சனி, 9 டிசம்பர், 2017

ஆதாருடனான~ அனைத்துவகையான இணைப்புகள்(LINKS)...



*Aadhaar Update Link*


*Link Aadhaar & Pan*

*Link Aadhaar To Lic Policy*
  
*Link Aadhaar With Indane Gas*


*Link Aadhaar With HP Gas*


*Link Aadhaar With Bharat Gas*


*Link Aadhaar To SBI Bank*


*Link Aadhaar To Indian Bank*


*Aadhaar Official Website*


*Link To Download Aadhaar Card*


*Official Notice To Link Aadhaar With Mobile Networks*


*Link Aadhaar With Airtel Mobile Number*


*Link Aadhaar With India Post*

அரசு நிதி உதவி பள்ளி உபரி ஆசிரியர் கண்டறிதல்...

ஜேக்டோ ஜியோ உயர்மட்டகுழு கூட்டம்(8/12/17)...

ஜேக்டோ  ஜியோ உயர்மட்டகுழு கூட்டம்   மதுரை அரசு ஊழியர் சங்கக் கட்டிடத்தில்  8.12.2017 மாலை 5 மணியளவில் நடைபெற்றது. 
இக்கூட்டதிற்கு  ஜேக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பார்கள் மோசஸ, சுப்ரமணியன், சுரேஷ் ஆகியோர் தலைமை வகித்தனர்கள். 

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

1.ஓகி புயலால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் விவசாயிகளுக்குரிய நிவாரணத்தை தமிழக உடன் அரசு வழங்க வேண்டும்.

2. உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவிற்கு மாறாக  அரசு ஊழியர் / ஆசிரியர்கள் மீது தமிழக அரசும் காவல்துறையும் தற்காலிக பணி நீக்கம் உள்ளிட்டு எடுத்துள்ள நடவடிக்கைகளை ரத்து செய்ய அனைத்து மாவட்டத்திலும் நீதி அரசர்களிடம் 2 1 - 12-17 அன்று முறையீடு செய்வது.

3. ஓய்வூதியம் பாதுகாப்போம்மற்றும் உரிமைகள் மீட்போம் என்ற தலைப்பில்  கருத்தரங்கம் திருச்சியில் 31.12 .17. அன்று  ஜாக் டோ - ஜியோ சார்பாக நடத்துவது.

4.அரசு ஊழியர் ஆசிரியர்களின் கோரிக்கைகளான...

 (1) புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்தல்  பழைய ஓய்வூதியத்தை அமுல்படுத்தல்,

( 2)  21 மாத ஊதிய நிலுவைத் தொகை வழங்க வேண்டும்,

(3)சத்துணவு,அங்கன்வாடி, ஊராட்சி செயலாளர்,கிராம உதவியாளர், பகுதி நேரம்/தொகுப்பூதிய ஆசிரியர்கள் உள்ளிடோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், 

(4)இடைநிலை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள்,உயர்நிலை/மேல்நிலை ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைதல், 

(5)குறைந்தபட்ச ஊதியம் 18000/- வழங்குதல், 

(6) பல்கலைக் கழக ஆசிரியர்களுக்கு ஊதிய மாற்றத்தை  அமுல்படுத்துதல்,

 (7) அரசு ஊழியர்கள்/ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்தல், 

(8) குறைந்தபட்ச ஓய்வூதியதியம் ரூ.9000/_ வழங்குதல் உள்ளிட்ட நிலுவை கோரிக்கைகளை டிசம்பர் 2017க்குள் நிறைவேற்றவில்லை என்றால் 2018 ஜனவரி 4வது வாரத்தில் இருந்து சென்னையில் தொடர் மறியல் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் ஜேக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் . மாயவன்,மீனாட்சி சுந்தரம்,முத்துசாமி,அன்பரசு,வெங்கடேசன்,தாமோதரன்,தாஸ், செய்தித்தொடர்பாளர் தியாகராஜன் உள்ளிட்ட பல்வேறு சங்கப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

அறிவோம் FORM 16...



ஊழியர்கள் சம்பளத்தில் வருமான வரி பிடித்தம் செய்த பின், அவரவர் PAN A/C பணம் செலுத்தினால் மட்டுமே, FORM 16 பெறமுடியும்.

2016-2017 நிதி ஆண்டில் கழித்த வரிகளைப் பற்றி நிறுவனங்கள் உங்களுக்குத் தெரிவிக்கும் நேரம்

ஒவ்வொரு மாதமும் நிறுவனங்கள் உங்கள் வருமானத்தில் இருந்து வரியை பிடித்தம் செய்து அதனை அரசுக்கு அளிக்கும். ஊழியர்கள் யாருக்கெல்லாம் டிடிஎஸ் பிடிக்கப்பட்டுள்ளதோ அவர்களுக்கு அதற்கான சான்றிதழ்களை அளிக்க வேண்டும் என்று வருமான வரிச் சட்டம் கூறுகின்றது.

1961 ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 203 ன் கீழ், வருமானத்தில் டிடிஎஸ் காட்டும் ஊழியர்களுக்குப் படிவம் 16-ஐ மே 31-ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

இப்போது அதற்கான காலக்கெடுவை ஜூன் 15-ம் தேதி வரை நீட்டிப்பு செய்து ஜூன் 2-ம் தேதி வருமான வரித்துறை அறிவித்துள்ளது. ஒருவேலை டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படவில்லை என்றால் நிறுவனம் படிவம் 16- ஐ அளிக்க வேண்டிய அவசியம் இல்லை.

கூடுதல் அவகாசம் உண்டா? பட்ஜெட் 2016-ல் டிடிஎஸ்-ஐ சமர்ப்பிக்கக் கூடுதல் அவகாசம் அளித்தது.

அதனால் சென்ற ஆண்டு டிடிஎஸ் சமர்ப்பிக்கக் கூடுதல் நாட்களும் அளிக்கப்பட்டது. ஆனால் இந்த முறை அப்படி எந்த அறிவிப்பு வெளியாகவில்லை படிவம் 16-ஐ மே இறுதிக்குள் நிறுவனங்கள் அளித்தாக வேண்டும். நிறுவனங்களுக்கு அபராதம் நிறுவனங்களுக்குப் படிவம் 16-ஐ ஊழியர்களுக்கு அளிக்க வேண்டும் என்பது கட்டாயம் ஆகும்.

1961 ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 203 ன் கீழ் வரையறுக்கப்பட்ட வருமான வரி விதிகள் 1962-ன் படி படிவம் 16-ஐ தற்போது வேலை செய்யும் அல்லது எந்த முந்தைய நிறுவனத்தில் வழங்குவது கட்டாயம் ஆகும்.

*ஒருவேலை ஊழியர்களுக்கு நிறுவனம் டிடிஎஸ் பிடித்தம் செய்து படிவம் 16-ஐ வழங்கவில்லை என்றால் அபராதங்கள் செலுத்த வேண்டி வரும்.

காலத் தாமதம் ஆகும் ஒவ்வொரு நாளுக்கும் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

இது பிடித்தம் செய்யப்பட்ட டிடிஎஸ்-ஐ விட அதிகம் இருக்காது. டிடிஎஸ் பிடித்தம் செய்யப்பட்ட படிவம் 16 உங்களுக்குக் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் வேலை செய்த அல்லது வேலை பார்க்கும் நிறுவனத்தில் உங்களுடைய சம்பளத்தில் இருந்து டிடிஎஸ் பிடித்தம் செய்யப்பட்டு அதற்கான படிவம்-16ஐ அவர்கள் உங்களுக்கு வழங்க மறுத்தால்

அதற்கான மதிப்பீட்டு அதிகாரிகளுடன் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளிக்கலாம்.

ஊழியர்களுக்கு இதைவிட்டால் வேறு வழியில்லை.

இப்படி ஊழியர்கள் புகார் அளிக்கும் போது நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

படிவம் 16-ல் என்னவெல்லாம் இருக்கும்?

படிவம் 16-ல் ஊழியர்களுக்கு நிறுவனம் அளித்த சம்பளம் மற்றும் பிடித்தம் செய்யப்பட்ட டிடிஎஸ் விவரங்கள் அனைத்தும் இருக்கும்.

படிவம் 16 பாகம் A மற்றும் பாகம் B என இரண்டாகப் பிரிக்கப்படுகின்றது.

படிவம் 16 பாகம் A பெயர், முகவரி, பான் மற்றும் டான் விவரங்கள், நிறுவனத்தில் பணிபுரியும் காலப்பகுதி போன்ற பணியாளர் மற்றும் பணியாளரின் அடிப்படைத் தகவல்கள், டி.டி.எஸ்ஸின் சுருக்க விவரங்கள்,

அரசாங்கத்துடன் டெபாசிட் செய்யப்பட்ட விவரங்கள் ஆகியவை பகுதி A-ல் இருக்கும்.

படிவம் 16 பாகம் B சம்பளத்தில் இருந்து கட்டணமாகச் செலுத்த வேண்டிய தொகை, மற்றும் ஊழியர்களின் பிற வருமான விவரங்கள்,

பிரிவு 80 சி, பிரிவு 80 டி மற்றும் அத்தியாயம் 6-ல் உள்ள பல்வேறு விவரங்கள் இருக்கும்.

எங்கிருந்து படிவம் 16 பாகம் A மற்றும் B பெறப்படுகின்றது இறுதியாக,

மொத்த வருமானத்திற்கான புள்ளிவிவரங்கள் (முந்தைய ஆண்டின் காலத்தில் பெற்றவை) மற்றும் அதனுடன் பொருந்தும் வரி ஆகியவற்றை அது செயல்படுத்தும்.

'பகுதி A ஐ தரவும், ட்ராஸ் போர்ட்டல் வழியாகப் பதிவிறக்கம் செய்யப்பட வேண்டும்,

படிவம் 16 இன் பகுதி A யில் தனிப்பட்ட டிடிஎஸ் சான்றிதழ் எண் உள்ளது,

பாகம் B கைமுறையாகத் தயாரிப்பாளரால் தயாரிக்கப்பட்டுப் பகுதி A உடன் வழங்கப்படும்.

இத்தனை காலம் கழித்துத்தான், இந்த விவரம் தெரிய வந்தது.
ஒரு சிலரே இத்தனை காலம் வரிப்பணத்தை திரும்ப பெற்று வருவதை இனி அனைவரும் பெற்று பயனடைவோமா?...

குறிப்பு:

மிக எளிய வழி அவரவர் PAN A/C-ல், வங்கியில் பணம் செலுத்துவது நல்லது.

வெள்ளி, 8 டிசம்பர், 2017

ஏடிஸ் கொசுப்புழு இல்லை என வியாழன் தோறும் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு அனுப்ப வேண்டிய வாரந்திர சான்று...

JACTTO-GEO அடுத்தகட்ட போராட்ட அறிவிப்பு...



கோரிக்கைகள் :

புதிய ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்தல்,

இடைநிலை & முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டைக் களைதல்,

போராட்ட பாதை :

21.12.2017 வியாழன் அன்று,

மாவட்டத் தலைமை நீதிபதிகளிடத்திலும்

சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி / பதிவாளரிடத்திலும்

முறையீட்டு மனு அளித்தல்
______________________________________

30.12.2017-ற்குள் தமிழக அரசு இக்கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில்,

31.12.2017 ஞாயிறு அன்று திருச்சியில்
உரிமைப் போராட்டங்களில் நீதிமன்றங்களின் தொடர் தலையீடுகள் குறித்தும், தொடர் இயக்க நடவடிக்கை குறித்தும்,

ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளை அழைத்து,
கருத்தரங்கு நடத்துதல்

____________________________________

சனவரி 4-வது வாரத்தில் இருந்து,
சென்னையில்
காலவரையற்ற தொடர் மறியலில் ஈடுபடுதல்

அன்பானவர்களே! வணக்கம்.

எருமப்பட்டி ஒன்றிய உதவித்தொடக்கக்
கல்வி அலுவலரும்,
அலுவலக நிர்வாகமும் ஒன்றிய ஆசிரியர்களுக்கு நவம்பர் மாத பழைய/புதிய ஊதியத்தினையும்,
புதிய ஊதிய மாற்றத்திற்கான அக்டோபர் மாத ஊதிய நிலுவை ஊதியத்தினையும் இதுவரையிலும்(டிசம்பர்8)பெற்று வழங்கிடாத மெத்தனப்போக்கினை கண்டித்தும், உடனடியாக பெற்று வழங்கிட வலியுறுத்தியும்,அலுவலகப் பணியாளர்களின் குழுவாதப்போக்கிற்கு உடனடி தீர்வு காணும் வகையினில் அலுவலகப்பணியாளர்களை  ஒட்டுமொத்தமாக நிர்வாக இடமாறுதல் செய்திட வற்புறுத்தியும்  தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டச்செயலாளராகிய நான் (முருகசெல்வராசன்)வரும் 11.12.2017(திங்கள்)முற்பகல் 09.30மணியிலிருந்து எருமப்பட்டி உதவித்தொடக்கக்
கல்வி அலுவலகம் முன் தனிநபர் சத்தியாகிரகம் மேற்கொள்கிறேன்.

பொதுநலனில் ஆர்வமுடையோர் ஆதரிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
நன்றி.
~முருகசெல்வராசன்.

தொடக்கக்கல்வித் துறையில் 1-8 வகுப்பு கற்பிக்கப்படும் பாடங்களில் பட்டம் பெற்றால் மட்டும் இனி ஊக்க ஊதிய உயர்வு பெற முடியும் தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறைகள்...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தலைவரும்,நாமக்கல் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளருமான திரு.சு.சிதம்பரம் அவர்கள் இராசீபுரம் வட்டத்தின் அனைத்து வகை ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உயர்த்தப்பட்ட வீட்டு வாடகைப்படி பெற்று பயன்பெறும் வகையில் பெற்றுள்ள தகவல்களின் விபரம்...

Epayslip site...