புதன், 30 மார்ச், 2022

ஒன்றிய அரசு 12 அம்சக்கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி நடைபெற்றுவரும் அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் நாமக்கல் பூங்காசாலையில் 29.03.2022 அன்று பிற்பகல் 05.45மணி அளவில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ஆதரவு ஆர்ப்பாட்டம் ‌நடைபெற்றது

 அன்பானவர்களே!வணக்கம். *ஒன்றிய அரசு 12 அம்சக்கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி நடைபெற்றுவரும் அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் நாமக்கல் பூங்காசாலையில் 29.03.2022 அன்று பிற்பகல் 05.45மணி அளவில் *தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின்* *நாமகிரிப்பேட்டை ஒன்றியத் தலைவர் திரு.சு.சிதம்பரம் அவர்களின் தலைமையில் ஆதரவு ஆர்ப்பாட்டம் ‌நடைபெற்றது*. 1.புதிய தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தினை இரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத்திட்டத்தினை தொடர்ந்திடல் வேண்டும். 2.தொகுப்பூதிய ,ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்திடல் வேண்டும்.சமவேலைக்கு சம ஊதியம் வழங்கிடல் வேண்டும். 3.நாட்டின் செல்வவளம் மிகுந்து குவிந்துள்ளவர்களிடம் சொத்துவரி வசூலித்திடல் வேண்டும்.நாட்டின் கல்வி,மருத்துவம் மற்றும் வேளாண்மை போன்ற அதிஅவசிய முக்கியத்துறைகளில் மக்கள் பயன்பாட்டுக்கு நிதிதிரட்டிடல் வேண்டும்.நாட்டின் பொருளாதாரத்திற்கு புத்துயிர் ஊட்டுதல் வேண்டும். 4.கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ளும் முன்களப்பணியாளர்களுக்கு உரியப் பாதுகாப்பு வசதிகளும்,காப்பீட்டு வசதிகளும் செய்து தருதல் வேண்டும். 5.இந்திய ஒன்றிய அரசு 44 தொழிலாளர் சட்டங்களை 4 சட்டத்தொகுப்புகளாக சுருக்குவதைக் கைவிடல் வேண்டும். 6.தேசிய பணமாக்கும் கொள்கை எனும் பெயரில் பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை‌ச் செய்து வருவதைக் கைவிடல் வேண்டும். 7.விண்ணைத் தொடும்விலைவாசி உயர்வினை கட்டுப்படுத்திடல் வேண்டும். 8.சமையல் எரிவாயு,பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிப்பொருள்களின் விலைஉயர்வினை தடுத்து நிறுத்திடல் வேண்டும்.கலால்வரி இரத்து செய்யப்படல் வேண்டும். 9.மாத நிரந்தர வருவாய் அற்ற குடும்பங்களுக்கு மாதந்தோறும் ரூ7500/நிவாரணம் வழங்கிடல்வேண்டும். 10.வருங்கால வைப்புநிதி வட்டியை உயர்த்திடல் வேண்டும். 11.மின்சார திருத்தச் சட்டத்தை கைவிடல்வேண்டும். 12.தனிநபர் வருமானவரி உச்சவரம்பு உயர்த்தப்படல்வேண்டும்.தொழில்வரி இரத்துசெய்யப்படல் வேண்டும். என்பது உள்ளிட்ட அகில இந்திய வேலைநிறுத்தக் கோரிக்கைகளை ஒன்றிய அரசு உடன் நிறைவேற்றிட வலியுறுத்தி இவ்வார்ப்பாட்டத்தில் கோரிக்கைக்கான ஆதரவு முழக்கங்கள் ஓங்கி உரத்து ஒலிக்கப் பட்டது.












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக