'ஜாக்டோ - ஜியோ' சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மூன்றாவது நாளாக, நேற்றும் மறியல் போராட்டம் நடந்தது.
அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ சார்பில், தொடர் மறியல் போராட்டம் துவங்கியது.பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், சென்னைக்கு வந்து போராட்டம் நடத்துகின்றனர். நேற்று, மூன்றாவது நாளாக போராட்டம் நீடித்தது.
1.பழைய ஓய்வூதிய திட்டத்தை அனைவருக்கும் அமல்படுத்துவது;
2.ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, 21 மாதத்துக்கான ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்குவது;
3.இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைவது ,
போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டம் நடக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த போலீசார், மாலையில் விடுவித்தனர். அதுவரை, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில், கைதானவர்கள் முகாமிட்டிருந்தனர்.
போராட்டம் குறித்து, ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், ''போராட்டத்திற்கு வரும் ஆசிரியர்கள் வகுப்புகளை, 'கட்' அடிக்கவில்லை. சுழற்சி முறையில் விடுமுறை கேட்டு, போராட்டத்தில் பங்கேற்கின்றனர். அரசு பேச்சு நடத்தும் வரை போராட்டம் தொடரும்,'' என்றனர்.