செவ்வாய், 15 மே, 2018

இதுவரை விண்ணப்பம் கூட வழங்கவில்லை நடப்பாண்டு ஆசிரியர் கலந்தாய்வு எப்போது?

அரசு பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு தாமதமாக வரக்கூடாது~பள்ளி கல்வித்துறை அறிவிப்பு…

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை செய்திக் குறிப்பு...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்டம் (கிளை)~ தகவல் தொழில்நுட்ப பயிலரங்கம் அழைப்பிதழ்…

வரும் கல்வியாண்டு முதல் நாமக்கல் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை நிறுத்தம்- இனி ஈரோடு சென்று படிக்கவேண்டும்...

செவ்வாய் கிரக ஆய்வுக்கு ஆளில்லா ஹெலிகாப்டர் ~நாசா தயாரிக்கிறது...

பள்ளிபாளையம் மற்றும் திருச்செங்கோடு ஒன்றிய மற்றும் நகராட்சிகளுக்கு ஈரோடு மாநகராட்சிக்குரிய HRA &CCA பெறுவதற்கான விண்ணப்பங்கள் - நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் முகாமில் வழங்கப்பட்டது...

வணக்கம். பள்ளிபாளையம் மற்றும் திருச்செங்கோடு ஒன்றிய மற்றும் நகராட்சிகளுக்கு ஈரோடு மாநகராட்சிக்குரிய HRA &CCA பெறுவதற்கான விண்ணப்பங்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் முகாமில்           (24-05-218) மாவட்ட ஆட்சியர் அவர்களின் நேர்முக உதவியாளர் அவர்களிடம் நேரில் மாவட்ட துணைச் செயலாளர் வெ.வடிவேல் மற்றும் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் த.தண்டபாணி ஆகியோரால் வழங்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் அவர்களின் நேர்முக உதவியாளர் இது சார்பான கோப்பு தற்போது பரிசீலனையில் உள்ளது என்றும் விரைவில் அரசிதழில் வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

பின்னர் இது சார்பாக உதவி இயக்குநர்,மாவட்ட நில அளவை ,நாமக்கல் அவர்களை சந்தித்து நாமக்கல் மாவட்டத்தின் 9ஒன்றியங்களுக்கான மாநகராட்சிக்குரிய வீட்டு வாடகைப்படி பெறுவதற்கான தூர அளவுகளுக்கான ஆணை பற்றிய நிலைமை கேட்டறியப்பட்டது.
மாநகராட்சிக்குண்டான வீட்டு வாடகைப்படி  வழங்குவதற்காக மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் இருந்து கடிதம் கிடைக்கப் பெற்றதாகவும்  ஆனால் நாமக்கல் மாவட்டத்திற்கான வரைபடம் தங்கள் வசம் தற்போது இன்மையால் தங்களால் இன்னும் பதில் அனுப்ப இயலவில்லை என்றும் சென்னைக்கு இது சார்பாக கடிதம் அனுப்பப்பட்டு வரைபடத்திற்காக காத்திருப்பதாக கூறினார்.

9ஒன்றியம் சார்பாக வரைபடம் பெற்று வழங்குவதாக நமது மாவட்ட அமைப்பு சார்பில் உதவி இயக்குநரிடம் தெரிவிக்கப்பட்டது.வரைபடம் கிடைக்கப் பெற்றதும் இது
 சார்பான கோப்புகளை விரைவில் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் அளிப்பதாக உறுதியளித்தார்.

-வெ.வடிவேல்.
மாவட்ட துணைச் செயலாளர்.

ஆசிரியர் மன்றம், நாமகிரிப்பேட்டை ~ நீதிகேட்டு நடைபயணம் ~ ஒத்திவைக்கப்படுகிறது...

ஆசிரியப் பெருமக்களுக்கு வணக்கம்.
நாமகிரிப்பேட்டை ஒன்றிய ஆசிரியர் களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி எதிர்வரும் 15.05.18அன்று முதல் 3 நாட்கள் நீதிகேட்டு நடை பயணம் மேற்கொள்வதென்றும்,17.05.18 பிற்பகல் நாமக்கல் மாவட்டத்தொடக்கக்கல்வி அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடும்,காத்திருப்புப்போராட்டமும் மேற்கொள்வதென 
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமகிரிப்பேட்டை ஒன்றியக்கிளை முடிவாற்றியது.

இப்போராட்டத்திற்கான  எல்லாவிதமான தொடர் நடவடிக்கைகளையும் மாவட்டச்செயலாளர் திருமுருகசெல்வராசனின் வழிகாட்டுதல்களுடன் ஒன்றியப்பொறுப்பாளர்கள் மேற்கொண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில்.(14.05.18)பிற்பகல் 04.20மணியளவில் ஒன்றிய உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் அவர்கள்
ஒன்றியப்பொறுப்பாளர்களை அழைத்து கடிதநகல் அளித்துஎதிர்காலங்களில் நிர்வாகப்பணிகளில்  தேக்கநிலை இல்லாது நிர்வாகச்செயல்பாடுகள் இருக்குமென தெரிவித்து உள்ளார்கள்.

மேற்கண்டவற்றை எல்லாம் கவனமுடன்பரிசீலித்து(15.05.18-செவ்வாய்)முற்பகல் முதல் மேற்கொள்ளவிருந்த நீதிகேட்டு
நெடும்பயணம் ஒத்திவைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்படுகிறது.
_சி.மோகன்குமார்,
ஒன்றியச்செயலாளர்,ஆசிரியர் மன்றம்,
நாமகிரிப்பேட்டை ஒன்றியம்,
நாமக்கல் மாவட்டம்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் பொதுச் செயலாளர் பாவலர் அவர்கள், தலைவர் தியோடர் ராபின்சன், பொருளாளர் அம்பை கணேசன், விழுப்புரம் சின்னசாமி ஆகியோர் ஒரு நபர் குழு தலைவர் திரு.சித்திக் அவர்களை சந்தித்து (13.05.2018) அறிக்கையை சமர்பித்தல்...

வணக்கம்.  தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பாக மன்ற பொதுச் செயலாளர் பாவலர் க.மீனாட்சிசுந்தரம் அவர்கள், தலைவர் தியோடர் ராபின்சன், பொருளாளர் அம்பை கணேசன், விழுப்புரம் சின்னசாமி ஆகியோர் ஒரு நபர் குழு தலைவர் திரு.சித்திக் அவர்களை இன்று 13.05.2018 சந்தித்து அறிக்கையை சமர்பித்து தெளிவாக எடுத்துரைத்தனர். 

இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களைதல், 2009மற்றும் 2012 பணியில் சேர்ந்த ஆசிரியர்களின் ஊதிய குறைவினை களைதல், தனிஊதியம் 2000 க்கு சலுகைகளை அளித்தல்,அரசு ஊழியர்கள் பல பிரிவினருக்கு உள்ள முரண்பாடுகளை களைதல் போன்ற பல்வேறு கோரிக்கை குறித்து தெளிவு படுத்தப்பட்டது. மிகவும் கவனமுடன் கேட்டு புரிந்து கொண்ட திரு. சித்திக் அவர்கள் மகிழ்சியுடன் மீண்டும் உங்களை சந்திக்கின்றேன். இந்த சந்திப்பு பயன் உள்ளதாக அமைந்துள்ளது என மகிழ்வுடன் தெரிவித்தார். உடன் குழுவின் இணை செயலாளர் திரு துளசிராம் அவர்கள் இருந்தார்கள். 

அன்புடன்  திரு.க.மீனாட்சிசந்தரம் பொதுச்செயலாளர். ஆசிரியர்மன்றம்.

திங்கள், 14 மே, 2018

தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட பிளஸ் 1 பாடப் புத்தகத்தில் இருந்து நீட் தேர்வில் 40 சதவீத கேள்விகள்~ கல்வியாளர்களின் ஆய்வில் தகவல்…


நாடு முழுவதும் நடந்த நீட் தேர்வில் பிளஸ் 2 பாடத்தைவிட பிளஸ் 1 பாடப் புத்தகங்களில் இருந்து அதிக கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக,
தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட பிளஸ் 1 பாடப் புத்தகங்களில் இருந்து 40 சதவீத கேள்விகள் கேட்கப்பட்டதுகல்வியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள்மற்றும் ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஹோமியோபதி (ஆயுஷ் - AYUSH) படிப்புகளுக்கு 2018-19-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) கடந்த 6-ம் தேதி நடந்தது. மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்திய இத்தேர்வுக்கு 13,26,775 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். அதில், 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர்.தமிழகத்தில் மட்டும் விண்ணப்பித்திருந்த 1,07,288 பேரில் சுமார் 1 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தமிழகத்தில் 10 நகரங்களில் உள்ள 170 மையங்கள் உட்பட நாடு முழுவதும் 136 நகரங்களில் 2,255 மையங்களில் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம் உட்பட மொத்தம் 11 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற்றது.

180 கேள்விகள்...

தேர்வில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் இருந்து தலா 45 கேள்விகள் வீதம் மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்பட்டன. ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் என மொத்தம் 720 மதிப்பெண்கள். ஒவ்வொரு கேள்விக்கும் கொடுக்கப்பட்ட 4 விடைகளில் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தவறான விடைகளுக்கு தலா 1 மதிப்பெண் குறைக்கப்படும்.

இந்நிலையில், பிளஸ் 2 பாடங்களைவிட, பிளஸ்1 பாடங்களில் இருந்துதான் இந்த நீட் தேர்வில்அதிக கேள்விகள் கேட்கப்பட்டிருப்பது கல்வியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.நீட் தேர்வில் பிளஸ்1 இயற்பியலில் 22 கேள்விகள், பிளஸ் 2 இயற்பியலில் 23 கேள்விகள், பிளஸ்1 வேதியியலில் 22 கேள்விகள், பிளஸ் 2 வேதியியலில் 23 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. பிளஸ்1 தாவரவியலில் 30 கேள்விகள், பிளஸ் 2 தாவரவியலில் 15 கேள்விகளும், பிளஸ்1 விலங்கியலில் 22 கேள்விகள், பிளஸ் 2 விலங்கியலில் 23 கேள்விகள் வினாத்தாளில் இடம்பெற்றிருந்தன.ஒட்டுமொத்தமாக நீட் தேர்வில் 180 கேள்விகளில் பிளஸ் 1 பாடங்களில் இருந்து 96 கேள்விகளும் (53 சதவீதம்), பிளஸ் 2 பாடங்களில் இருந்து 84 கேள்விகளும் (47 சதவீதம்) கேட்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் பிளஸ் 1 பாடங்களில் இருந்து 51 சதவீத கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.

தமிழக அரசு அண்மையில் பிளஸ் 1 வகுப்புக்கு புதிய பாடப் புத்தகங்களை வெளியிட்டது. இதில் இயற்பியலில் இருந்து 11 கேள்விகள், வேதியியலில் இருந்து 11 கேள்விகள், தாவரவியலில் இருந்து 29 கேள்விகள், விலங்கியலில் இருந்து 11 கேள்விகள் என மொத்தம் 72 கேள்விகள் (40 சதவீதம்) கேட்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.