ஞாயிறு, 17 டிசம்பர், 2017

Facebook வழங்கிய "ஸ்னூஸ்" வசதி...



ஃபேஸ்புக் நிறுவனம் "ஸ்னூஸ்" என்ற வசதியை புதிதாக
வழங்கி உள்ளது.

  இதன் மூலம் பயனர்கள் குறிப்பிட்ட நபர்களை 30 நாட்களுக்கு மட்டும் தற்காலிகமாக தடை செய்து வைக்கும் வசதியை வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்னதாக "பிளாக்" என்ற வசதியின் மூலம் பயனர்கள் தங்களுக்கு விருப்பமில்லாத நபரின் தகவல்களை நிரந்தரமாகத் தடைசெய்ய முடியும். 

ஆனால் தற்போது வெளியாகி உள்ள இந்த ஸ்னூஸ் வசதியின் மூலம் 30 நாட்கள் தற்காலிகமாக மட்டும் ஒரு நபரின் தகவல்களை தடை செய்து வைக்க இயலும்.

இதன் மூலம் தடைசெய்யப்பட்ட நபர், பயனரின் தகவல்களை காண இயலாது. ஒரு தனி நபர் மட்டுமின்றி ஒரு குரூப்பினை தற்காலிகமாகத் தடை செய்யவும் இந்த "ஸ்னூஸ்" வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய வசதியின் மூலம் தேவையற்ற செய்திகளை தடைசெய்து தேவையான தகவல்களை மட்டும் பயனர்கள் எளிதில் பெற்றுக்கொள்ள முடியும் என ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடக்க பள்ளிகளில் மாணவர்களின் 'EMIS' எண்ணோடு, ஆதார் எண்ணை டிச.31-க்குள் 100 சதவீதம் இணைத்து அனுப்ப கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது...

பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை போலியாக காண்பித்தல், நலத்திட்ட உதவிகளில் முறைகேட்டில் ஈடுபடுதல் உள்ளிட்டவையை களைய 'EMIS' என்ற கல்வி மேலாண்மை தகவல் தொகுப்பு உருவாக்கப்பட்டது. 

மாணவர்களுக்கு தனி இலக்க அடையாள எண் வழங்கப்பட்டு, அவர்களது பெயர், ரத்த வகை, பெற்றோர் பெயர், வருமானம், முகவரி, புகைப்படம், அலைபேசி எண் உள்ளிட்ட விபரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

'EMIS' எண்ணோடு மாணவர்களின் ஆதார் எண்ணையும் இணைக்கும் பணியில் தலைமை ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். 'EMIS' எண்ணோடு இதுவரை ஆதார் எண் பதியாத பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் டிச.31-க்குள் ஆதார் எண்ணை பதிவு செய்து 100 சதவீத பணியை நிறைவு செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: 'EMIS' எண்ணோடு ஆதாரை இணைப்பதன் மூலம் மாணவர்களின் எண்ணிக்கை துல்லியமாக கணக்கிடப்படும். 'EMIS' அடிப்படையில் வருகின்ற கல்வி ஆண்டில் பள்ளி கல்வி துறை சார்பில் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.
இதற்கான பிரத்யேக அலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்களின் விபரங்களை எங்கிருந்தும் கண்காணிக்கலாம். வேறு பள்ளிக்கு மாணவர் மாற்றம் கேட்டால், 'EMIS' இணையதளத்தில் மாணவரை மாற்றம் செய்தால் மட்டுமே, புதிய பள்ளியில் சேர்க்க முடியும், என்றார்.

காந்தி ஆசிரம பொருட்களை பயன்படுத்த பொதுமக்கள் முன்வர வேண்டும்~நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்...

EMIS Login Time...


24 hours will be from morning 7am to next day 7am.

7am லிருந்து அடுத்த District session ஆரம்பிக்கிறது.

எனவே நாம் உதாரணமாக திங்கள் காலை 7லிருந்து செவ்வாய் கிழமை காலை 7am வரை Login செய்யலாம்...


திறன் தேர்வு: 1.45 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு!



தமிழகம் முழுவதும் தேசிய வருவாய் வழி, திறன்
படிப்பு உதவித் தொகை திட்டத் தேர்வு (டிசம்பர் 16) நடைபெற்றது.

பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கத்தில், திறனாய்வுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை திட்டத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான (NMMS) திறனாய்வுத் தேர்வு டிசம்பர் 9ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

மழையால் பல்வேறு மாவட்டங்களில் பணிகள் பாதிக்கப்பட்டதால், தேர்வு டிசம்பர் 16ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் திறன் தேர்வு நடைபெற்றது. அதற்காகத் தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், 503 மையங்கள் அமைக்கப்பட்டது. சுமார் 1,45,996 மாணவர்கள் இத்தேர்வில் பங்கேற்றனர். காலை 9.30 மணி முதல் 11.30 வரை முதல் தாள், காலை 11.30 முதல் பகல் 1 மணி வரை இரண்டாம் தாள் என இரு தாள்களாகத் தேர்வு நடைபெற்றது.

சனி, 16 டிசம்பர், 2017

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்_ நாமக்கல் மாவட்ட இணையக்குழுக் கூட்டம் ( 16/12/17_ சனிக்கிழமை) கபிலர்மலை ஒன்றிய மன்றம் அலுவலகம்_ வேலூர்~நிகழ்வுகள்...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ,
நாமக்கல் மாவட்ட இணையக்குழுக்
கூட்டம்
மாவட்ட அமைப்பாளர்
திரு .மெ.சங்கர் தலைமையில் கபிலர்மலை ஒன்றிய மன்ற அலுவலகத்தில் 16.12.17(சனி)
முற்பகல் 11.30 மணிக்கு நடைபெற்றது.

இக்கூட்டத்தில்
பங்கேற்ற
சமூக வலைதள
செயற்பாட்டாளர்களின் கருத்துக்களின் அடிப்படையில் அறிவியல் தொழில்நுட்பங்களை கையாண்டு ஆசிரியருக்கு தகவல்களை  பரப்புவது, பரிமாற்றம் செய்துகொள்வது  என்றும், அறிவியல் தொழில்நுட்பக் கருவிகளை பரப்புரைக்கு 
(பிரச்சார) பயன்படுத்திக் கொள்வது என்றும் முடிவாற்றப்பட்டது.

உற்சாகமாகப் பணியாற்றும் சூழல் தேவை~ தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்தல்...


நன்றி:தினமணி-16.12.17 

ஆசிரியர்களை கல்வி அதிகாரிகள் அவமரியாதையாகப் பேசாமல், கனிவுடன் பேசி உற்சாகமாகப் பணியாற்றும் சூழலை ஏற்படுத்த வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக அமைப்பின் மாவட்டச் செயலர் முருக செல்வராசன், மாவட்டத் தொடக்க கல்வி அலுவலருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் அரசு துவக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை கல்வித் துறை உயர் அதிகாரிகள் மரியாதையாக நடத்த வேண்டும். கற்றல், கற்பித்தல் பணியில் சுதந்திரமான சூழ்நிலையில் பணியாற்ற வழிவகை செய்ய வேண்டும்.
பள்ளிப் பார்வை, ஆய்வு, ஆய்வுக் கூட்டங்களில் காணப்படும் குறைபாடுகளை நாகரிகமான வார்த்தைகளால், சூழலுக்கு ஏற்ப புதிய யுக்தியுடன் சுட்டி காட்டி குறைகளைக் களைந்திட வேண்டும்.
தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களை மனித தன்மையுடன் நடத்த வேண்டும். இதுதொடர்பாக உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு கல்வித் துறையினர் அறிவுரைகளை வழங்க வேண்டும். மேலும், ஆசிரியர்கள் உற்சாகமாகப் பணியாற்றும் சூழலையும் ஏற்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

ஓய்வூதிய உரிமையை பறிக்காதீர்! மத்திய,மாநில அரசுகளிடம் ஆசிரியர் மன்றம் வலியுறுத்துகிறது...

ஓய்வூதியர் நாள் 

ஓய்வூதியர் நாள்
(Pensioners' Day), 
இந்தியாவில் 
ஆண்டு தோறும் டிசம்பர் 17 ஆம் நாளன்று கொண்டாடப்படுகிறது. 
டிசம்பர் 17, 1982-ஆம் நாளில், 
இந்திய உச்ச நீதிமன்றம்,
 ஓய்வூதியம் குறித்து வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை நினைவுகூரும் வகையில்
 இந்நாள் ஒவ்வொரு ஆண்டும்
 ஓய்வூதியர்களால்
இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இத்தகு பெருமைமிகு நாளில் இந்திய அரசையும்,
தமிழக அரசையும் நோக்கி
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி 
ஆசிரியர் மன்றத்தின்
நாமக்கல் மாவட்ட அமைப்பு 
கோரிக்கையை வலியுறுத்துகிறது.

மத்திய,மாநில அரசுகளே!

ஓய்வூதியத்தை மறுக்கின்ற;
பறிக்கின்ற,
மாத ஊதியத்தில் ஊதியவெட்டு ஏற்படுத்துகின்ற
மோசடிநிதித்
திட்டமான
புதிய தன்பங்கேற்பு ஓய்வூதியத்
திட்டத்தினை (CPS)முற்றிலுமாக விலக்கிக்கொள்ளுங்கள்;கைவிடுங்கள்.

ஆசிரியர்களை,அரசு அலுவலர்களை,
தொழிலாளர்களை,உழைக்கும் மக்களை 
ஏமாற்றாதீர்;வஞ்சிக்காதீர்.

           ~முருகசெல்வராசன்.

18.12.17 முதல் 17.01.18 வரை பெங்களூரில் ஆங்கிலப்பயிற்சி~ தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு...




கோயம்புத்தூர் மாவட்ட பள்ளி குழு பார்வை குறித்து முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்...