திங்கள், 8 மார்ச், 2021

பரமத்தி ஒன்றியம் 12 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளுக்கு 15 மாதக்கால தூய்மைப்பணியாளர் ஊதியம் மற்றும் பராமரிப்பு மானியம் உடனடியாக வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,நாமக்கல் மாவட்ட அமைப்பு இன்று 08.03.2021 நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் அலுவலக கண்காணிப்பாளர் ( கணக்கு) அவர்களை ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பின் சார்பில் சந்தித்த நிகழ்வு.

வணக்கம் ! 

இன்று (08.03.2021- திங்கள்) பிற்பகல் 04.00  மணியளவில்
 நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் அலுவலக கண்காணிப்பாளர் ( கணக்கு)   அவர்களை ஆசிரியர் மன்றத்தின் மாநிலச் செயலாளர் திரு.முருகசெல்வராசன் அவர்களின் தலைமையில் நாமக்கல் மாவட்டப் பொறுப்பாளர்கள் சந்தித்தனர்.

பரமத்தி ஒன்றியம் 12 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளுக்கு 15 மாதக்கால  தூய்மைப்பணியாளர் ஊதியம் மற்றும் பராமரிப்பு மானியம் உடனடியாக வழங்க வலியுறுத்தப்பட்டது. 
பரமத்தி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பொது நிதியில் இருந்து ஊதியம் மற்றும் பராமரிப்பு தொகையை விடுவிக்க அறிவுறுத்தல் வழங்கியதாக கண்காணிப்பாளர் தெரிவித்தார். பரமத்தி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (கணக்கு) இது குறித்து தகவல் நமக்கு அளிப்பார் என   கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் மாவட்ட துணைச் செயலாளர் திரு.வெ.வடிவேல், மாவட்ட தணிக்கை குழு உறுப்பினர் திரு.த.தண்டபாணி , எருமப்பட்டி ஒன்றியத் தலைவர் திரு.க.ஆனந்தன், பள்ளிபாளையம் ஒன்றியத் தலைவர் திரு.பி.கண்ணன்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

-மெ.சங்கர்.
மாவட்டச் செயலாளர்,
ஆசிரியர் மன்றம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக