ஜூலை 9, வரலாற்றில் இன்று.
நீதிக்கட்சியின் தலைவர்களுள் ஒருவரும், சென்னை மாகாணத்தின் இரண்டாவது
முதலமைச்சருமான, "பனகல் அரசர்" பனங்கன்டி ராமராய நிங்கார் பிறந்த தினம் இன்று(1866).
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிராமண ஆதிக்கம் உச்சத்தில் இருந்த சமயத்தில் இந்தியா முழுக்க கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் சமஸ்கிருதம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்ற சட்டமிருந்தது.
1921ல் நீதி கட்சியின் முதலமைச்சராக இருந்த பனகல் அரசர் சென்னை பல்கலைகழகத்தில் மசோதா கொண்டு வந்து இந்த சட்டத்தை நீக்கினார்.
கோயில் சொத்துக்களை ஒரு சிலரே அனுபவித்து வருவதைத் தடுக்கும் வகையில்,
கோயில் என்பது அனைத்து சமூகத்தினருக்கும் பொதுவானது என்று, கோயில்களுக்கென தனி துறையை, பல தரப்பினரின் எதிர்ப்புகளை சமாளித்து உருவாக்கினார். அதுதான் "இந்து அறநிலையத்துறை"
மருத்துவப் படிப்பு படிக்க வேண்டுமானால் சமஸ்கிருதம் கட்டாயமாக கற்றிருக்க வேண்டும் என்ற சட்டம் இருந்தது. அந்த நிலையில்தான், "மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் தேவையில்லை" என உத்தரவிட்டு, அனைத்து சமூகத்தவரும் டாக்டராகும் வாய்ப்பை உருவாக்கி வைத்தார்.
கிராமப்புறம் உள்பட பல இடங்களிலும் சித்த மருத்துவ சிகிச்சை கிடைக்க வழிவகை செய்தார்.
தொழில்துறையை ஊக்குவிக்கவும் சட்டத்தைக் கொண்டுவந்ததுடன், வகுப்புவாரி இடஒதுக்கீட்டிற்கான முயற்சிகளை முன்னெடுத்தார்.
இவரது நினைவாக சென்னை தி.நகரின் மையப்பகுதியில் உள்ள பூங்கா "பனகல் பூங்கா" என்றும், சைதாப்பேட்டை
யிலுள்ள மாவட்ட வருவாய்த்துறை அலுவலகம் "பனகல் மாளிகை" என்றும் அழைக்கப்படுகின்றன.
திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளை தனக்குக் கிடைத்த குறைந்த அதிகாரம் கொண்ட ஆட்சியின் மூலம் நிறைவேற்றிக் காட்டியவரை தமிழர்கள் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக