வெள்ளி, 19 ஜனவரி, 2018

வருமான வரி தோராயமான கணக்கீடு..


* ஒரு ஆசிரியருக்கு 2017-2018 ஆம் ஆண்டின்  மொத்த வருமானம் ரூ. 8,00,000 (எட்டு இலட்சம்) என்பதாக வைத்துக்கொண்டால்....
 
* முதலில் சேமிப்பு கணக்கில் 1,50,000 கழித்தது போக மீதி உள்ள தொகை ரூ. 6,50,000/=

* இந்த 6,50,000/தொகையில் ரூ. 1 முதல்
2,50,000 வரை மட்டுமே வரிவிலக்கு உண்டு.
மீதித் தொகை 4,00,000/=

*இந்த 
ரூ. 4,00,000/= 
தொகையில் ரூ. 2,50,000 மட்டுமே 5 % வரியாக
ரூ. 12,500/= ஆகும்.

* 4,00,000/= -ல் மேலே 5℅ வரி பிடித்தம் (2.50.000) போக மீதி உள்ள 1,50,000/= க்கு
வரி 20 ℅ சதவிகிதமாகும்.
ஆகவே வரி 30,000/= ஆகும்.

ஆகவே மொத்த வரி
12,500+30,000 = 42500 ஆகும்.

CPS பிடித்தம் உள்ளவர்களுக்கு...


இந்த ஆண்டு CPS பிடித்தம் 50,000 க்கு மேலே இருந்தால், உதாரணமாக ரூ. 65,000 என வைத்துக் கொண்டால், ரூ. 50,000 
CPS தொகையை
80 CCD  ( 1 B )  பிரிவிலும்,

மீதித் தொகை 
ரூ. 15,000/= ஐ
80 C
( அதிக பட்ச சேமிப்பு 
ரூ. 1,50,000 ) பிரிவிலும்
கழித்துக் கொள்ளலாம்.

SGT TO BT PANEL 2018...

காஞ்சிபுரம் மாவட்டம்- முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்- சனிக்கிழமை (20/01/18) அனைத்துப் பள்ளிகளும் இயங்கும்....

எட்டாவது ஊதிய மாற்றம்_ ஈரோடு மற்றும் சேலம் மாநகராட்சிக்குரிய வீட்டு வாடகைப்படி மற்றும் நகர ஈட்டுப்படி _ நாமக்கல் மாவட்டம் - 7 ஒன்றியங்களைச் சார்ந்த ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு கிடைத்திட ஆணை வெளியிட வேண்டி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு , தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்ட அமைப்பின் விண்ணப்பம் ...

வியாழன், 18 ஜனவரி, 2018

EMIS , Aadhar , UDISE தொடர்பான தெளிவுரைகள்...

ஊதிய நிர்ணயம்-ஆசிரியர்களின் விருப்பக் கடிதம்-புதுச்சத்திரம் AEEO அவர்களின் குறிப்பாணை...

EMIS-தங்கள் பள்ளிக்கு தேவையான மாணவரை student pool பகுதிக்கு அனுப்பாத மாணவர்களை admit செய்ய புதிய வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது...


நீங்கள் தேடும் மாணவர் வேறு பள்ளியில் இருந்தால் அம்மாணவனை admit செய்ய raise request என்ற option இருக்கும். 

அதை click செய்தால் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு இந்த மாணவனை வெளியேற்றவும் என pending request பகுதியில் காட்டும்.

 3நாட்களுக்குள் வெளியேற்றப்படாத நிலையில் அதை வெளியேற்றும் வாய்ப்பு district userக்கு வரும்.

 Dist userஆல் வெளியேற்றி விடப்படுவர்.
 
2 முதல் 12 ஆம் வகுப்பு புதிய உள்ளீடு செய்யும் வசதி இன்னும் வரவில்லை.

17.1.18(புதன்கிழமை) மாநில திட்ட இயக்குனர் அவர்களின் காணொளி கூட்டத்தில் விவாதித்த சில முக்கியமான தவல்கள்...


📕வரும் 25.1.18 அன்றைய தினத்திற்குள் தங்கள் பள்ளியில் பயிலும் பள்ளி மாணவ மற்றும் மாணவியர்களை தவிர வேறு எந்த குழந்தைகளையும் EMIS இல் பதிவேற்றம் செய்து இருந்தால் உடனடியாக அந்த குழந்தைகளை Common Poolற்கு தங்கள் பள்ளியில் இருந்து வெளியேற்ற வேண்டும்.

📕DISE Enrollment படிதான் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு சில பள்ளிகளில் Duplicate entry செய்ய பட்டுள்ளது என்று SPD அவர்கள் கூறி உள்ளார்.

📕மேலும் SPD அவர்கள் கூறியது யாதெனில் தங்கள் பள்ளியில் உள்ள Original மாணவர்களின் எண்ணிக்கையை மட்டும் பதிவேற்றம் செய்தால் போதும் என்றும் தவறான எண்ணிக்கையை கொடுத்து அதற்கு பின்வரும் காலங்களில் உரிய விளக்கம் தர தவறும் பட்சத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை தவிற்குமாறும் கூறி உள்ளார்.

ஏனெனில் ஒரு சில பள்ளிகளில்  குழந்தைகளின் எண்ணிக்கையை போலியாக பதிவேற்றம் செய்யபட்டுள்ளதை  கண்டறியபட்டுள்ளது என கூறினார்.
 அக்குழந்தைகளுக்கான சரியான Adhaar எண்ணை பதிவேற்றம் செய்ய தவறும் பட்சத்தில் அவை போலியான Entry என்று எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அவ்வாறு தவறான தகவல்களை பதிவு செய்யும் தலைமை ஆசிரியர்களை தக்க நடவடிக்கைக்கு உட்படுத்தபடுவார்கள் என்று SPD அவர்கள் எச்சரித்து உள்ளார்.

 📕எனவே தான் சரியான தகவல்களை EMIS ல் வரும் 25.1.18 பதிவேற்றம் செய்துகொள்ள வேண்டும். அதே போல் தங்கள் பள்ளியில் பயிலாத மாணவர்களை Common Pool ற்கு அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்..

 📕 26.1.18 அன்று EMIS ல் தங்கள் பள்ளியில் இருக்கும் மாணவர்கள் அனைவரும் தங்கள் பள்ளியில் பயலும் மாணவர்கள் என்று கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.

📕அவ்வாறு இருக்கும் மாணவர்களின் அனைத்து தகவல்களையும் தலைமை ஆசிரியர் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

📕ஆதார் பதிவேற்றம் செய்யபடாத காரணத்தை கண்டிப்பாக CEOக்கு HM தெரிய படுத்த வேண்டும்.

📕ஒன்றுக்கும் மேற்பட்ட Repeat ஆதார் entry களை Duplicate entry யாக கணக்கில் கொள்ளப்பட்டு அவை அனைத்தும் Delete செய்யபடும்.

SCERT - English Phonetics Training for Primary & upper primary Teachers- Director Proceedings...