வெள்ளி, 5 ஜனவரி, 2018

06.01.18~நாமக்கல்~ஜாக்டோ-ஜியோவின் தொடர்முழக்கப் போராட்டத்தை வெற்றிபெறச் செய்வீர்...


ஜாக்டோ-ஜியோவின் நாமக்கல் மாவட்டக்கூட்டம்
 (04.01.18-வியாழன்)பிற்பகல் 05.00மணிக்கு நாமக்கல் எஸ்.பி.எம்.,மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மன்றத்தின் மாநில விதிமுறைக்குழு உறுப்பினர் ப.இராசேந்திரன்(சேந்தமங்கலம்),
மாநிலத்தீர்ப்புக்குழு உறுப்பினர் இரா.பன்னீர்செல்வம்(புதுச்சத்திரம்),
மாநிலப்பொதுக்குழு உறுப்பினர் இரா.இரவிக்குமார்
(கபிலர்மலை),மாவட்டத்துணைச்செயலாளர் வெ.வடிவேல்(பள்ளிப்பாளையம்),நாமக்கல் ஒன்றியச்செயலாளர் அ.ஜெயக்குமார்,கபிலர்மலை ஒன்றியப்பொருளாளர் த.தண்டபாணி ஆகியோர்பங்கேற்றனர். 

இக்கூட்டத்தில் வரும் (06.01.18-சனிக்கிழமை)முற்பகல் 10.00மணிமுதல் 01.00 மணி முடிய நாமக்கல் பூங்காசாலையில் 11அம்சக்கோரிக்கைகளை தமிழக அரசு உடன் நிறைவேற்றிட வலியுறுத்தி மாநிலந்தழுவியதொடர்முழக்கப்போராட்டம்
மேற்கொள்வதென முடிவாற்றப்பட்டது.

இக்கூட்ட முடிவினை வெற்றிகரமாக்குமாறும்,போராட்டக்களத்தில் முழு வீச்சுடன் செயலாற்றுமாறும்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில,மாவட்ட,ஒன்றிப்பொறுப்பாளர்களை,இயக்க முன்னோடிகளை,மன்ற ஆசிரியப்பெருமக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.
~முருகசெல்வராசன்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் திருச்செங்கோடு ஒன்றியப்பொறுப்பாளர்கள் ஒன்றிய உதவித்தொடக்கக்கல்விஅலுவலரை 04.1.18 பிற்பகல் 05.30மணி அளவில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து,வாழ்த்துப்பெறும் இனிய மகிழ்வான சந்திப்பின் படக்காட்சிகள்.இச்சந்திப்பில் மாநில,மாவட்டப்பொறுப்பாளர்களும் பங்கேற்றனர்...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் திருச்செங்கோடு ஒன்றியச்செயற்குழுக்கூட்டம் (04.01.18)~நிகழ்வுகள்...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் திருச்செங்கோடு ஒன்றியச்செயற்குழுக்கூட்டம்
04.01.18(வியாழன்)பிற்பகல் 05.45மணிக்கு திருச்செங்கோடு நகராட்சி மலையடிவாரம் நடுநிலைப்பள்ளியில் ஒன்றியத்தலைவர் இரா.திருவேங்கடம் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்டச்செயலாளர்
முருகசெல்வராசன்,
மாவட்டப்பொருளாளர்
ப.ஹரிஹரன்,
மாநிலப்பொதுக்குழு உறுப்பினர் அ.ஜெயப்பாண்டியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று இயக்க உரை ஆற்றினர்.

இக்கூட்டத்தில்
ஜாக்டோ-ஜியோ நாமக்கல்மாவட்ட அமைப்பின் சார்பில்  
எதிர்வரும்
06.01.18(சனி)முற்பகல் 10.00மணிமுதல் 01.00 மணி முடிய நாமக்கல் பூங்காசாலையில் 11அம்சக்கோரிக்கைகளை தமிழக அரசு உடன் நிறைவேற்றிட வலியுறுத்தி நடைபெறும்  மாநிலந்தழுவிய
தொடர்முழக்கப்போராட்டத்தில் திருச்செங்கோடு ஒன்றியத்திலிருந்து 200 மன்ற உறுப்பினர்கள் பங்கேற்பதென முடிவாற்றப்பட்டது.

வியாழன், 4 ஜனவரி, 2018

2018 ஆம் ஆண்டிற்கான தொடர் விடுமுறை காலண்டர்...


ஜனவரி - 2018    (13-16),(26-28) 

ஜனவரி 13 - சனி 
ஜனவரி 14 - பொங்கல் 
ஜனவரி 15 - மாட்டுப்பொங்கல் 
ஜனவரி 16 - உழவர் திருநாள் 

ஜனவரி 26 - 69 வது குடியரசு தினம் 
ஜனவரி 27 - சனி 
ஜனவரி 28 - ஞாயிறு 

மார்ச் - 2018 (01-04),(29-1) 

மார்ச் 01 - ஹோலிப் பண்டிகை 
மார்ச் 02 - விடுப்பு எடுக்க வேண்டிய நாள் 
மார்ச் 03 - சனி 
மார்ச் 04 – ஞாயிறு 

மார்ச் 29 - மஹாவீர் ஜெயந்தி 
மார்ச் 30 - புனித வெள்ளி 
மார்ச் 31 - சனி 
ஏப்ரல் 01 - ஞாயிறு 

ஏப்ரல் - 2018 (28-01) 

ஏப்ரல் 28 - சனி 
ஏப்ரல் 29 - ஞாயிறு 
ஏப்ரல் 30 - விடுப்பு எடுக்க வேண்டிய நாள் 
மே 01 - மே தினம் 

செப்டம்பர் - 2018 (13-16),(21-23) 

செப்டம்பர் 13 - விநாயகர் சதுர்த்தி 
செப்டம்பர் 14 - விடுப்பு எடுக்க வேண்டிய நாள் 
செப்டம்பர் 15 - சனி 
செப்டம்பர் 16 – ஞாயிறு 

செப்டம்பர் 21 - முஹரம் 
செப்டம்பர் 22 - சனி 
செப்டம்பர் 23 - ஞாயிறு 

அக்டோபர் - 2018  (SEP29-02) (18-21) 

செப்டம்பர் 29 - சனி 
செப்டம்பர் 30 - ஞாயிறு 
அக்டோபர் 1 - விடுப்பு எடுக்க வேண்டிய நாள் 
அக்டோபர் 2 - காந்தி ஜெயந்தி 

அக்டோபர் 18 - ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை 
அக்டோபர் 19 - விஜயதசமி 
அக்டோபர் 20 - சனி 
அக்டோபர் 21 - ஞாயிறு 

நவம்பர் - 2018  (03-06) 

நவம்பர் 03 - சனி 
நவம்பர் 04 - ஞாயிறு 
நவம்பர் 05 - விடுப்பு எடுக்க வேண்டிய நாள் 
நவம்பர் 06 - தீபாவளி                                                                  
டிசம்பர் - 2018  (22-25) 

டிசம்பர் 22 - சனி 
டிசம்பர் 23 - ஞாயிறு 
டிசம்பர் 24 - விடுப்பு எடுக்க வேண்டிய நாள் 
டிசம்பர் 25 - கிறிஸ்துமஸ்

10.01.2018 பின்பும் நமது பழைய ஊதியத்தினை தொடர்ந்து பெற்று கொள்ளலாம் என நிதித்துறை செயலாளர் ஆணை கடிதம் எண்-58863/CMPC/நாள் -30.12.2017 நகல்...

அண்ணாமலைப் பல்கலையில் நிலுவைச் சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம்...

புதுமைப் பள்ளிகளுக்கான விருது வழங்குதல்- நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்...

தொடக்கக்கல்வி -ஊராட்சி/நகராட்சி/அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களது B.Ed கற்பித்தல் பயிற்சியை பணிபுரியும் பள்ளியிலேயே விடுப்பின்றி மேற்கொள்ளலாம் என்பதற்கான அரசாணை...

EMIS NEWS: Kanchipuram District CEO'S Instructions...

நூலக இயக்குனர் காலியிடம் நிரப்பிடக்கோருதல்...