வெள்ளி, 9 மார்ச், 2018

சிபிஎஸ்இ, என்சிஇஆர்டி பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவ, மாணவியரின் ஒட்டுமொத்த மேம்பாட்டை உறுதி செய்ய ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு ...

சிபிஎஸ்இ, என்சிஇஆர்டி பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவ, மாணவியரின் ஒட்டுமொத்த மேம்பாட்டை உறுதி செய்ய ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்கான கருத்துக்களை பொதுமக்கள், கல்வியாளர்கள் கூறலாம் என்றும் தெரிவித்துள்ளது. 

பள்ளிகளின் பாடத்திட்டங்களை முறைப்படுத்தி மாற்றி அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்  கருத்து தெரிவித்துள்ளார். மேலும், கல்வியின் நோக்கமே கல்வி முறையின் மூலம் நல்ல மனிதர்களை தயார் செய்வதுதான் என்றும், ஏட்டுக் கல்வியுடன் வாழ்க்கைத் திறன்கள், அனுபவக் கல்வி, உடற்கல்வி, திறன் உருவாக்கம் ஆகியவையும் அவசியம் என்பதால் பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து, ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம், கல்வி நிபுணர்கள், பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கல்வியில் ஆர்வம் கொண்டவர்கள் தங்கள் கருத்தை முன்வந்து தெரிவிக்கலாம். அவர்களின் ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது என்றும் ஜவடேகர் குறிப்பிட்டுள்ளார். 

இதன்படி, ஆலோசனை மற்றும் கருத்து கூற விரும்புவோர் இன்று தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை தங்கள் ஆலோசனைகளை http//:164.100.78.75/DIGI என்ற இணைய தளத்தின் மூலம் தெரிவிக்கலாம். அவர்கள் விவரம் ரகசியமாக வைக்கப்படும். சிபிஎஸ்இ, என்சிஇஆர்டி பாடத்திட்ட ஆவணங்களை அந்தந்த துறையின் இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

// தினகரன் செய்தி// 8/3/2018.

2017-2018ம் கல்வியாண்டு~மூன்றாம் பருவத்தேர்வு கால அட்டவணை~மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் - நாகப்பட்டினம்....



விடுப்பு விதிகள்...

வியாழன், 8 மார்ச், 2018

உதவி பெறும் பள்ளியின் மான்யம் சார்ந்த விபரங்கள் "DDO Template"ல் பதிவேற்றம் செய்தல்-சார்பு...

பள்ளிக்கல்வி~ உயர்/மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள்/அலுவலகப்பணியாளர்கள் வீடுகட்ட அரசுகடன் ₹25 இலட்சம் முன்பணம் பெறுதல்-சார்பு...

நீட் தேர்வு~மாணவர்களுக்கு ஆதார் எண் கட்டாயமில்லை- உச்ச நீதிமன்றம் உத்தரவு...

சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்...

புதன், 7 மார்ச், 2018

சேலம்~சென்னை விமான சேவை மார்ச் 25 லிருந்து ஆரம்பம் ....

துறை முன் அனுமதி பெறாமல் உயர் கல்வி பயின்ற ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர்,பெரியாரியலாளர்,பாவலர் அய்யா அவர்களின் அறைகூவலை ஏற்று தமிழகத்தில் தந்தை பெரியார்சிலை இடிக்கப்படும் என்றுரைத்த திரு.எச்.ராசாவைக்கண்டித்து எதிர்வரும் 12.03.18(திங்கள்) பிற்பகல் 05.00 மணியளவில் திருச்செங்கோடு, இராசிபுரம்,நாமக்கல் ஆகிய மையங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்....

அன்பானவர்களே!வணக்கம்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர்,பெரியாரியலாளர்,பாவலர் அய்யா அவர்களின் அறைகூவலை 
ஏற்று தமிழகத்தில்தந்தை
------------------------------------ பெரியார்சிலைஇடிக்
-------------------------------------
கப்படும்என்றுரைத்த
-------------------------------------
திரு.எச்.ராசாவைக்
-----------------------------------
கண்டித்து
--------------------
எதிர்வரும் 12.03.18(திங்கள்)
பிற்பகல் 05.00 மணியளவில் 
திருச்செங்கோடு,
இராசிபுரம்,நாமக்கல் ஆகிய மையங்களில் *கண்டன ஆர்ப்பாட்டம்*
நடைபெறுகிறது.

நாமக்கல் மாவட்ட அமைப்பின்  ஆசிரியர்மன்றத்தை 
சார்ந்த மாநில,மாவட்ட ,ஒன்றியப்பொறுப்பாளர்கள்,மன்றமுன்னோடிகள்,மன்ற ஆசிரியப்பெருமக்கள் பெருந்திரளாய் ஒன்றுகூடுமாறு மாவட்ட அமைப்பின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.
~முருகசெல்வராசன்.