அடுத்த 38 மணி நேரத்துக்குத் தென் மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம்
கூறியதாவது...
தென் மேற்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் இந்திய பெருங்கடல் வரை மேலடுக்கு சுழற்சி பரவியுள்ளது. இதனால் அடுத்த 38 மணி நேரத்திற்குத் தென் மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது "என்று தெரிவித்துள்ளது.
மேலும் நவம்பர் 29 ஆம் தேதி தென்கிழக்கு வங்க கடலில் தமிழகம், இலங்கையையொட்டியுள்ள பகுதியில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளது. இதனால், தமிழகம், புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.