சனி, 9 ஜூன், 2018

போலி செய்தியை அடையாளம் காண Whatsappல் புதிய வசதி அறிமுகம்...


இந்தியாவில் தகவல் பரிமாற்றத்தில் வாட்ஸ் ஆப் முதலிடத்தில் உள்ளது. மாதத்திற்கு சுமார் 20 கோடி பேர் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதை அதிகமானோர் பயன்படுத்துவதால் மோசடி நபர்கள் போலி செய்தி அல்லது விளம்பரங்களை இதில் பரப்பி வருகின்றனர்.

 இந்த பிரச்னையை எதிர்கொள்ள வாட்ஸ் ஆப் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் மற்றொரு நபரில் தகவலை நாம் பகிர்ந்தால் அதில் 'ஃபார்வேர்டட்' என்று அடையாளம் குறிப்பிடப்பட்டிரு க்கும். இது தகவலை அனுப்புவோருக்கும், பெறுவோருக்கும் தெரியும் வகையில் இடம்பெறும்.இதன் மூலம் இந்த குறிப்பிட்ட ஒரு தகவல் பலரால் பகிரப்படுகிறது என்பதை அடையாளம் காண உதவியாக இருக்கும்.

இதற்கு வாட்ஸ் ஆப் 2.18.179 என்ற புதிய வெர்சனை அப்டேட் செய்ய வேண்டும். இதன் மூலம் வாட்ஸ் ஆப் பயனீட்டாளர்கள் செய்திகளை உண்மை தன்மை அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.
போலியான தகவல்கள் பெரும்பாலான மக்களை சென்றடைவதை இது கட்டுப்படுத்தும் என்று வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர் பொதுமாறுதல் 2018-19 சார்ந்து ஒன்றிய ஆசிரியர்களின் கோரிக்கைகள் இருப்பின் விரைந்து தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் ~முருகசெல்வராசன்.


அன்பானவர்களே! வணக்கம்.

ஆசிரியர் பொதுமாறுதல் 2018-19 சார்ந்து ஒன்றிய ஆசிரியர்களின் கோரிக்கைகள் இருப்பின் விரைந்து  தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

1)இடமாறுதல் கல்விமாவட்ட அளவில் நடைபெறாது;
வருவாய்மாவட்ட அளவில் நாமக்கல் ,அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்  நடைபெறுகிறது.

2)பணிநிரவலில் பாதிக்கப்பட்டோருக்கு காலிப்பணியிடம் இருப்பின் வாய்ப்பும்,முன்னுரிமையும் வழங்கப்படுமென தமிழக அரசின் ஆணையில்,தொடக்கக்கல்வித்துறை  இயக்குநரின் செயல்முறைகளில் கூறப்பட்டுள்ளது.

3)உபரிபணியிட நிரவல்  மாறுதல் 01.09.2017 இன் அடிப்படையில் நடைபெறும் எனச்சொல்லப்பட்டுள்ளது.

4)கூடுதல் பணியிடங்கள் பணியிடநிரவலுக்கு மட்டுமே;இடமாறுதலுக்கு இல்லை என கூறப்படுகிறது.

5)வேறு ஏதேனும் கோரிக்கைகள்,ஐயப்பாடுகள் இருப்பின் தொடர்புக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
                   நன்றி.
           ~முருகசெல்வராசன்.

EMIS பணி ஆரம்பிக்காத பள்ளிகள்...

வெள்ளி, 8 ஜூன், 2018

தேர்வுத்துறையில் தனி அதிகாரி...


தமிழக பள்ளிக் கல்வித்துறையில், துறை வாரியாக,மாவட்ட வாரியாக, நிர்வாக சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து, தேர்வுத்துறையிலும் நிர்வாக சீர்திருத்தம் துவங்கியுள்ளது. அதன்படி,மாவட்ட வாரியாக தேர்வுத்துறை அதிகாரிகள்நியமிக்கப்பட உள்ளனர்.

மாவட்டக் கல்வி அதிகாரி அந்தஸ்தில் ஒருவரும், கண்காணிப்பாளர் ஒருவரும், பணியாளர்கள் ஐந்து பேரும் நியமிக்கப்படுவர். மாவட்ட வாரியாக, தேர்வுத்துறை அலுவலகம் அமைக்கவும், பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக்கல்வி - 30.06.2018 குள் INSPIRE AWARD பதிவேற்றம் பணியை முடிக்க வேண்டும் - தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு - இயக்குனர் செயல்முறைகள்...

ஆசிரியர் பொது மாறுதல் -2018-19 ~தொடக்கக்கல்வி துறைக்கான மாறுதலில் கல்வி மாவட்டத்திற்குள் மாறுதல் தனியே நடைபெறாது.வருவாய் மாவட்டத்திற்குள் மட்டுமே மாறுதல்~திருத்தப்பட்ட கால அட்டவணை…

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், நாமக்கல் மாவட்டம் (கிளை)~ ஒன்றியச் செயலாளர்கள் கூட்டம்[06/06/18]~ நாளிதழ் செய்திகளில்...

DSE PROCEEDINGS-பள்ளிக்கல்வி - பகுதி நேரத்தில் MPhil/Phd பயில தடையின்மை சான்று கோரும் கருத்துருக்கள் பரிந்துரைக்கும் போது கூடுதல் விவரம் கோருதல் சார்பு...