ஞாயிறு, 12 நவம்பர், 2017

செவ்வாய்க் கிரகத்தில் குடியேறினால் நோய் எதிர்ப்பு சக்தி பறிபோகும்: விஞ்ஞானி தகவல்....


செவ்வாய் கிரகத்தில் குடியேறினால் மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும் என்று விஞ்ஞானி எப்ஜினி தெரிவித்துள்ளார்.

பூமியில் உள்ள அனைத்து நிலப்பரப்பு களையும் மனிதன் கண்டுபிடித்து குடி யேறி விட்டான். அடுத்து பூமியை போலவே தட்பவெப்ப நிலை நிலவும் செவ்வாய் கிரகத்தில் மனிதனால் வாழ முடியும் என்று விஞ்ஞானிகள் கூறு கிறார்கள்.

எனவே, மனிதனை செவ்வாய் கிரகத் தில் குடியேற வைக்க தீவிர ஆய்வுகள் நடந்து வருகின்றன.

ஆனால், செவ்வாய் கிரகத்தில் குடியேறினால் மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து அவன் பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாக கூடும். அங்கு உயிர் வாழ்வது கடினம் என்று ரஷ்ய விஞ்ஞானி கூறுகிறார்.

மாஸ்கோவில் உள்ள இயற்பியல் தொழில்நுட்ப கல்வி மைய்யத்தின் பேரா சிரியர் எவ்ஜினி நிகாலோங் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

பூமியின் ஈர்ப்பு விசைக்கு ஏற்றது போல் மனிதனின் உடல் அமைப்புகள் செயல்படுகின்றன. இந்த ஈர்ப்பு விசைக்கு தகுந்த மாதிரி நோய் எதிர்ப்பு சக்திகளும் உடலில் உருவாகின்றன.

ஆனால், செவ்வாய் கிரகத்தில் ஈர்ப்பு சக்தி வேறு மாதிரி இருக்கும். எனவே, மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி மறைந்து விடும். இதன் மூலம் பல்வேறு நோய்களை சந்திப்பான். அங்கு வாழ்வது கடினம்.

விண்வெளியில் ஈர்ப்பு சக்தி இல்லா மல் உள்ளது.
விண்வெளி ஓடத்தில் 6 மாதம் வரை தங்கி இருந்த 18 ரஷ்ய விண்வெளி வீரர்களை ஆய்வு செய்த போது அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து இருந்தது. சாதாரண சூழ்நிலை யில் கூட நோய் கிருமி தாக்குதலுக்கு ஆளானார்கள்.

இதே போல்தான் செவ்வாய் கிரகத் துக்கு மனிதன் சென்றாலும் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

'நீட்’ போன்ற தேர்வுகளை நடத்த புதிய அமைப்பு உருவாக்கம்...


நீட் போன்ற தகுதி
மற்றும் நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்கு
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் கீழ்
தேசிய தேர்வு முகமை ஒன்றை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக முதல்கட்டமாக ரூ. 25 கோடி நிதி ஒதுக்கீடும் செய்துள்ளது.

மாவட்டம்தோறும் அமைக்கப்படும் இந்த தேசிய தேர்வு முகமையே, சிபிஎஸ்இ நடத்தும் அனைத்துத் தேர்வுகளையும் இனிமேல் நடத்தும் என்றும், மேலும், இது முற்றிலும் தன்னாட்சி பொருந்திய அமைப்பாகச் செயல்படும் என்றும் மத்திய அரசுதெரிவித்துள்ளது.

இதன்மூலம் போட்டித் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

எல்லாமே ' செல் ' மயமாகிறது!


வங்கிகள் விரைவில் கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கு‛‛குட்பை''
சொல்லி, செல்போன் மூலமே பரிவர்த்தனையை செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது.

இது குறித்து நிதி ஆயோக் தலைமைச் செயல் அலுவலர் அமிதாப் காந்த் கூறியதாவது : ‛‛ மக்களின் மொபைல் தொலைபேசி மூலமே அனைத்து பணப்பரிவர்த்தனைகளும் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் மக்கள் தொகையில் 72 சதவீதம் பேர் 32 வயதுக்குட்பட்டவர்களாக இருப்பதால் புதிய தொழில்நுட்பங்களை வேகமாக கற்றுக் கொள்ள முடிகிறது . படிப்படியாக அடுத்த 4 ஆண்டுகளில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் தயாரிப்பது குறைக்கப்படும் என்று கூறியுள்ள அவர், வங்கிகளுடன் மொபைல் எண்கள் இணைக்கப்படுவதால் அனைத்து பரிவர்த்தனைகளும் அதன் மூலமே நடைபெறும்'' என்று தெரிவித்தார்.

 

SCERT - NAS - 13.11.2017 அன்று நடக்கும் தேர்வின் போது பள்ளிகளை பார்வையிடும் DIET PRINCIPAL மற்றும் LECTURERS பணிகள்

8ம் வகுப்பு பொது தேர்வு இணையதளத்தில் விண்ணப்பம்

தனி தேர்வர்களுக்கான, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், இணையதளம் வாயிலாக, பதிவு செய்யலாம்' என, அரசு தேர்வுகள் இயக்குனர், வசுந்தராதேவி தெரிவித்து உள்ளார்.

அவரது அறிவிப்பு:தனி தேர்வர்களுக்கான, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு, 2018 ஜனவரியில் நடக்கிறது. அதற்கு, விண்ணப்பிக்க விரும்பும் தனி தேர்வர்கள், நவ., 15ல் இருந்து, 25 வரை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள, சேவை மையங்களுக்கு சென்று, பதிவு செய்யலாம். விண்ணப்பத்துடன், தேர்வு கட்டணம், 125 ரூபாய் மற்றும் இணையதள பதிவு கட்டணம், 50 ரூபாய் என, மொத்தம், 175 ரூபாயை பணமாக, மையங்களில் நேரடியாக செலுத்த வேண்டும்.

தேர்வு தொடர்பான விரிவான தகவல்களை, மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பிளஸ் 2 துணைத்தேர்வு எழுதிய மாணவர்கள் நாளை முதல் விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

பிளஸ் 2 துணை தேர்வெழுதிய மாணவர்கள் நாளை முதல் இணையதளத்தில் விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தரா தேவி நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பு: 

கடந்த செப்டம்பர்-அக்டோபர் மாதம் நடைபெற்ற மேல்நிலைத் துணைத் தேர்வெழுதிவிடைத்தாட்களின் நகல் கோரி விண்ணப்பித்த தேர்வர்கள் 13ம் தேதி (நாளை) பிற்பகல் முதல் scan.tndge.in என்ற இணையதளத்திற்குச் சென்று தங்களது பதிவெண் மற்றும்பிறந்த தேதியினைப் பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரியவிடைத்தாட்களின் நகலினைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விடைத்தாட்களின் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லதுமறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால், இதே இணையதள முகவரியில் Application For Retotalling/revaluation என்ற தலைப்பினை கிளிக் செய்து வெற்று விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். 

இவ்விண்ணப்பப் படிவத்தினை, பூர்த்தி செய்து இரு நகல்கள் எடுத்து வரும் 15ம் தேதி (புதன்கிழமை) காலை 10 மணி முதல் 17ம் தேதி (வெள்ளிக் கிழமை) மாலை 5 மணிக்குள் உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தினை முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

7th TNPC -SR ENTRY - SEAL MODEL

சைனிக் பள்ளியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்


சைனிக் பள்ளியில் வரும் 2018-19 கல்வியாண்டில் 6 மற்றும் 9-ம் வகுப்பில் சேருவதற்காக மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகமும், தமிழக அரசும் இணைந்து சைனிக் என்ற உண்டு உறைவிட பள்ளியை நடத்தி வருகிறது. 

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், அமராவதி நகரில் உள்ள சைனிக் பள்ளியில் வரும் 2018-19 கல்வியாண்டில் 6மற்றும் 9-ம் வகுப் பில் சேருவதற்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

 2018 ஜூலை 1-ம் தேதியன்று 10 வயது முடிந்தும் 11 வயது முடியாமலும் ( 2007 ஜூலை 2-ம் தேதியிலிருந்து 2008 ஜூலை 1-ம் தேதிக்குள்பிறந்திருக்க வேண்டும்) இருக்கும் மாணவர்கள் மட்டுமே 6-ம் வகுப்பில் சேர முடியும்.அதேபோல், 2017 ஜூலை 1-ம் தேதியன்று 13 வயது முடிந்தும், 14 வயது முடியாமலும் (2004 ஜூலை 2-ம் தேதியிலிருந்து 2005 ஜூலை 1-ம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்) இருந்து, அங்கீகாரம் பெற்ற பள்ளியில் 8-ம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் 9-ம் வகுப்பில் சேரலாம்.6-ம் வகுப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வை ஆங்கிலம் அல்லது இந்தியில் எழுதலாம். 9-ம் வகுப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வை ஆங்கிலத்தில் மட்டுமே எழுதமுடியும். 6-ம் வகுப்பில் சேர 90 மாணவர்களும், 9-ம் வகுப்பில் சேர 15 மாணவர்களும் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு செய்யப்படும் மாணவர்களது பெற்றோரின் மாத வருமான அடிப்படையில், அவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை உதவித் தொகை வழங்கப்படும்.இதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கக் குறிப்பேடு பெற பொதுப் பிரிவினர் ரூ.400-ம், எஸ்சி எஸ்டி பிரிவினர் ரூ.250-ம் கட்டணமாக செலுத்த வேண்டும்.விண்ணப்பப் படிவங்கள் வரும் 30-ம் தேதி வரைவிநியோகிக்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிசம்பர் 5-ம் தேதிக்குள் 'முதல்வர், சைனிக் பள்ளி, அமராவதி நகர், உடுமலைப்பேட்டை வட்டம், திருப்பூர் மாவட்டம்-642102' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

கூடுதல் விபரங்களுக்கு  (www.sainikschoolamaravathinagar.edu.in)என்ற இணையதளத்தை
பார்த்து தெரிந்துகொள்ளலாம்...

NAS 2017 -(13/11/2017)-INSTRUCTIONS...

📕 *NATIONAL ACHIEVEMENT SURVEY -NAS (2017)*

*📗 Date: 13/11/2017*

*📗 Shambling schools HM BRC யில் வினாத்தாள் வாங்கி செல்ல வேண்டும்*

📗 *Survey யின் போது ஆசிரியர் & மாணவர் 100% வருகை தரவேண்டும்*

*📗Field* *Investigaters*
*பணிகள்*

1) தேர்வை நடத்துவது

2) 3 க்கும் 5 க்கும் OMR sheets நிரப்புவது

3) ஆசிரியர் மற்றும் மாணவர்களிடம் Interview எடுத்து பதிதல்

📗 *தயார் நிலையில் இருக்க வேண்டியவை:*

1) பள்ளியின் U-DISE NO

2)மாணவர்களின் DOB /ஆதார் என் / சேர்ந்த ஆண்டு / Community / special need

*❌NAS questioner ஐ போட்டோ /Xerox /எடுப்பதும் what's app ல் அனுப்புவதும் தடை செய்யப்பட்டு உள்ளது*

*உதவுவோரும் உரியோரும் தண்டிக்கப் படுவர்*

📗 *Monitoring officers:*

DEE / DSE / SCERT / NCERT / MHRD அலுவலர்கள்

📗 *Supervising Flying squad:*

BDO / REVENUE துறை அலுவலர்கள்

📗 *FIELD INVESTIGATER :*

B.Ed பயிற்சி மாணவர்கள்

📗 *Portion:*

ஆங்கிலம் தவிர்த்த பிற பாடங்கள்