செவ்வாய், 12 டிசம்பர், 2017

தொடக்கக்கல்வி -அனைத்து மாணவர்களுக்கும் 31.12.1017 க்குள் ஆதார் - இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்...

இருசக்கர வாகன ஓட்டிகள் சாலை பாதுகாப்பு கையேடு.pdf

NMMS exam DEC-2017, Date 16-12-2017, Dowload Hall ticket using school user id & password...

website address

EMIS NEWS:தற்போது EMIS வலைதளம் செயல் பாட்டில் உள்ளது.ஆனால் போட்டோ அப்லோடு வசதி செய்யப்படவில்லை...



தற்போது EMIS வலைதளம் செயல் பாட்டில் உள்ளது.ஆனால் போட்டோ அப்லோடு வசதி செய்யப்படவில்லை.போட்டோ அப்லோடு வசதி அன்ராய்டு அப்ளிகேஷன் மட்டுமே செய்யமுடியும்.அங்கீகரிக்கப்பட்ட android application புதன் கிழமை வெளிவரும்.ID card சம்மந்தமான பதிவுகள் அனைத்தும் ஆன்ராய்டு அப்ளிகேஷன் மூலம் மட்டுமே செய்ய முடியும்.தற்போது ஆதார் எண் ஏற்கனவே ஏற்றப்பட்டதில் பல விடுபட்டு உள்ளன.எனவே அனைத்தையும் சரிபார்க்கவும்.நம் பள்ளியை விட்டுசென்றவர்களை Transfer செய்யவும்.நம்பள்ளிக்கு வந்தவர்களை search student ல் ஆதார் எண், பிறந்த தேதி அடிப்படையில் தேடி ( நேரடி சேர்க்கையாயினும்) அம்மாணவன் admit வசதி இருப்பின் அப்படியே சேர்க்கவும்.

வானிலை, 'லைவ்' இணையதளம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது...



ஆறு மாதங்களுக்கு பின், சென்னை வானிலை மையத்தின், 'லைவ்' தகவல் இணையதளம், மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.


இந்திய வானிலை ஆய்வு மையத்தின், தென் மண்டல வானிலை ஆய்வு மையம், சென்னையில் செயல்படுகிறது. இங்கு செயற்கை கோள் வழி கண்காணிப்பு, மழை, வெப்பநிலை கண்காணிப்பு மையம், ரேடார் ஆய்வு மையம் ஆகியவை செயல்படுகின்றன. சென்னை துறைமுக கட்டடத்தில், ரேடார் அமைக்கப்பட்டுள்ளது. இது, சென்னையின், 500 கி.மீ., சுற்றளவை கண்காணித்து, தகவல்களை அளிக்கும்.


'வர்தா' புயலின் போது, ரேடார் தொழில்நுட்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டன. அதை, இந்திய வானிலை மையம், சில மாதங்களில் சரி செய்தது. ஆனாலும், சென்னைக்கான, 'லைவ்' வானிலை தகவல் அளிப்பதில், சில சிக்கல்கள் இருந்தன. அதனால், ஆறு மாதங்களாக, சென்னை வானிலை மையத்தின், சென்னை, 'லைவ்' வானிலை தகவல் பக்கம், செயல்படாமல் இருந்தது.


தற்போது, தொழில்நுட்ப பிரச்னைகள் சரிசெய்யப்பட்டு, மீண்டும், 'லைவ்' வானிலை தகவல் பக்கம், செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதன் வழியே, ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் முந்தைய வெப்ப நிலை, பனி, காற்றில் உள்ள ஈரப்பத அளவு, மழை அளவு, காற்றின் வேகம் போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம்.

ஆசிரியர்களுக்கு ஓர் நற்செய்தி...



நம்  PTPF  கணக்கில் செலுத்தும்  மாதச்சந்தா தொகை மற்றும் கடன் திருப்பம் ,  பகுதி இறுதி தொகை விவரங்கள், இருப்பு முதலிய  விவரங்கள் அவரவர் செல்போனுக்கு இன
11/12/2017   SMS மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் விவரங்கள் சரி பார்த்துக்கொள்ளலாம்.

"EMIS" ENTRY THROUGH YOUR SMARTPHONE~Video...

திங்கள், 11 டிசம்பர், 2017

தமிழ் வாசிப்பு பயிற்சி...

தொடக்கப் பள்ளி மாணவர்களை ஆங்கிலத்தில் பேச வைக்கத் திட்டம்...


தமிழகத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களை பாடல்கள், எளிய வார்த்தைகள் மூலமாக ஆங்கிலத்தை சரளமாகப் பேச வைப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சில நாள்களுக்கு முன்னர் வெளியான புதிய வரைவுப் பாடத் திட்டம் குறித்து இணையதளம் மூலம் கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பல்வேறுகருத்துகள் பெறப்பட்டன. அதில் மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளி மாணவர்களை ஆங்கிலத்தில் பேச வைக்க வேண்டும் என பலர் வலியுறுத்தியிருந்தனர்.

இதற்கான நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித் துறை ஏற்கெனவேமேற்கொண்டு வந்த நிலையில் தற்போது பொதுமக்களின் கருத்தையும் பரிசீலித்து அதற்கான திட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்துடன், அனைவருக்கும் கல்வித் திட்டம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், இந்த ஒப்பந்தத்தின்படி முதல் கட்டமாக சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை ஆங்கிலத்தில் பேசவைக்க முடிவு செய்துள்ளோம்.

90 தலைமையாசிரியர்களுக்குப் பயிற்சி:

ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை ஆங்கிலத்தில் சரளமாகப் பேச வைக்க தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கத் திட்டமிடப்பட்டது.அதன்படி சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 90 தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பயிற்சி முடித்த தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிப்பர்.

ஆசிரியர்கள் மாணவர்களை எளிதில் ஆங்கிலத்தில் பேச வைப்பதற்கான செயல்பாடுகளை மேற்கொள்வர். புத்தகங்கள் - சி.டி.க்கள்... ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியருக்கும் 90 வகையான புத்தகங்கள், 4 சி.டி.க்கள் ஆகியவை அனைவருக்கும் கல்வி திட்டம் மற்றும் தனியார் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டுள்ளன. இந்த முயற்சி வெற்றி பெற்றால் மேலும் சில மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்றனர்.

தேசிய பாடத்திட்டத்தில் பாரதியார் பாடல்கள்... துணை ஜனாதிபதி விருப்பம்!



சென்னை: 
''பாரதியார் பாடல்களை, தேசிய பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்,''
என, துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு பேசினார்.

வானவில் பண்பாட்டு மையம் சார்பில், பாரதி விழா, சென்னை மயிலாப்பூரில் நேற்று நடந்தது.
விழாவில், சி.பி.ஐ., முன்னாள் முதன்மை இயக்குனர், கார்த்திகேயனுக்கு, பாரதி விருதை, துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு வழங்கி பேசியதாவது: பாரதியாரின் பாடல்கள் அனைத்தும் கருத்துக்கள் செறிந்தவை. மனிதர்களிடம் ஏற்றத்தாழ்வு கூடாது என, அவர் வலியுறுத்தி உள்ளார். பாரதியாரின் பாடல்களை, தேசிய பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
தமிழும், தமிழகமும் எனக்கு நெருக்கமானவை. அரசியல் வாழ்க்கையில் ஈடுபட்ட போது, எனக்கு தமிழை கற்க நேரமில்லை. அனைவரும், அவரவர் தாய்மொழியில், பேசுவதே சிறப்பு. நான் தற்போது எந்த கட்சியையும் சார்ந்தவன் அல்ல. நாம் முயற்சி கண்டால், பாரதி கண்ட புதுமை தேசத்தை அடையலாம்.இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், கவர்னர் பன்வாரிலால் புரோஹித், அமைச்சர் பாண்டியராஜன், இல. கணேசன் எம்.பி., - ஆர்.நட்ராஜ் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் பங்கேற்றனர்.