செவ்வாய், 26 டிசம்பர், 2017

தமிழ் பாட புத்தகத்தில் சி.பா.ஆதித்தனார் வரலாறு~ பள்ளிக்கல்வி அமைச்சர் அறிவிப்பு...


சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர்  பாடத்திட்டங்கள் குறித்த கருத்துகள் பரிசீலித்து வரப்படுகின்றன.

ஊடக தமிழில் ஆதித்தனார் கொண்டு வந்த எழுத்துநடை  
பாட திட்டத்தில் இடம் பெறும்.

11-ம் வகுப்பு  ஊடக தமிழ் பகுதியில், சி.பா.ஆதித்தனார் கொண்டு வந்த சீர்திருத்தங்கள் நடைமுறையாகிடும்.

 மேலும்  சி.பா. ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

கனவு ஆசிரியர் விருது அறிவிப்பு...


தமிழகம் முழுவதும் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னை தலைமைச் செயலகத்தில்
 செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், புதிய பாடத்திட்டத்தில் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு இடம்பெறும் என தெரிவித்தார்.

மாணவர்களை எதிர்காலத்தில் கருத்தில் கொண்டு பாடத்துடன் நற்பண்புகளை கற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருதாகவும் செங்கோட்டையன் கூறியுள்ளார். பள்ளிகளில் உளவியல் ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறிய அமைச்சர் செங்கோட்டையன், சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜேக்டோ ஜியோ வேலைநிறுத்த காலம் ஈடுகட்டுதல் (4days-ICT Training)தொடக்கக்கல்வி இயக்குநரின் கூடுதல் அறிவுரைகள் - அத்தியாவசிய காரணங்களுக்காக அனுமதி கோரினால் அனுமதி வழங்கலாம்...

*🖥4 DAYS-ICT TRAINING - TIME TABLE & SCHEDULE~DEEO-Namakkal...

EMIS - video conference on 27th Dec 2017 @ 3.00 PM regarding - SPD PROCEEDINGS!


1.Aadhaar data seeding for students.

2..EMIS students data entry and ID card module in EMIS.

3. U-DISE data entry status
All District Chief Educational Officer, Computer programmers of SSA office, EMIS district coordinators CEO office and U-DISE coordinators SSA are requested to join the video conference.

DSE - HIGH/ HR SEC SCHOOL H.M PROMOTION | ONLINE COUNSELLING REG DIRECTOR PROCEEDINGS | 26.12.2017

தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஆண்டு விழா நடத்துதல் சார்பு- அனைவருக்கும் கல்வி இயக்கம்,மாநில திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் அவர்கள், தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களிடம் இரண்டாம்பருவ விடுமுறைக்கால கணினிபயிற்சியை முழுமையாக இரத்து செய்யுமாறு வலியுறுத்தி உள்ளார்...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் ,இனமானக்காவலர் ,மேனாள் மேலவை உறுப்பினர்.
பாவலர்.மதிப்புமிகு.க.மீஅவர்கள் ,
தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களிடம் இரண்டாம்பருவ விடுமுறைக்கால கணினிபயிற்சியை முழுமையாக இரத்து செய்யுமாறு வலியுறுத்தி உள்ளார்.

விடுமுறைக்காலப்
பயிற்சி என்பது பழிவாங்கும் நடவடிக்கையாகி விடக்கூடாது என்றும்,பழிவாங்கும் நடவடிக்கைகள் கூடாது என்று நீதிமன்றம் வழிகாட்டுதல் செய்துள்ளது என்றும்,
பள்ளிப்பணி நாளில் ஏற்பட்ட வேலைநாள் இழப்பை பள்ளியில் வேலைசெய்து ஈடுசெய்வதற்கு வேலைநாட்கள் குறிப்பிட்டு செயல்முறைகள் பிறப்பிக்கவேண்டும் என்றும் மதிப்புமிகு.க.மீ.அவர்கள் வலியுறுத்திஉள்ளார்.இப்பொருள் சார்ந்து
ஜாக்டோ-ஜியோவின் மாநில அமைப்புஇன்று(26.12.17)அன்று தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனரை சந்தித்து வலியுறுத்துகிறது.

#நாம்வெல்வோம்
-முருகசெல்வராசன்.