அன்பானவர்களே!வணக்கம்.
01.01.2018-ஐ அடிப்படையாகக்கொண்டு
பதவி வாரியாக பணிமூப்புப்பட்டியல் மற்றும் பதவி உயர்விற்கான தேர்ந்தப்பட்டியல்கள் ஆகியவை நாமக்கல் மாவட்டத்தொடக்கக்கல்வி அலுவலரின் ஏற்புப்பெற்று
தங்களது ஒன்றிய உதவித்தொடக்கக்கல்வி அலுவலரால் வெளியிடப்பட்டு உள்ளதா?என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
இப்பட்டியல்கள் ஒன்றியத்தின் அனைத்துவகை ஆசிரியர்களின் மேலான பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டும்,நகல்கள் தரப்பட்டும்
ஒப்புதல்கள் பெறப்பட்டுள்ளதா?என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
மேலும் இப்பட்டியல்களின் நகல்களை கேட்டுப்பெற்று பள்ளியின் இருப்புக்கோப்பில் வைத்துக்கொள்ளுமாறு அனைத்தாசிரியர்களுக்கும் எடுத்துரையுங்கள்.
ஒன்றியச்செயலாளர்கள் மேற்கண்ட
அலுவலரிடம்
நகல் பெற்று இருப்புக்கோப்பில் வைத்திடுங்கள்.
இப்பணிகள் சார்ந்து கவனம் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
~முருகசெல்வராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக