செவ்வாய், 22 செப்டம்பர், 2020

NHIS புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள ஆசிரியர்/அரசுப் பணியாளர் அல்லது அவர்களின் குடும்பத்தினர்களுக்கான சிகிச்சைக்கான தொகை ஒதுக்கீடு -அரசாணை:

 NHIS ல் கொரொனா ஒதுக்கீடு:

NHIS புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள ஆசிரியர்/அரசுப் பணியாளர் அல்லது அவர்களின் குடும்பத்தினர்களுக்கான சிகிச்சைக்கான தொகை ஒதுக்கீடு -அரசாணை:



மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள ஆசிரியர்/அரசுப் பணியாளர் அல்லது அவர்களின் குடும்பத்தினர்களை  மருத்துவமனையில் சேர்க்கப்படும்பொழுது வெண்டிலேசன் சிகிச்சையில் இருப்பவர்களுக்கு தினந்தோறும் ₹ 8500 ம்,வெண்டிலேசன் அற்ற சிகிச்சைக்கு தினந்தோறும் ₹ 6500 ம் அரசாணை 280 ன் படி தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிகிச்சையில் இருக்கும் நாட்களுக்கு இவ்வசதியை ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் குடும்பத்தினர் பயன்படுத்திக் கொள்ளவும்.



கொரோனா நோய்க்கான விடுப்பு.


ஆசிரியர்/அரசு ஊழியர்கள் அல்லது அவர்களின் குடும்பத்தினர்கள் கொரோனா தொற்று ஏற்பட்டால் ஆசிரியர்/அரசு ஊழியர்களுக்கு 14 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கப்படும்.இதற்கான மருத்துவ சான்றிதழ் ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஒதுக்கப்பட்டுள்ள சுகாதார மையத்தால் வழங்கப்படும்.


சுகாதாரப் பணியாளர்களால் (Health Inspector)சார்புடைய ஆசிரியர்கள் அல்லது அரசு ஊழியர்களுக்கு மருத்துவச் சான்றினை அளிப்பார்.அச்சான்றினை இணைத்து 14 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பினை சார்புடைய அலுவலருக்கு விண்ணப்பித்து விடுப்பினைப் பெறலாம்..


👇👇👇👇👇👇👇👇👇👇👇


CLICK HERE TO OPEN

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக