புதன், 31 மார்ச், 2021
திங்கள், 29 மார்ச், 2021
உங்கள் PAN, ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா? ஒரு கிளிக் செய்து சரிபார்த்துக் கொள்ளுங்கள்!
உங்கள் PAN, ஆதாருடன் இணைக்க வரும் மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைவதால், கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்து அதில் உங்களது ஆதார் மற்றும் பான் எண்ணை உள்ளீடு செய்து சரிபார்த்துக் கொள்ளுங்கள்...
ஞாயிறு, 28 மார்ச், 2021
எருமப்பட்டி ஒன்றிய சிக்கன நாணயச் சங்கத்தில் நிதி குளறுபடி !நாமக்கல் சரக கூட்டுறவுத் துணைப்பதிவாளர் விசாரணை!
எருமப்பட்டி ஒன்றிய சிக்கன நாணயச் சங்கத்தில் நிதி குளறுபடி !
நாமக்கல் சரக கூட்டுறவுத் துணைப்பதிவாளர் விசாரணை!
எருமப்பட்டி ஒன்றிய சிக்கன நாணயச் சங்கச் செயலாளர் தற்காலிக பணிநீக்கம் !காலம் கடந்த நடவடிக்கை என்றாலும் வரவேற்புக்குரியதாகும் !தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ஏழு கட்டத்தொடர் நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்து வெற்றிபெறச் செய்துள்ள அனைவருக்கும் பெரும் நன்றி!
எருமப்பட்டி ஒன்றிய சிக்கன நாணயச் சங்கச் செயலாளர் தற்காலிக பணிநீக்கம் !
காலம் கடந்த நடவடிக்கை என்றாலும் வரவேற்புக்குரியதாகும் !
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ஏழு கட்டத்தொடர் நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்து வெற்றிபெறச் செய்துள்ள அனைவருக்கும் பெரும் நன்றி!
********************************************
அன்பானவர்களே!வணக்கம்.
எஸ்.எண்.241,எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன நாணயச்சங்கத்தினை ,
சங்கச்செயலாளர் திருமதி.கே.ராணி என்பாரிடம் இருந்து மீட்டெடுக்கவும்,சிக்கன நாணயச் சங்க உறுப்பினர்களை பாதுகாக்கவும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டக்கிளை கடந்த 06.03.2021 அன்று ஏழு கட்டத்தொடர்நடவடிக்கைகளை அறிவித்தது.
முதல்கட்ட நடவடிக்கையாக 10.03.2021அன்று கோரிக்கை மனு இயக்கமும்,இரண்டாம் கட்ட நடவடிக்கையாக 17.03.2021அன்று சுவரொட்டி இயக்கமும் நடைபெற்றது.
மூன்றாம் கட்டமாக எதிர்வரும் 29.03.2021 அன்று எருமப்பட்டி சிக்கனநாணயச்சங்க அலுவலகத்தில் " காத்திருப்புப்போராட்டம் " மேற்கொள்ளப்பட இருப்பதைத் தெரிவித்து கடந்த 24.03.2021் அன்று மதிப்புமிகு.நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்கள் உள்ளிட்டு கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கு விண்ணப்பம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் ,கடந்த 26.03.2021 அன்று எருமப்பட்டி காவல்நிலைய அலுவலர் திரு.இரவி அவர்கள் மாநிலச்செயலாளர் முருகசெல்வராசனிடம் அலைபேசியில் அழைத்துப்பேசி போராட்ட விபரங்களை அறிந்துக்கொண்டார்.
கூட்டுறவுத்துறை உயர் ,கள அலுவலர்களிடம் ஒரு முறைக்கு நான்கு முறை கலந்துப்பேசி எதிர்வரும் 29.03.2021 அன்று எருமப்பட்டி சிக்கன நாணயச்சங்க அலுவலகத்தில் காவல்துறை அலுவலர்களின் முன்னிலையில் கூட்டுறவுத்துறையின் கள அலுவலர் அவர்களுடன் 29.03.20121அன்று பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது எனக்கூறி பேச்சுவார்த்தைக்கு வருமாறு காவல் அலுவலர் திரு.இரவி அவர்கள் அழைப்புத்தந்தார்.
எருமப்பட்டி காவல்துறையின் நடவடிக்கைகள் இவ்வாறு இருக்கையில்,
இதே நாளில்
நாமக்கல் சரக கூட்டுறவுத்துணைப்
பதிவாளர் அவர்கள் மாவட்டச்செயலாளர் மெ.சங்கரை அலைபேசியில் அழைத்து போராட்டத்தை கைவிடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தும் ,திருமதி.
கே.ராணியின் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் உறுதி அளித்தார்.மேலும், 27.03.2021அன்று காலை 10.00 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்புத்தந்தார்.27.03.2021அன்று தேர்தல் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க வேண்டும் என்பதைத்தெரிவித்து 27.03.2021அன்று பிற்பகல் 05.30 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு வருவதாக மாவட்டச்செயலாளர் மெ.சங்கர் தெரிவித்தார்.
இதற்கிடையில்,
27.03.2021 அன்று முற்பகல் மாவட்டச்செயலாளர் மெ.சங்கரைத் தொடர்புக்கொண்ட
கூட்டுறவு களஅலுவலர் போராட்ட நடவடிக்கைகளை ஒத்திவைக்குமாறும் ,29.03.2021அன்று பேச்சு வார்த்தைக்கு வருமாறும் கேட்டுக் கொண்டார். களஅலுவலரிடம் 27.03.2021அன்று மாலை 05.30 மணிக்கு நாமக்கல் சரக கூட்டுறவுப்பதிவாளரை ,அவரது அழைப்பின் பேரில் சந்திக்க உள்ளதாகவும்,29.03.2021அன்று எருமப்பட்டியில் தங்களை சந்திக்க உள்ளதாகவும் குறிப்பிட்ட மாவட்டச்செயலாளர்
விரைவு நடவடிக்கைகளை கோரினார்.
இத்தகு பேச்சுவார்த்தை அழைப்புகளை பெரிதும் வரவேற்று ஏற்றுக்கொண்டு 27.03.2021அன்று பிற்பகல் 05.30 மணிக்கு
நாமக்கல் சரக கூட்டுறவுத் துணைப்பதிவாளர் அவர்களின் சந்திப்பு நடைபெற்றது.
இச்சந்திப்பில் மாநிலச்செயலாளர் முருகசெல்வராசன்,
மாவட்டச்செயலாளர் மெ.சங்கர்,மாவட்டத் துணைச்செயலாளர் வெ.வடிவேல், மாவட்டத்தணிக்கைக் குழு உறுப்பினர் த.தண்டபாணி,கபிலர்மலை ஒன்றியப்பொருளாளர் பொ. முத்துசாமி மற்றும் எருமப்பட்டி ஒன்றியத் தலைவர் க.ஆனந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.
ஆசிரியர் மன்றப் பொறுப்பாளர்களுடன் நீண்ட நெடிய நேரம் கூட்டுறவு சரக துணைப்பதிவாளர் அவர்கள் உரையாற்றினார்கள். எருமப்பட்டி சிக்கன நாணயச் சங்கம் இலாபத்தில் தான் உள்ளது.இச் சங்க உறுப்பினர்கள் எல்லோரும் இணைந்து நின்று சங்கத்தை வளர்த்தெடுங்கள் என்றார்.
இச் சந்திப்பில், நாமக்கல் சரக கூட்டுறவுத் துணைப்பதிவாளர் அவர்கள் திருமதி.இராணி என்பாரை எருமப்பட்டி சிக்கன நாணயச் சங்கப் பணியில் இருந்து தற்காலிக பணிநீக்கம்
செய்யப்பட்டுள்ளது என்பதைத்தெரிவித்தார்கள்.
மேலும் . சிக்கனநாணயச் சங்கத்தை ,இதன் உறுப்பினர்களை பாதுகாத்து தருவததாகவும் ,தனது நிர்வாகத்தில் உள்ள எல்லா கூட்டுறவு நிறுவனங்களும் ஆரோக்கியமாக வளர வேண்டும்,செயல்பட வேண்டும் என்பதே விருப்பம் என்றும் துணைப்பதிவாளர் அவர்கள் நம்பிக்கைத் தந்தார்கள்.
திருமதி.கே.ராணி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு இருப்பது,காலம் கடந்த நடவடிக்கை என்றாலும் வரவேற்புற்குரியதாகும்.
இன்னும் நிறைய பணிகள் இச் சிக்கன நாணயச்சங்கத்தில் செய்ய வேண்டி உள்ளது.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம் பொறுப்புணர்வோடு செயல்பட்டு ஆசிரியப்பெருமக்களுக்கு பெருந்தொண்டாற்றும் என்று அன்போடு தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி!
-முருகசெல்வராசன்
& மெ.சங்கர்.
சனி, 27 மார்ச், 2021
🍁🍁🍁 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 - பயிற்சிக் காணொளி - வாக்குச் சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப் பதிவு அலுவலர்களின் (1, 2, 3) பணிகள்..
🍁🍁🍁 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 - பயிற்சிக் காணொளி - வாக்குச் சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப் பதிவு அலுவலர்களின் (1, 2, 3) பணிகள்...
காணொலியினைப் பார்க்க இங்கே சொடுக்கவும்.
வெள்ளி, 26 மார்ச், 2021
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 - பயிற்சிக் காணொளி - வாக்குச் சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப் பதிவு அலுவலர்களின் (1, 2, 3) கடமைகள்...
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 - பயிற்சிக் காணொளி - வாக்குச் சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப் பதிவு அலுவலர்களின் (1, 2, 3) கடமைகள்...
வியாழன், 25 மார்ச், 2021
📌 *SBI - அரசு ஊழியர்கள் ஸ்டேட் கவர்மென்ட் சேலரி பேக்கேஜ் என்ற முறைக்கு உங்களது கணக்கை மாற்றம் செய்யும் வழிமுறைகள்*
📌 *SBI - அரசு ஊழியர்கள் ஸ்டேட் கவர்மென்ட் சேலரி பேக்கேஜ் என்ற முறைக்கு உங்களது கணக்கை மாற்றம் செய்யும் வழிமுறைகள்*
ஆசிரியர்கள் கவனத்திற்கு
State Government Salary Package(SGSP) என்ற முறையில் நமது கணக்கை மாற்றி அமைக்க வேண்டும் சேவிங்க்ஸ் பேங்க் என்ற முறை அனைவருக்குமான பொதுவான கணக்கு முறை.SGSPஎன்ற முறை அரசு ஊழியர்களுக்கு மட்டுமே உடையது.
உடனடியாக வங்கிக்கு சென்று மாற்றிக் கொள்ளவும்.
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கியமான நற்செய்தியை தெரிவிப்பதில் பெருமை கொள்கிறோம் நாம் அனைவரும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா என்ற வங்கியில் சம்பள கணக்கை சேவிங்க்ஸ் பேங்க் என்ற முறையிலேயே தொடர்ந்து வருகிறோம் ஆனால் அரசு ஊழியர் என்றால் ஸ்டேட் கவர்மென்ட் சேலரி பேக்கேஜ் என்ற முறைக்கு நமது கணக்கை மாற்ற வேண்டும் அதாவது State Government Salary Package(SGSP) என்ற முறையில் நமது கணக்கை மாற்றி அமைக்க வேண்டும் சேவிங்க்ஸ் பேங்க் என்ற முறை அனைவருக்குமான பொதுவான கணக்கு முறை.SGSPஎன்ற முறை அரசு ஊழியர்களுக்கு மட்டுமே உடையது இம்முறையை எந்த வங்கி மேலாளரும் நம்மிடம் கூறுவது இல்லை ஏனெனில் இம்முறையில் பல்வேறு சலுகைகள் அரசு அலுவலர்களுக்கு உண்டு முதலாவதாக எத்தனை முறை வேண்டுமானாலும் எவ்வித பண இழப்பும் இன்றி ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எடுத்துக்கொள்ளலாம்
*எந்த வித சர்வீஸ் சார்ஜும் இதற்குப் எடுக்கப்படுவதில்லை ஸ்டேட் பேங்க் ஏடிஎம் இல் மட்டுமல்ல எந்த ஏடிஎம்மில் வேண்டுமானாலும் நாம் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக்கொள்ளலாம் அதற்கு சர்வீஸ் சார்ஜ் கொடுக்கப்படுவது இல்லை அடுத்து ஜீரோ பேலன்ஸ் முறை தொடர்ந்து கொள்ளலாம் அடுத்ததாக தனிநபர் கடன் வீட்டுக் கடன் கார் கடன் கல்விக் கடன் ஆகிய லோன் களுக்கு இம்முறை அக்கவுண்ட் உள்ளவர்கள் மற்றவர்களை காட்டிலும் 50 சதவீதம் மட்டுமே பிராசஸிங் ஃபீஸ் கொடுக்கவேண்டும் .SB அக்கவுண்ட் உள்ளவர்களுக்கு பேர்சனல் லோன் சர்வீஸ் சார்ஜ் பத்தாயிரம் என்றால்SGSP அக்கவுண்ட் உள்ளவர்களுக்கு 5000 மட்டுமே. அடுத்ததாக பிரீ இன்சுரன்ஸ் 20 லட்சம் வரை இந்த அக்கவுண்ட் உள்ளவர்களுக்கு உண்டு*
இன்னும் பல்வேறு சலுகைகள் இந்த அக்கவுண்டிற்கு உண்டு.எனவே அனைத்து ஆசிரியர்களும் அனைத்து அரசு ஊழியர்களும் உங்கள் வங்கிக்கு சென்று உடனடியாக உங்கள் கணக்கைSGSP மாற்றிவிடுங்கள். இம்முறையில் மாற்றுவதற்கு நாம் வங்கிக்கு கொண்டு செல்ல வேண்டியவை *1. கவரிங் லெட்டர் 2. பேங்க் புக் ஜெராக்ஸ் 3. ஆதார் அட்டை நகல் 4. பான் கார்டு நகல் 5. ஆன்லைன் பே ஸ்லிப்* இவற்றை கொண்டு உங்களது அக்கவுண்டை மாற்றிக் கொள்ளுங்கள் இந்த விடுமுறையில் கண்டிப்பாக உங்களுக்கு மிகவும் அவசியமான இந்த செயலை செய்து விடுங்கள் தாமதிக்க வேண்டாம் நன்றி 🙏🙏🙏
*🏮பி.எஃப் மீதான வட்டி வருமானவரி விலக்கு வரம்பு ₹5 லட்சமாக அதிகரிப்பு" - நிர்மலா சீதாராமன்...*
*🏮பி.எஃப் மீதான வட்டி வருமானவரி விலக்கு வரம்பு ₹5 லட்சமாக அதிகரிப்பு" - நிர்மலா சீதாராமன்...*
*தொழிலாளர்களுடைய வருங்கால வைப்பு நிதியின் மீதான வட்டிக்கு வரிவிலக்கு அளிப்பதற்கான வரம்பு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது!*
*கடந்த பிப்ரவரி 1-ம் தேதி 2021-2022-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருந்தார்.*
*அப்போது அவர் பிராவிடண்ட் ஃபண்டில் (பி.எஃப்) ஊழியர் செலுத்தும் தொகை ஒரு நிதியாண்டில் 2.5 லட்சம் ரூபாயைத் தாண்டினால் அதன் மீதான வட்டிக்கு வருமான வரி உண்டு என அறிவித்திருந்தார்.*
*அதாவது, தற்போதைய நிலையில் அரசு மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் EPF உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் மாதம்தோறும் செலுத்தும் 12 சதவிகித கட்டாய பி.எஃப் தொகை மற்றும் விருப்ப பி.எஃப் (Voluntary PF) ஆகிய இரண்டின் கூட்டுத் தொகை ஒரு நிதியாண்டில் 2.5 லட்சம் ரூபாயைத் தாண்டும் பட்சத்தில் அதற்கான வட்டி வரிக்கு உட்படும் என்று சொல்லப்பட்டிருந்தது.*
*இந்நிலையில் மத்திய பட்ஜெட் மீது மக்களவையில் நேற்று விவாதம் நடந்தது. அதன் மீது 127 திருத்தங்கள் கூறப்பட்டன. அவை ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதன்பின்னர் குரல் வாக்கெடுப்பின்மூலம் நிதி மசோதா நிறைவேறியது.*
*இந்தக் கூட்டத்தொடரில் பேசிய நிர்மலா சீதாராமன், "தொழிலாளர்களுடைய வருங்கால வைப்பு நிதியின் மீதான வட்டிக்கு வரிவிலக்கு அளிப்பதற்கான வரம்பு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது" எனத் தெரிவித்தார். இதனால் வருங்கால வைப்பு நிதி பயனாளர்கள், பெரிதும் பலனடைவார்கள் எனச் சொல்லப்படுகிறது.*
*மேலும் அவர், "பெட்ரோல், டீசலை சரக்கு சேவை வரி வரம்புக்குள் கொண்டு வருவது தொடர்பாக அடுத்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்க விரும்புகிறேன். ஆனால், அவற்றின் மீது மத்திய அரசு மட்டுமல்ல, மாநில அரசுகளும் வரி விதிக்கின்றன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். உள்நாட்டு தொழில்களுக்கு உதவுவதற்காகக் குறிப்பாக குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறையில் சுங்க வரியில் மாற்றங்கள் கொண்டு வரப்படும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.*
புதன், 24 மார்ச், 2021
🍁ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றம் குறித்து திமுக தலைவர் அவர்கள் சேலம் தேர்தல் பரப்புரையில் பேச்சு.
*🗳️ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றம் குறித்து திமுக தலைவர் அவர்கள் சேலம் தேர்தல் பரப்புரையில் பேச்சு...
ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் பற்றி திமுக தலைவர் சேலம் தேர்தல் பரப்புரையில் பேச்சு.
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் நீண்டகால கோரிக்கைகள் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு நிறைவேற்றப்படும் என உறுதி.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நியாயமான போராட்டத்தில் அரசின் நிலைப்பாடு பற்றி எடுத்து விளக்கிய திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்...
செவ்வாய், 23 மார்ச், 2021
*🔖தெலங்கானாவில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அரசு ஊழியர்களுக்கான ஊதிய திருத்த ஆணையத்தின் பரிந்துரைப்படி புதிய ஊதியம் அமல்....அரசு ஊழியர்களுக்கு 30 சதவீத ஊதிய உயர்வு: ஓய்வு வயது 61 ஆக உயர்வு :*
*🔖தெலங்கானாவில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அரசு ஊழியர்களுக்கான ஊதிய திருத்த ஆணையத்தின் பரிந்துரைப்படி புதிய ஊதியம் அமல்....அரசு ஊழியர்களுக்கு 30 சதவீத ஊதிய உயர்வு: ஓய்வு வயது 61 ஆக உயர்வு :*
*✍️12th Internal Mark பதிவேற்றம் செய்தல் தொடர்பான அரசு தேர்வுத்துறை இயக்குநரின் அறிவுரைகள்.*
*✍️12th Internal Mark பதிவேற்றம் செய்தல் தொடர்பான அரசு தேர்வுத்துறை இயக்குநரின் அறிவுரைகள்.
தேசிய விருதும்,தேசிய கல்விக்கொள்கையும்!வாசிக்கையில்...கேட்கையில்...தோன்றுகிறது!முரண்!கரிகாலன் கருத்து!
முரண்
++++++
“ காடு இருந்தா எடுத்துகிடுவானுவ "
" ரூவா இருந்தா புடிங்கிடுவானுவ "
" ஆனா படிப்ப மட்டும் உன்கிட்ட இருந்து எடுத்துகிடவே முடியாது "
“படி, அதிகாரத்துக்கு வா! "
" உனக்கு செஞ்சத,
நீ !
எவனுக்கும் செய்யாதே ”
இத்தகு
வசனங்கள்
கொண்ட
"அசுரன் "
தமிழ் திரைப்படத்திற்க்கு.
தேசியவிருது
கிடைத்திருப்பது வரவேற்புக்குரியதாகும்!
" அசுரன் " திரைப்படத்திற்கு
தேசியவிருது கிடைத்திருக்கையில் தான்,
தேசியக்கல்விக் கொள்கை
தமிழ்நாட்டிலும்
அமலாகும்
அறிவிப்பும்
வெளியாகிறது !
இத்தகு அறிவிப்புகள் கிடைக்கையில்...
வாசிக்கையில்...
கேட்கையில் ...
தோன்றுகிறது!
முரண்!
-கரிகாலன்.
*🔖மத்திய அரசு துறைகளில் பிற மாநிலத்தவர்களுக்கு முன்னுரிமை..வேலைவாய்ப்பில் பரிபோகும் தமிழக உரிமை.தொடர்புறக்கணிப்பால் இளைஞர்களின் எதிர்காலம் பாதிப்பு!*
*🔖மத்திய அரசு துறைகளில் பிற மாநிலத்தவர்களுக்கு முன்னுரிமை..வேலைவாய்ப்பில் பரிபோகும் தமிழக உரிமை.தொடர்புறக்கணிப்பால் இளைஞர்களின் எதிர்காலம் பாதிப்பு!*
தமிழ்நாடு மாறாது!.கரிகாலன் கருத்து!!
# தமிழ்நாடு மாறாது!
++++++++++++++++++
தியாகி.
சங்கரலிங்கனார்
உயிர் கொடைத் தந்து
உருவாகிய மாநிலம்
எங்கள்
தமிழ்நாடு!.
பேரறிஞர் அண்ணா
இந்திய நாடாளுமன்றத்தில்
முழங்கிய மாநிலம்
எங்கள்
தமிழ்நாடு !.
தமிழ்நாடு சட்டமன்றத்தின்
பிரகடனம்
எங்கள் நாடு
தமிழ்நாடு!
ஈராயிரமாண்டு
பாரம்பரியம்மிகு
தமிழ் இலக்கியங்களில்
எங்கள் நாடு
தமிழ்நாடு !.
மகாகவி பாரதி வார்த்தைகளில்
கல்விச்சிறந்த நாடு
எங்கள் தமிழ்நாடு !.
ஆரியம் போல்
வழக்கொழிந்த
நாடற்ற மொழி அல்ல!.
சீரிளமைத்
திறம்வியந்து
நாள்தோறும்
நாட்டினர்
போற்றும் மொழி!
வளரும் மொழி !
எங்கள்
கன்னித்தமிழ்மொழி
அரசாளும் நாடு
எங்கள்
தமிழ்நாடு!.
பரிபாடல்,
பதிற்றுப்பத்து,
சிலப்பதிகாரம்,
மணிமேகலை,
பக்தி இலக்கியம்
என
இலக்கணத்தில் ...
இலக்கியத்தில்...
வாழ்வியலில்...
வகை வகையாக...
தொகை தொகையாக...
நீடித்து நிலைத்து
பெயர் சிறக்க
வாழும் வரலாறாய்
வாழும்நாடு!
நாள்தோறும்
வளரும் நாடு!
எங்கள் தமிழ்நாடு!.
அகிலத்தின்
மூத்த பெருங்குடிமக்களின்
பல்லாயிரமாண்டு காலத்திய
செழுமைமிகு
வரலாற்றுப் பெட்டகம்
எங்கள்
தமிழ்நாடு!.
வரலாற்றுக் கருவூலம்
எங்கள்
தமிழ்நாடு !.
இத்தகுப் பெருமைப்போன்று
எண்ணிலடங்கா
எண்ணங்களினால்...
வண்ணங்களிலால்...
உரத்த சிந்தனைகளினால்...
நிறைந்து
செழிக்கும் நாடு
எங்கள்
தமிழ்நாடு!.
கம்பீரமாக சொல்லுவோம்!
எங்கள்நாடு
தமிழ்நாடு!.
#மாறாது தமிழ்நாடு!.
-கரிகாலன்.
*📚அரசாணை எண் -327- கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.*
*📚அரசாணை எண் -327- கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.*
திங்கள், 22 மார்ச், 2021
*✍️பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி-கற்போம் எழுதுவோம் இயக்கம் 27.03.2021 அன்று நடத்த திட்டமிடப்பட்ட கற்றல் அடைவுத்தேர்வு 16.05.2021 அன்று நடத்துதல் சார்பான பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்குநர் அவர்களின் சுற்றறிக்கை.*
*✍️பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி-கற்போம் எழுதுவோம் இயக்கம் 27.03.2021 அன்று நடத்த திட்டமிடப்பட்ட கற்றல் அடைவுத்தேர்வு 16.05.2021 அன்று நடத்துதல் சார்பான பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்குநர் அவர்களின் சுற்றறிக்கை.*
சனி, 20 மார்ச், 2021
*📚பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு ஜனவரி மாதம் நடைபெற்ற பயிற்சிக்கான தொகை - ரூ.2000 ( மதிப்பூதியம் ஒரு உறுப்பினருக்கு ரூ.100 வீதம் 20 உறுப்பினர்களுக்கு ) மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதுவதற்கான தொகை - ரூ 665 மொத்தம் ஒரு பள்ளிக்கு ரூ. 2665 SMC வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு தொகை விடுவிக்கப்பட்டது சார்பான நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின்(ஒபக)செயல்முறைகள்.*
*📚பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு ஜனவரி மாதம் நடைபெற்ற பயிற்சிக்கான தொகை - ரூ.2000 ( மதிப்பூதியம் ஒரு உறுப்பினருக்கு ரூ.100 வீதம் 20 உறுப்பினர்களுக்கு ) மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதுவதற்கான தொகை - ரூ 665 மொத்தம் ஒரு பள்ளிக்கு ரூ. 2665 SMC வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு தொகை விடுவிக்கப்பட்டது சார்பான நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின்(ஒபக)செயல்முறைகள்.*
வியாழன், 18 மார்ச், 2021
புதன், 17 மார்ச், 2021
எஸ்.எண்.241 எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன நாணயச்சங்கத்தின் செயலாளர் திருமதி.கே.ராணி என்பாரிடம் இருந்து நிதியிழப்புத்தொகை சுமார் 19 இலட்சத்தை முழுமையாக வசூலித்திடுக!நாமக்கல் சரக கூட்டுறவு துணைப்பதிவாளரின் ஒருபக்கச் சார்பு கொண்ட வசூல் விசாரணையை நிறுத்திடுக! இறுதி ஆணைகள் பிறப்பித்திட தடை விதித்திடுக!தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல்மாவட்ட அமைப்பின் ஏழுகட்டத்தொடர் நடவடிக்கையின் இரண்டாம் கட்டமான சுவரொட்டி இயக்கம் தமிழக அரசுக்கும்,தமிழ்நாடு கூட்டுறவுத்துறைக்கும் வேண்டுகோள்!
எஸ்.எண்.241 எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன நாணயச்சங்கத்தின் செயலாளர் திருமதி.கே.ராணி என்பாரிடம் இருந்து நிதியிழப்புத்தொகை சுமார் 19 இலட்சத்தை முழுமையாக வசூலித்திடுக!
நாமக்கல் சரக கூட்டுறவு துணைப்பதிவாளரின் ஒருபக்கச் சார்பு கொண்ட வசூல் விசாரணையை நிறுத்திடுக!
இறுதி ஆணைகள்
பிறப்பித்திட
தடை விதித்திடுக!
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல்மாவட்ட அமைப்பின் ஏழுகட்டத்தொடர் நடவடிக்கையின் இரண்டாம் கட்டமான சுவரொட்டி இயக்கம்
தமிழக அரசுக்கும்,
தமிழ்நாடு கூட்டுறவுத்துறைக்கும் வேண்டுகோள்!
செவ்வாய், 16 மார்ச், 2021
திங்கள், 15 மார்ச், 2021
*💉கரோனா தொற்று பாதிப்பை தடுக்க பள்ளி மாணவ,மாணவிகள் தீவிரமாக கண்காணிப்பு சுகாதாரத் துறை செயலாளர் தகவல்...*
*💉கரோனா தொற்று பாதிப்பை தடுக்க பள்ளி மாணவ,மாணவிகள் தீவிரமாக கண்காணிப்பு சுகாதாரத் துறை செயலாளர் தகவல்...*
*கரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துவருகிறது. இதற்கிடையில், தஞ்சாவூர் அருகே அம்மாப்பேட்டை பள்ளியில் 57 மாணவிகள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.*
*இதுதொடர்பாக சுகாதாரத்துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:*
*கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை முடியும் வரை வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்கின்றனர். வீடுகளில் தனிமைப் படுத்திக் கொள்பவர்களாக இருந்தாலும் தனி அறை, கழிப்பறை இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டால் குடும்பத்தில் மற்றவர்களுக்கும் தொற்று பரவ வாய்ப்புள்ளது. தனி அறை, கழிப்பறை வசதிகள் இல்லாதவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறவேண்டும். காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.*
*தமிழகத்தில், மேற்கு மாம்பலம், புரசைவாக்கம், வேப்பேரி, சோழவரம், ஆவடி ஆகிய பகுதிகளில், சுப, துக்க நிகழ்ச்சிகளில் கூடிய கூட்டதால் தொற்று அதிகம் பரவி உள்ளது. பல இடங்களில், முகக்கவசம், சமூக இடைவெளியை பொதுமக்கள் பின்பற்றுவதில்லை.*
*தேர்தல் நடைபெற உள்ளதால் தங்கள் தொண்டர்களை காக்கவும், அவர்களால் மற்றவர்களுக்கு தொற்று பரவாமல் தடுக்கவும், அரசியல் கட்சி தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, கூட்டத்தில் பங்கேற்கும் அனைவரும் முகக்கவசம் அணிவதையும், சமூக இடைவெளி பின்பற்றுவதையும், தலைவர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.*
*அரசியல் கட்சி தலைவர்களின் பங்களிப்பு இருந்தால், தொற்று பரவலை கட்டுப்படுத்தலாம். பள்ளிகளில் மாணவர்களுக்கு காய்ச்சல், சளி போன்ற பிரச்சினை இருக்கிறதா என்று கண்காணிக்கப்படுகிறது. பெற்றோரும் மாணவ, மாணவிகளுக்கு காய்ச்சல் இருந்தால் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம். மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். இவ்வாறு கூறினார்.*
*💵தவறான வங்கிக்கணக்கில் பணம் மாற்றப்பட்டால் எப்படி அதனை திரும்ப பெறுவது..?*
*💵தவறான வங்கிக்கணக்கில் பணம் மாற்றப்பட்டால் எப்படி அதனை திரும்ப பெறுவது..?*
*தற்போது ஆன்லைன் பணப் பரிமாற்றங்கள் தவிர்க்க முடியாதவையாக மாறிவிட்டன.. யுபிஐ, பேடிஎம், நெட் பேங்கிங் உள்ளிட்ட பல முறைகளில் மக்கள் வங்கி பரிவர்த்தனைகள் மேற்கொள்கின்றனர். ஸ்மார்ட்போன்கள் அல்லது மடிக்கணினிகள் மூலம் சில நொடிகளில் இதைச் செய்ய முடியும் என்பதால் ஒருவரின் கணக்கிற்கு பணத்தை மாற்ற நாங்கள் ஒரு வங்கியைப் பார்க்க வேண்டியதில்லை. இருப்பினும், ஆன்லைன் பரிவர்த்தனைகள் வங்கி வசதிகளை எளிதாக்கியுள்ள நிலையில், இதில் பல சிக்கல்களும் இருக்க தான் செய்கின்றன..*
*உதாரணமாக, வேறொருவரின் கணக்கிற்கு தவறுதலாக பணத்தை மாற்றினால், பணத்தை எவ்வாறு திரும்பப் பெறுவீர்கள்? அந்த தொகையை உங்கள் கணக்கில் திருப்பிச் செலுத்த வங்கிக்கு அதிகாரம் உள்ளதா? சரி, பயனர்கள் அதைத் தொடர அனுமதிக்காவிட்டால், வங்கிகளால் அதைத் திருப்ப முடியாது. “புரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒரு பரிவர்த்தனை செய்யப்பட்டிருந்தால், பயனாளியின் ஒப்புதல் இல்லாமல் வங்கி அதன் முடிவில் இருந்து அதை மாற்ற முடியாது. வங்கி ஒரு வசதியாளராக மட்டுமே செயல்பட முடியும் என்று கூறப்படுகிறது..உங்கள் பணத்தை எவ்வாறு திரும்பப் பெறுவது?*
*உடனடியாக உங்கள் வங்கி வாடிக்கையாளர் சேவையை அழைத்து முழு விஷயத்தையும் விளக்குங்கள். பரிவர்த்தனை, கணக்கு எண் மற்றும் பணம் தவறாக மாற்றப்பட்ட கணக்கு ஆகியவற்றின் சரியான தேதி மற்றும் நேரத்தை நீங்கள் நிர்வாகிக்கு தெரிவிக்க வேண்டும். நீங்கள் பணத்தை மாற்றிய வங்கிக் கணக்குக்கு 5-6 வணிக நாட்களுக்குள் பணம் தானாகவே திருப்பித் தரப்படும். இல்லையென்றால், நீங்கள் உங்கள் வங்கியை அணுகி தவறான பரிவர்த்தனை குறித்து மேலாளருக்கு தெரிவிக்க வேண்டும். அந்த வங்கி பயனாளியின் விவரங்களை சரிபார்க்கும், அதே கிளையில் நபர் ஒரு கணக்கை வைத்திருந்தால், பணத்தை திருப்பித் தருமாறு வங்கி அவரிடம் கோரலாம். பயனாளி உங்கள் கணக்கில் பணத்தை மீண்டும் செலுத்த மறுத்தால் என்ன செய்வது..? இந்த வழக்கில், உங்கள் வங்கியைத் தொடர்புகொண்டு விஷயத்தை விரிவாகக் கூறுங்கள். அவர் அல்லது அவள் உங்கள் பணத்தை திருப்பி கொடுக்க மறுத்தால் சட்ட வழியைத் தேர்வுசெய்க. உங்கள் வங்கியும் உங்கள் பயனாளியின் வங்கிகளும் வேறுபட்டவை மற்றும் வெவ்வேறு நகரங்களில் இருந்தால் நிலைமை மிகவும் சிக்கலானதாகிவிடும். உங்கள் பணத்தை திருப்பி கொடுக்க பயனாளி ஒப்புக்கொண்டால் என்ன நடக்கும்..?*
*ஒரு பயனாளி பரிவர்த்தனையை மாற்ற ஒப்புக்கொண்டால், உங்கள் பணத்தை திரும்பப் பெற 8-10 வேலை நாட்கள் ஆகும். இல்லையெனில், நீங்கள் சரியான வங்கி அறிக்கை, முகவரி மற்றும் ஐடி ஆதாரம் போன்றவற்றைக் கொண்டு பரிவர்த்தனையை நிரூபிக்க வேண்டும்.*
*✍️தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 6ம் தேதி பொது விடுமுறை - ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என தொழிலாளர் நலத்துறை உத்தரவு...*
*✍️தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 6ம் தேதி பொது விடுமுறை - ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என தொழிலாளர் நலத்துறை உத்தரவு...*
*🎤பழைய ஓய்வூதிய திட்டத்தை எவ்வாறு செயல்படுத்தமுடியும்? தி.மு.க தலைவர் ஸ்டாலின் விளக்கம் :*
*🎤பழைய ஓய்வூதிய திட்டத்தை எவ்வாறு செயல்படுத்தமுடியும்? தி.மு.க தலைவர் ஸ்டாலின் விளக்கம் :*
*பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்துவதன் மூலம் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூபாய் 5000 கோடி நிதிச் சுமை ஏற்படும் !!!. இச் செலவினத்தை புதிய தொழில் முனையங்கள் உருவாக்கப்பட்டு அதன் மூலம் பெறப்படும் வருமானத்தைக் கொண்டும் கனிம வளத்துறை வாரியத்தின் மூலம் அரசு ஒழுங்குமுறை விற்பனையின் மூலம் பெறப்படும் நிதியில் இருந்தும் இச்செலவினம் ஈடு கட்டப்படும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார் !!!.*
*💵SBI UPDATE :- SMS மூலம் அக்கவுண்ட் பேலன்ஸ், மினி ஸ்டேட்மென்ட் பெறுவது எப்படி?*
*💵SBI UPDATE :- SMS மூலம் அக்கவுண்ட் பேலன்ஸ், மினி ஸ்டேட்மென்ட் பெறுவது எப்படி?*
*How to check SBI Account Balance: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கு இருப்பு, மினி அறிக்கையை பல முறைகள் மூலம் சரிபார்க்கலாம். மொபைல் பேங்கிங், நெட் பேங்கிங், வங்கிக் ஏடிஎம், கிளை, எஸ்எம்எஸ் பேங்கிங் (எஸ்பிஐ விரைவு) போன்றவற்றின் மூலம் எஸ்பிஐ பேலன்ஸ் இருப்பு தகவல் மற்றும் மினி அறிக்கையை பெறலாம்.*
*எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் வங்கி வழங்கிய எஸ்எம்எஸ் பேங்கிங் சேவைகளைப் பயன்படுத்தி அவர்களின் எஸ்பிஐ கணக்கு நிலுவை சரிபார்க்கலாம் அல்லது சிறு அறிக்கையைப் பெறலாம்.*
*அவர்கள் செய்ய வேண்டியது, எஸ்பிஐ பேலன்ஸ் அளிக்கும் கட்டணமில்லா எண் 09223766666 - க்கு மிஸ்டு கால் அல்லது அவர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து எஸ்எம்எஸ் அனுப்புவது மட்டுமே. சில நொடிகளில், அவர்கள் தங்கள் இருப்பு விவரங்களை தங்கள் தொலைபேசியில் பெறுவார்கள். எஸ்பிஐ கட்டணமில்லா எண் 09223866666 என்ற எண்ணில் மிஸ்டு கால் மூலம் ஒருவர் தனது எஸ்பிஐ கணக்கு நிலுவைகளைப் பெறலாம்.*
*எஸ்எம்எஸ் சேவை மூலம் எஸ்பிஐ கணக்கு இருப்பைப் பெற, எஸ்பிஐ கணக்கு வைத்திருப்பவர் கட்டணமில்லா எண் 09223766666 க்கு 'BAL' என்ற குறுஞ்செய்தியுடன் எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். எஸ்எம்எஸ் சேவை மூலம் எஸ்பிஐ கணக்கு வைத்திருப்பவர் தகவல் ப்[பெற வேண்டுமெனில், 'MSTMT' என்று டைப் செய்து கட்டணமில்லா எண் 09223766666 க்கு அனுப்பவும்.*
*பேங்க்ல நகைக்கடன் வாங்க போறீங்களா? அப்போ இதை கொஞ்சம் படிச்சுட்டு போங்க!*
*இருப்பினும், எஸ்பிஐ எஸ்எம்எஸ் சேவையைப் பெற, எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண்ணை எஸ்பிஐ கணக்கில் பதிவு செய்திருக்க வேண்டும். மொபைல் தொலைபேசி எண்ணில் மாற்றம் இருந்தால், அவர்கள் புதிய மொபைல் தொலைபேசியை எஸ்பிஐ எஸ்எம்எஸ் சேவை மூலமாகவும் பதிவு செய்யலாம். அவர்களுக்குத் தேவையானது அதே மொபைல் எண்ணிலிருந்து 09223488888 என்ற எண்ணில் ஒரு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும் என்பதே. மெசேஜ் ஃபார்மட் 'REG <space> கணக்கு எண் என்று இருக்க வேண்டும்.*
*எஸ்பிஐ ஒரு உறுதிப்படுத்தல் மெசேஜ் அனுப்பும். வாடிக்கையாளர்கள் இப்போது இந்த சேவையைப் பயன்படுத்தலாம் எஸ்பிஐ கணக்கு இருப்பு, மினி அறிக்கை, காசோலை புத்தக கோரிக்கை, மினி ஸ்டேட்மென்ட், கல்வி கடன் வட்டி சான்றிதழ் மற்றும் வீட்டுக் கடன் வட்டி சான்றிதழ் ஆகியவற்றை சரிபார்க்கலாம்.*
*📚பள்ளிக் கல்வி - பள்ளி வயது சிறார்கள் வாகனம் ஓட்டி பள்ளிக்கு வருதல் (Under Age Driving Dangers Minor Ride to School) - ஏற்படும் பாதிப்புகளை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!!*
*📚பள்ளிக் கல்வி - பள்ளி வயது சிறார்கள் வாகனம் ஓட்டி பள்ளிக்கு வருதல் (Under Age Driving Dangers Minor Ride to School) - ஏற்படும் பாதிப்புகளை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!!*
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)