வியாழன், 31 மார்ச், 2022
புதன், 30 மார்ச், 2022
.ஆர். ரஹ்மான் இசையில் தாமரையின் வரிகளில் உருவாகியிருக்கம் 'மூப்பில்லா தமிழே தாயே' பாடல்
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தாமரையின் வரிகளில் உருவாகியிருக்கம் 'மூப்பில்லா தமிழே தாயே' பாடல் அட்டகாசமாக இருக்கிறது. பாருங்களேன்!https://www.youtube.com/watch?v=JDYiJGTOFHU https://www.youtube.com/watch?v=JDYiJGTOFHU "திசை எட்டும் தமிழே எட்டும் தித்தித்தும் முரசும் கொட்டும் மதிநுட்பம் வானை முட்டும் மழை முத்தாய் கடலில் சொட்டும் அகம் என்றால் அன்பாய் கொஞ்சும் புறம் என்றால் போராய் பொங்கும் தடையின்றி காற்றில் எங்கும் தமிழ் என்று சங்கே முழங்கும் உறங்காத பிள்ளைக்கெல்லாம் தாலாட்டாய் தமிழே கரையும் பசியென்று யாரும் வந்தால் பாகாகி அமுதம் பொழியும் கடை வள்ளல் எழுவர் வந்தார் கொடை என்றால் உயிரும் தந்தார் படை கொண்டு பகைவர் வந்தார் பல பாடம் கற்றுச் சென்றார் மூவேந்தர் சபையில் நின்று முத்தமிழின் புலவர் வென்றார் பாவேந்தர் என்றே கண்டால் பாராளும் மன்னர் வந்தார் அன்னைக்கும் அன்னை நீயே அடிவானில் உதயம் நீயே முன்னைக்கும் முன்னை நீயே மூப்பில்லா தமிழே தாயே காலங்கள் போகும்போது மொழி சேர்ந்து முன்னால் போனால் அழிவின்றி தொடரும் என்றும் அமுதாகி பொழியும் எங்கும் உன்னிப்பாய் கவனம் கொண்டோம் உள் வாங்கி மாறிச் செல்வோம் பின் வாங்கும் பேச்சே இல்லை முன்னோக்கி சென்றே வெல்வோம் அன்னைக்கும் அன்னை நீயே அடிவானில் உதயம் நீயே முன்னைக்கும் முன்னை நீயே மூப்பில்லா தமிழே தாயே பழங்காலப் பெருமை பேசி படிதாண்டா வண்ணம் பூசி சிறை வைக்கப் பார்ப்பர் தமிழே நீ சீறி வா வா வெளியே மொழியில்லை என்றால் இங்கே இனமில்லை என்றே அறிவாய் விழித்துக்கொள் தமிழா முன்னே திளைத்துக்கொள் தமிழால் உன்னை தமிழ் எங்கள் உயிரே என்று தினந்தோறும் சொல்வோம் இன்று உனை அன்றி யாரைக் கொன்டு உயர்வோமோ உலகில் இன்று அன்னைக்கும் அன்னை நீயே அடிவானில் உதயம் நீயே முன்னைக்கும் முன்னை நீயே மூப்பில்லா தமிழே தாயே"
ஒன்றிய அரசு 12 அம்சக்கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி நடைபெற்றுவரும் அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் நாமக்கல் பூங்காசாலையில் 29.03.2022 அன்று பிற்பகல் 05.45மணி அளவில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
அன்பானவர்களே!வணக்கம். *ஒன்றிய அரசு 12 அம்சக்கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி நடைபெற்றுவரும் அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் நாமக்கல் பூங்காசாலையில் 29.03.2022 அன்று பிற்பகல் 05.45மணி அளவில் *தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின்* *நாமகிரிப்பேட்டை ஒன்றியத் தலைவர் திரு.சு.சிதம்பரம் அவர்களின் தலைமையில் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது*. 1.புதிய தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தினை இரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத்திட்டத்தினை தொடர்ந்திடல் வேண்டும். 2.தொகுப்பூதிய ,ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்திடல் வேண்டும்.சமவேலைக்கு சம ஊதியம் வழங்கிடல் வேண்டும். 3.நாட்டின் செல்வவளம் மிகுந்து குவிந்துள்ளவர்களிடம் சொத்துவரி வசூலித்திடல் வேண்டும்.நாட்டின் கல்வி,மருத்துவம் மற்றும் வேளாண்மை போன்ற அதிஅவசிய முக்கியத்துறைகளில் மக்கள் பயன்பாட்டுக்கு நிதிதிரட்டிடல் வேண்டும்.நாட்டின் பொருளாதாரத்திற்கு புத்துயிர் ஊட்டுதல் வேண்டும். 4.கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ளும் முன்களப்பணியாளர்களுக்கு உரியப் பாதுகாப்பு வசதிகளும்,காப்பீட்டு வசதிகளும் செய்து தருதல் வேண்டும். 5.இந்திய ஒன்றிய அரசு 44 தொழிலாளர் சட்டங்களை 4 சட்டத்தொகுப்புகளாக சுருக்குவதைக் கைவிடல் வேண்டும். 6.தேசிய பணமாக்கும் கொள்கை எனும் பெயரில் பொதுத்துறை நிறுவனங்களை விற்பனைச் செய்து வருவதைக் கைவிடல் வேண்டும். 7.விண்ணைத் தொடும்விலைவாசி உயர்வினை கட்டுப்படுத்திடல் வேண்டும். 8.சமையல் எரிவாயு,பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிப்பொருள்களின் விலைஉயர்வினை தடுத்து நிறுத்திடல் வேண்டும்.கலால்வரி இரத்து செய்யப்படல் வேண்டும். 9.மாத நிரந்தர வருவாய் அற்ற குடும்பங்களுக்கு மாதந்தோறும் ரூ7500/நிவாரணம் வழங்கிடல்வேண்டும். 10.வருங்கால வைப்புநிதி வட்டியை உயர்த்திடல் வேண்டும். 11.மின்சார திருத்தச் சட்டத்தை கைவிடல்வேண்டும். 12.தனிநபர் வருமானவரி உச்சவரம்பு உயர்த்தப்படல்வேண்டும்.தொழில்வரி இரத்துசெய்யப்படல் வேண்டும். என்பது உள்ளிட்ட அகில இந்திய வேலைநிறுத்தக் கோரிக்கைகளை ஒன்றிய அரசு உடன் நிறைவேற்றிட வலியுறுத்தி இவ்வார்ப்பாட்டத்தில் கோரிக்கைக்கான ஆதரவு முழக்கங்கள் ஓங்கி உரத்து ஒலிக்கப் பட்டது.
மத்தியப் பல்கலைக் கழகங்களுக்கு நுழைவுத்தேர்வு - புதியக் கல்விக் கொள்கை திணிப்பை கண்டித்து மறுமலர்ச்சி தி.மு.க இளைஞர் அணி - மாணவர் அணி சார்பில் ஏப்ரல் 7 அன்று திருவாரூரில் ஆர்ப்பாட்டம்..! வைகோ அறிக்கை
மத்தியப் பல்கலைக் கழகங்களுக்கு நுழைவுத்தேர்வு - புதியக் கல்விக் கொள்கை திணிப்பை கண்டித்து மறுமலர்ச்சி தி.மு.க இளைஞர் அணி - மாணவர் அணி சார்பில் ஏப்ரல் 7 அன்று திருவாரூரில் ஆர்ப்பாட்டம்..! வைகோ அறிக்கை இந்தியா முழுவதும் உள்ள 45 மத்தியப் பல்கலைக் கழகங்களில், இந்தக் கல்வி ஆண்டு முதல் இளநிலைப் படிப்புகளில் சேர்வதற்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என, பல்கலைக்கழக மானியக் குழு கடந்த மார்ச் 20 ஆம் தேதி அன்று அறிவித்து உள்ளது. இந்தத் தேர்வுக்கான விண்ணப்பத் தளம் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து செயல்பாட்டுக்கு வருகின்றது. இந்த ஆண்டுக்கான பொது நுழைவுத் தேர்வு ஜூலை மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. கணினி வழியில் மூன்றரை மணிநேரம் நடைபெறும் இந்தத் தேர்வில், அனைத்து வினாக்களும் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து மட்டுமே கேட்கப்படும். எனவே, மாணவர்கள் என்சிஇஆர்டி பாட நூல்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று யூ.ஜி.சி தெரிவித்து உள்ளது. அத்துடன், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பெறும் மதிப்பெண்களுக்கு இந்த நுழைவுத் தேர்வில் எந்த மதிப்பும் தரப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மாநிலப் பாடத்திட்டத்தில் பயின்று பொதுத்தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை மதிப்பற்றதாக ஆக்கி, மாநில அரசின் கல்வி முறையை மதிப்பில்லாமல் ஆக்கும் இந்த நுழைவுத் தேர்வின் மூலம், மீண்டும் புதியக் கல்விக் கொள்கையை திணிக்கும் முயற்சியில் ஒன்றிய பா.ஜ.க அரசு ஈடுபட்டு உள்ளது. மேலும், இந்தத் தேர்வை மற்றக் கல்லூரிகளும், தனியார் பல்கலைக்கழகங்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம், ஏழை எளிய மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பு தடுக்கப்படும். சமூக நீதிக்கு எதிரான இந்தப் பொது நுழைவுத் தேர்வை தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டும். ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பை கண்டித்து, மத்திய பல்கலைக்கழகங்களில் நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வுக்கு எதிராக, மறுமலர்ச்சி தி.மு.க இளைஞர் அணி - மாணவர் அணி சார்பில், மத்தியப் பல்கலைக்கழகம் அமைந்திருக்கும் திருவாரூரில் வருகின்ற ஏப்ரல் 7 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். திருவாரூர் மாவட்டப் பொறுப்பாளர் ப.பாலச்சந்திரன் தலைமையில், இளைஞர் அணிச் செயலாளர் ப.த.ஆசைத்தம்பி, மாணவர் அணிச் செயலாளர் பால.சசிகுமார் ஆகியோரது ஒருங்கிணைப்பில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கழக அரசியல் ஆய்வு மைய செயலாளர் மு.செந்திலதிபன் சிறப்புரை ஆற்றுவார்.தஞ்சை மண்டல கழகத் தோழர்கள், அணிகளின் நிர்வாகிகள் அனைவரும் பெருந்திரளாக பங்கேற்றுச் சிறப்பிக்க வேண்டும் என, கேட்டுக் கொள்கிறேன். வைகோ பொதுச்செயலாளர் மறுமலர்ச்சி திமுக 'தாயகம்' சென்னை - 8 30.03.2022