வெள்ளி, 16 மார்ச், 2018

தமிழகத்தின் மொத்த கடன் நிலுவை ரூ3.55 லட்சம் கோடி....

தமிழக பட்ஜெட்~2018: பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ 27,205.88 கோடி நிதி ஒதுக்கீடு...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்....

தமிழக பள்ளிகளில் மாணவர்களின் பார்வை திறனை மேம்படுத்த நடவடிக்கை~பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை...

கொல்லிமலை வனப்பகுதியில் மலையேற்ற பயிற்சிக்கு மே 31ம் தேதி வரை தடை....

புத்தக வங்கி தொடங்குதல் சார்ந்த செயல்முறைகள்...

வியாழன், 15 மார்ச், 2018

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் புதிய ஒன்றியக்கிளைகள்(சேலம்) தொடக்கவிழா~அழைப்பிதழ்...


அன்பானவர்களே!வணக்கம்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் ,பாவலர் அய்யா அவர்கள்  17.03.18 அன்று பிற்பகல் 02.00மணியளவில் சேலத்தில் நடைபெறும்  சங்ககிரி,காடையாம்பட்டி மற்றும் அயோத்தியாப்பட்டிணம் ஆகிய மூன்று புதிய ஒன்றியக்கிளைகளின் தொடக்கவிழாவில் பங்கேற்கிறார்.

இவ்விழா நிறைவிற்கு பின் நாமக்கல் பயணமாகிறார்கள்.

17.03.18(சனி)அன்று பிற்பகல் 08.00மணியளவில் நாமக்கல் சேலம் சாலையில் அமைந்துள்ள சனு ஓட்டலில் தங்குவதற்கு சேந்தமங்கலம் ஒன்றியக்கிளை அறை ஏற்பாடு செய்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தின் பொறுப்பாளர்கள்,
ஆசிரியப்பெருமக்கள்  விரும்பின் சனி பிற்பகல் 09.30மணிமுதல் 09.30மணிவரையிலும்,18.03.18(ஞாயிறு) முற்பகல் 08.30மணிமுதல் 09.30மணிவரையிலும்  சந்திக்கலாம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
                       நன்றி.
           ~முருகசெல்வராசன்.

01.01.2018-ஐ அடிப்படையாக கொண்டு பதவி வாரியாக பணிமூப்புப்பட்டியல் மற்றும் பதவி உயர்விற்கான தேர்ந்தப்பட்டியல்கள் ஆகியவை நாமக்கல் மாவட்டத்தொடக்கக்கல்வி அலுவலரின் ஏற்புப்பெற்று தங்களது ஒன்றிய உதவித்தொடக்கக்கல்வி அலுவலரால் வெளியிடப்பட்டு உள்ளதா?என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்...

அன்பானவர்களே!வணக்கம்.

01.01.2018-ஐ அடிப்படையாகக்கொண்டு
 பதவி வாரியாக பணிமூப்புப்பட்டியல் மற்றும் பதவி உயர்விற்கான தேர்ந்தப்பட்டியல்கள் ஆகியவை நாமக்கல் மாவட்டத்தொடக்கக்கல்வி அலுவலரின் ஏற்புப்பெற்று 
 தங்களது ஒன்றிய உதவித்தொடக்கக்கல்வி அலுவலரால் வெளியிடப்பட்டு உள்ளதா?என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

இப்பட்டியல்கள் ஒன்றியத்தின் அனைத்துவகை  ஆசிரியர்களின் மேலான பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டும்,நகல்கள் தரப்பட்டும் 
ஒப்புதல்கள் பெறப்பட்டுள்ளதா?என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

மேலும் இப்பட்டியல்களின் நகல்களை  கேட்டுப்பெற்று பள்ளியின் இருப்புக்கோப்பில் வைத்துக்கொள்ளுமாறு அனைத்தாசிரியர்களுக்கும் எடுத்துரையுங்கள்.

ஒன்றியச்செயலாளர்கள் மேற்கண்ட
அலுவலரிடம் 
நகல் பெற்று இருப்புக்கோப்பில் வைத்திடுங்கள்.

இப்பணிகள் சார்ந்து கவனம் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.                         நன்றி.
          ~முருகசெல்வராசன்

தங்களது ஒன்றியத்தில் பதவிஉயர்வின் வழியில் நிரப்பிடத்தக்க காலிப்பணியிடங்கள் ஏதும் இருப்பின் 31.03.18க்குள் 01.01. 2017-ஐ அடிப்படையாகக்கொண்டு நிரப்பிடுமாறு ஒன்றிய உதவித்தொடக்கக் கல்வி அலுவலரிடம் ஆசிரியர் மன்றத்தின் சார்பில் கோரிக்கை விண்ணப்பம் அளித்திடுங்கள்...

அன்பானவர்களே!வணக்கம்.

தங்களது ஒன்றியத்தில் பதவிஉயர்வின் வழியில் நிரப்பிடத்தக்க காலிப்பணியிடங்கள் ஏதும் இருப்பின் 31.03.18க்குள்01.01. 2017-ஐ அடிப்படையாகக்கொண்டு நிரப்பிடுமாறு ஒன்றிய உதவித்தொடக்கக்
கல்வி அலுவலரிடம் ஆசிரியர்  மன்றத்தின் சார்பில் கோரிக்கை விண்ணப்பம்
அளித்திடுங்கள்.

இப்பொருள் சார்ந்தும்,கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ள விபரம் சார்ந்தும் 
மாவட்டச்செயலாளருக்கும் நகலிட்டு  தெரிவித்து
விடுங்கள்.
                     நன்றி.
            ~முருகசெல்வராசன்

மூன்றாம் பருவத் தேர்வு கால அட்டவணை மற்றும் தேர்வு சார்பான அறிவுரைகள் ~தருமபுரி மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்....