வெள்ளி, 22 டிசம்பர், 2017

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் தேர்வு முறையில் விரைவில் மாற்றம். தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எழுத்துத் தேர்வு...

இடைநிலை ஆசிரியர் , பட்டதாரி ஆசிரியர் தேர்வு முறையில் விரைவில் மாற்றம்...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பள்ளிப்பாளையம் ஒன்றியக்கிளையின் செயற்குழுக்கூட்டம் இன்று (22.12.17-வெள்ளி)பிற்பகல் 04.45மணிக்கு...

அன்பானவர்களே!
வணக்கம்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி
ஆசிரியர் மன்றத்தின்
பள்ளிப்பாளையம் ஒன்றியக்கிளையின் செயற்குழுக்கூட்டம் இன்று (22.12.17-வெள்ளி)பிற்பகல் 04.45மணிக்கு குமாரபாளையம் நகராட்சி மேற்குகாலனி நடுநிலைப்பள்ளியில் ஒன்றியத்தலைவர்  மதிப்புமிகு.டெசுமா.பி.கண்ணன் அவர்களின் தலைமையில் நடைபெறுகிறது.
ஒன்றியச்செயலாளர் மதிப்புமிகு.சகோதரர்.சி.இளையராசா அவர்கள் கூட்டத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார்.
இன்றைய பள்ளிப்பாளையம் ஒன்றியக்கூட்டம் அதிமுக்கியத்துவம்கொண்டதாகும் என்பதை நான் சுட்டிக்காட்டுகிறேன்.

இன்றைய பள்ளிப்பாளையம் ஒன்றியக்கூட்டத்தின் முக்கியத்துவத்தை மனதினில் கொண்டு நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த மாநில,மாவட்ட,
ஒன்றியப்பொறுப்பாளர்கள் மற்றும் மன்றமுன்னோடிகள் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்று இக்கிளைக்கு ஆதரவினை நல்குமாறு
 அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
                  நன்றி.
           ~முருகசெல்வராசன்.

DSE - இணையதளம் வாயிலாக கலந்தாய்வு நடைபெற உள்ளதால் ஆசிரியர் விபரம் மற்றும் காலிப்பணியிட விபரம் online-ல் 26.12.2017 முதல் பதிவு செய்ய பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு, கடிதம் நாள்: 21.12.2017.

தொடக்கக் கல்வி அலுவலகச் செய்தி...

                              
*இயக்குநர் அவர்களின்
விடுமுறைப் பட்டியல்படி
வரும் 23.12.17 சனிக்கிழமை
பள்ளி வேலைநாள் ஆகும்.                    
*24.12.17 முதல் 1.1.18 முடிய
இரண்டாம் பருவத்தேர்வு
விடுமுறை ஆகும்.

*மீண்டும் பள்ளி
2.1.18  (செவ்வாய்)அன்று
திறக்கப்படும்.                           
*பள்ளி திறந்த(2.1.18)அன்றே
மூன்றாம் பருவ புத்தகம் மற்றும்
குறிப்பேடுகளை வழங்கி
மாணவர்களிடம் கையொப்பம்
பெற்றிருக்க வேண்டும்.

//தகவல்பகிர்வு:
முருகசெல்வராசன்//

வியாழன், 21 டிசம்பர், 2017

நாமக்கல் மாவட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மாவட்ட நீதிமன்றத்தில் கோரிக்கை மனு அளிப்பு...


நாமக்கல் மாவட்ட ஜாக்டோ ஜியோ பொறுப்பாளர்கள் இன்று (21/12/17) பிற்பகல் 03.00 மணியளவில் நாமக்கல் மாவட்ட நீதிபதியின் நேர்முக உதவியாளர் அவர்களை சந்தித்து 
ஜாக்டோ ஜியோ அமைப்பின் கோரிக்கை மனுவை  அளித்தனர்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இம்மனுவை அனுப்பி வைக்குமாறு  கேட்டுக் கொண்டனர். 

இச்சந்திப்பு நிகழ்வில் மன்றத்தின் மாவட்டச் செயலாளர் திரு.முருகசெல்வராசன், மாநில விதிமுறைக்குழு உறுப்பினர் திரு.இராஜேந்திரன், மாநில தீர்ப்புக்குழு உறுப்பினர் திரு.பன்னீர்செல்வம், புதுச்சத்திரம் ஒன்றியத் தலைவர் திரு.பன்னீர்செல்வம், செயலாளர் திரு.கதிரேசன் , கபிலர்மலை செயலாளர் திரு.சங்கர் மற்றும் நாமகிரிப்பேட்டை செயலாளர் திரு.மோகன்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Phonetic Songs: 11~15…

பதவி உயர்வில் தவறுதலாக option கொடுத்து குறைவான ஊதியம் கிடைத்தால் G.o: 311ன்படி மீண்டும் மறுநிர்ணயம் (reoption) செய்து கொள்ளலாம்...

திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு அரசு பணி வழங்கலாம் அரசாணை வெளியீடு...


தமிழக உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் சுனில்பாலீவால் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுஇருப்பதாவது:

10–ம் வகுப்பு, பிளஸ்–2 ஆகிய வகுப்புகளில் தேர்ச்சி பெற்றபிறகு பல்கலைக்கழக மானியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் சேர்ந்து இளங்கலை மற்றும் முதுகலைபட்டப்படிப்பு படித்து பட்டம் பெறலாம். பின்னர், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் நேரடி முறையில் சேர்ந்து, முழுநேரமாகவோ அல்லது பகுதி நேரமாகவோ எம்.பில்., பி.எச்டி. ஆகிய படிப்புகள் படித்து பட்டங்கள் பெறுபவர்களுக்கு, அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பணிநியமனம் மற்றும் பதவி உயர்வு வழங்கலாம் என அங்கீகரித்து ஆணையிடப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

TNPSC-DEPARTMENTAL EXAM,DECEMBER -2017~ Hall Ticket Download…