செவ்வாய், 26 டிசம்பர், 2017

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் அவர்கள், தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களிடம் இரண்டாம்பருவ விடுமுறைக்கால கணினிபயிற்சியை முழுமையாக இரத்து செய்யுமாறு வலியுறுத்தி உள்ளார்...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் ,இனமானக்காவலர் ,மேனாள் மேலவை உறுப்பினர்.
பாவலர்.மதிப்புமிகு.க.மீஅவர்கள் ,
தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களிடம் இரண்டாம்பருவ விடுமுறைக்கால கணினிபயிற்சியை முழுமையாக இரத்து செய்யுமாறு வலியுறுத்தி உள்ளார்.

விடுமுறைக்காலப்
பயிற்சி என்பது பழிவாங்கும் நடவடிக்கையாகி விடக்கூடாது என்றும்,பழிவாங்கும் நடவடிக்கைகள் கூடாது என்று நீதிமன்றம் வழிகாட்டுதல் செய்துள்ளது என்றும்,
பள்ளிப்பணி நாளில் ஏற்பட்ட வேலைநாள் இழப்பை பள்ளியில் வேலைசெய்து ஈடுசெய்வதற்கு வேலைநாட்கள் குறிப்பிட்டு செயல்முறைகள் பிறப்பிக்கவேண்டும் என்றும் மதிப்புமிகு.க.மீ.அவர்கள் வலியுறுத்திஉள்ளார்.இப்பொருள் சார்ந்து
ஜாக்டோ-ஜியோவின் மாநில அமைப்புஇன்று(26.12.17)அன்று தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனரை சந்தித்து வலியுறுத்துகிறது.

#நாம்வெல்வோம்
-முருகசெல்வராசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக