வெள்ளி, 5 ஜனவரி, 2018
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் திருச்செங்கோடு ஒன்றியப்பொறுப்பாளர்கள் ஒன்றிய உதவித்தொடக்கக்கல்விஅலுவலரை 04.1.18 பிற்பகல் 05.30மணி அளவில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து,வாழ்த்துப்பெறும் இனிய மகிழ்வான சந்திப்பின் படக்காட்சிகள்.இச்சந்திப்பில் மாநில,மாவட்டப்பொறுப்பாளர்களும் பங்கேற்றனர்...
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் திருச்செங்கோடு ஒன்றியச்செயற்குழுக்கூட்டம் (04.01.18)~நிகழ்வுகள்...
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் திருச்செங்கோடு ஒன்றியச்செயற்குழுக்கூட்டம்
04.01.18(வியாழன்)பிற்பகல் 05.45மணிக்கு திருச்செங்கோடு நகராட்சி மலையடிவாரம் நடுநிலைப்பள்ளியில் ஒன்றியத்தலைவர் இரா.திருவேங்கடம் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்டச்செயலாளர்
முருகசெல்வராசன்,
மாவட்டப்பொருளாளர்
ப.ஹரிஹரன்,
மாநிலப்பொதுக்குழு உறுப்பினர் அ.ஜெயப்பாண்டியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று இயக்க உரை ஆற்றினர்.
இக்கூட்டத்தில்
ஜாக்டோ-ஜியோ நாமக்கல்மாவட்ட அமைப்பின் சார்பில்
எதிர்வரும்
06.01.18(சனி)முற்பகல் 10.00மணிமுதல் 01.00 மணி முடிய நாமக்கல் பூங்காசாலையில் 11அம்சக்கோரிக்கைகளை தமிழக அரசு உடன் நிறைவேற்றிட வலியுறுத்தி நடைபெறும் மாநிலந்தழுவிய
தொடர்முழக்கப்போராட்டத்தில் திருச்செங்கோடு ஒன்றியத்திலிருந்து 200 மன்ற உறுப்பினர்கள் பங்கேற்பதென முடிவாற்றப்பட்டது.
வியாழன், 4 ஜனவரி, 2018
2018 ஆம் ஆண்டிற்கான தொடர் விடுமுறை காலண்டர்...
ஜனவரி - 2018 (13-16),(26-28)
ஜனவரி 13 - சனி
ஜனவரி 14 - பொங்கல்
ஜனவரி 15 - மாட்டுப்பொங்கல்
ஜனவரி 16 - உழவர் திருநாள்
ஜனவரி 26 - 69 வது குடியரசு தினம்
ஜனவரி 27 - சனி
ஜனவரி 28 - ஞாயிறு
மார்ச் - 2018 (01-04),(29-1)
மார்ச் 01 - ஹோலிப் பண்டிகை
மார்ச் 02 - விடுப்பு எடுக்க வேண்டிய நாள்
மார்ச் 03 - சனி
மார்ச் 04 – ஞாயிறு
மார்ச் 29 - மஹாவீர் ஜெயந்தி
மார்ச் 30 - புனித வெள்ளி
மார்ச் 31 - சனி
ஏப்ரல் 01 - ஞாயிறு
ஏப்ரல் - 2018 (28-01)
ஏப்ரல் 28 - சனி
ஏப்ரல் 29 - ஞாயிறு
ஏப்ரல் 30 - விடுப்பு எடுக்க வேண்டிய நாள்
மே 01 - மே தினம்
செப்டம்பர் - 2018 (13-16),(21-23)
செப்டம்பர் 13 - விநாயகர் சதுர்த்தி
செப்டம்பர் 14 - விடுப்பு எடுக்க வேண்டிய நாள்
செப்டம்பர் 15 - சனி
செப்டம்பர் 16 – ஞாயிறு
செப்டம்பர் 21 - முஹரம்
செப்டம்பர் 22 - சனி
செப்டம்பர் 23 - ஞாயிறு
அக்டோபர் - 2018 (SEP29-02) (18-21)
செப்டம்பர் 29 - சனி
செப்டம்பர் 30 - ஞாயிறு
அக்டோபர் 1 - விடுப்பு எடுக்க வேண்டிய நாள்
அக்டோபர் 2 - காந்தி ஜெயந்தி
அக்டோபர் 18 - ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை
அக்டோபர் 19 - விஜயதசமி
அக்டோபர் 20 - சனி
அக்டோபர் 21 - ஞாயிறு
நவம்பர் - 2018 (03-06)
நவம்பர் 03 - சனி
நவம்பர் 04 - ஞாயிறு
நவம்பர் 05 - விடுப்பு எடுக்க வேண்டிய நாள்
நவம்பர் 06 - தீபாவளி
டிசம்பர் - 2018 (22-25)
டிசம்பர் 22 - சனி
டிசம்பர் 23 - ஞாயிறு
டிசம்பர் 24 - விடுப்பு எடுக்க வேண்டிய நாள்
டிசம்பர் 25 - கிறிஸ்துமஸ்
ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் 8ம் தேதி முதல் அடையாள அட்டை அணிந்து பள்ளிக்கு வர வேண்டும்...
தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் அனைவரும் வரும் 8ம் தேதி முதல் அடையாள அட்டை அணிந்தே பள்ளிக்கு வரவேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
அரசு ஊழியர்கள் பணியின் போது கட்டாயம் அடையாள அட்டையை அணிந்து கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி புகைப்படம், பணியில் சேர்ந்த தேதி, பெயர், முகவரி உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அடங்கிய அடையாள அட்டை தயாரித்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் ஒரு சில பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் மட்டுமே அடையாள அட்டையை அணிந்து வந்தனர். பெரும்பாலான பள்ளிகளில் தமிழக அரசின் உத்தரவை கடைபிடிக்கவில்லை என்று பள்ளிக் கல்வித்துறைக்கு புகார்கள் சென்றது.
அதன்பேரில் தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் அனைவரும் வரும் 8ம் தேதி முதல் அடையாள அட்டை அணிந்து பள்ளிக்கு வரவேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வௌியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் வரும் 8ம் தேதி முதல் அனைத்து வருவாய் மாவட்டங்களிலுள்ள அனைத்து வகை தொடக்க, நடுநிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் அனைவரும் நிழற்படத்துடன் கூடிய அடையாள அட்டையை பணியின்போது அணிய வேண்டும். அப்படி அடையாள அட்டை அணியாமல் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பணிக்கு வந்தால் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் உத்தரவுப்படி கல்வி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)