேரி கியூரி.

தனது அற்புத கண்டுபிடிப்புக்கு கடைசிவரை அவர் உரிமத்தை பெறவே இல்லை  (ஆனால் இவர் கண்டுபிடிப்பை வைத்து பலர் கோடீஸ்வரர் ஆனது வேறு விஷயம் )

அறிவியலை உயிர் போல நேசித்து அறிவியலையே வாழ்க்கை ஆக்கி கொண்டு அறிவியலை மனித குல நன்மைக்கு பயன்படுத்திய மிக சொற்ப விஞ்ஞானிகளில் ஒருவர் தான் மதிப்பிற்குரிய மேரி கியூரி அம்மையார்
இன்று அவர் நினைவு தினம்.
அவர் நினைவைப் போற்றுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக