திங்கள், 11 ஜூன், 2018

அரசு ஊழியர், ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் இன்று முதல் போராட்டம் - ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு...


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் போராட்டத்தை துவக்க உள்ளனர்.

 சென்னையில் இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்குகின்றனர். மாவட்டங்களில் மாலை நேரங்களில் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபடுகின்றனர்.

 அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 7 ஆண்டுகளாக 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், போராட்டம் என பலகட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், 7வது ஊதியக் குழு அறிவித்தபிறகு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டு வருகின்றனர். மேலும் 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்திய போது ஏற்பட்ட ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும்,
இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய வித்தியாசத்தை சரி செய்ய வேண்டும், தொகுப்பு ஊதியத்தின் கீழ் சம்பளம் பெற்று வருவோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் தான் பிரதானமாக முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக கடந்த ஆண்டு முதல்வருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. ஜாக்டோ-ஜியோ சார்பில் தொடர் வேலை நிறுத்தம் நடத்தப்பட்டது. அதனால், அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்தது. பின்னர் ஊதிய முரண்பாடு தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையை அரசு வெளியிட வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது. அரசும் ஒப்புக் கொண்டது.

ஆனால் இதுவரை அந்த பரிந்துரையை அரசு வெளியிடவில்லை. ஆனால் அந்த குழுவின் காலம் நீட்டிக்கப்பட்டு ஐஏஎஸ் அதிகாரி சித்திக் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் 8ம் தேதி சென்னையில் நடந்த ஜாக்டோ-ஜியோ மறியல் போராட்டத்தின்போது, ஒரு நபர் கமிட்டியில்தான் நீங்கள், உங்கள் கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.

இதைத் தொடர்ந்து கடந்த வாரம் தலைமை செயலகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் நேரில் ஆஜராகி தங்கள் கருத்தை தெரிவித்தனர். அப்போது ஜூன் 11ம் தேதி சென்னையில் தொடர் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படும் என்று ஜாக்டோ-ஜியோ அறிவித்தது. இன்று சென்னையில் தொடர் உண்ணாவிரதம் தொடங்குகிறது.

இதில் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள், உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் என சுமார் 500 பேர் உண்ணாவிரதம் இருக்கின்றனர். இதுதவிர அந்தந்த மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம் முன்பு மாலையில் ஆர்ப்பாட்டமும் நடத்த ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.

ஞாயிறு, 10 ஜூன், 2018

கியூரியாசிட்டி விண்கலம் ஆய்வு~செவ்வாய் கிரக ஏரி படுகையில் உயிர் மூலக்கூறு கண்டுபிடிப்பு…

DEE - EMIS இணைய தளத்தில் அனைத்து வகை பள்ளி மாணவர்களைப் பதிவுசெய்தல்~ தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்…

அரசு ஊழியர் பணிப் பதிவேடு அக்டோபருக்குள் கணினி மயம்...

கீழ்க்கண்ட ஆசிரியர்கள் பணிபுரியும் பணியிடம் உபரியாக இருந்தாலும், அவர்களது விருப்பம் இன்றி நிரவல் செய்ய முடியாது...

கீழ்க்கண்ட ஆசிரியர்கள் பணிபுரியும் பணியிடம் உபரியாக இருந்தாலும், அவர்களது விருப்பம் இன்றி நிரவல் செய்ய முடியாது...(G.O.Ms.No.270,dt.10.7.2012,G.O.Ms.No.256,dt.19.4.2017)
           
1.முற்றிலும் கண்பார்வையற்றவர்.

2.40% மற்றும் அதற்கு மேலான ஊனம் கொண்ட மாற்றுத்திறனாளிகள்.   

3.விதவைகள்.                 

4. 40 வயதைக்கடந்த முதிர்கன்னிகள்.          

5.இருதய அறுவை,சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள்.

6.புற்றுநோயாளிகள்.      

7.மனவளர்ச்சி மற்றும் மற்றும் உடல் ஊனமுற்ற குழந்தைகளின் பெற்றோர்.

NEET Counselling 2018 – Schedule Released...

சனி, 9 ஜூன், 2018

K2-236b இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள புதிய கிரகம்...


அகமதாபாத்தில் உள்ள தேசிய வானியல் ஆராய்ச்சி (Physical Research Laboratory) மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு புதிய கிரகம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது.

 இந்தப் புதிய கண்டுபிடிப்பின் மூலம், `நட்சத்திரங்களைச் சுற்றி கிரகங்களைக் கண்டுபிடிக்கும் நாடுகள் பட்டியலில்' இந்தியாவும் இணைந்துள்ளது. 

இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள இந்தப் புதிய கிரகம், துணை சனி கோள் அல்லது சூப்பர் நெப்டியூன் போன்ற கோள்களின் அளவில் பெரியதாக உள்ளது.

 EPIC 211945201 or K2-236 என்ற நட்சத்திரத்தைச் சுற்றிவரும் இந்தக் கிரகத்துக்கு EPIC 211945201b or K2-236b என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். 

இந்த K2-236b கிரகம், பூமியைப் போன்று 27 மடங்கு எடை கொண்டதாகவும் அளவில் ஆறு மடங்கு பெரியதாகவும் உள்ளது.

 இந்தக் கிரகம் தனது நட்சத்திரத்தை 19.5 நாளில் சுற்றி வருகிறது. இதன் வெளிப்புற வெப்பநிலை 600 டிகிரி செல்சியஸ் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 

``பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள இடைவெளியைப் போன்று ஏழு மடங்கு குறைவாகவே இந்தப் புதிய கிரகத்துக்கும் அதன் நட்சத்திரத்துக்கும் இடைவெளி உள்ளது.

 பூமியிலிருந்து 600 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பதாகக் கண்டறியப்பட்ட K2-236b கிரகத்தை, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அபு மலைப் பகுதியில், அமைக்கப்பட்டுள்ள  PARAS (PRL Advance Radial-velocity Abu-Sky Search) ஸ்பெக்ட்ரோகிராப் தொலைநோக்கி மூலம் கண்டறியப்பட்டது'' என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி~ பள்ளிக் கல்வித் துறை-ஐஐடி இடையே ஒப்பந்தம்…


பள்ளி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்கம் - ஐஐடி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் கையெழுத்தானது.

சென்னை ஐஐடி- ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்கம் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி ஐஐடி-யின் வல்லுநர் குழு பள்ளிக் கல்வித்துறையின் மூலம் பராமரிக்கப்படும் முதல் நிலை, துணை நிலை தரவுகளை உரிய முறையில் ஆய்வு செய்து தொழில்நுட்ப உதவிகள் வழங்கும்.

பள்ளிக் கல்வித் துறையில் புதிய உத்தி, கல்வி முறைகளின் செயல் திறனை ஆய்வு செய்தல், மாணவர்களின் கற்றல் திறனை மதிப்பீடு செய்யும் முறைகளை மேம்படுத்திட தேவையான திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்குதல் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 

போலி செய்தியை அடையாளம் காண Whatsappல் புதிய வசதி அறிமுகம்...


இந்தியாவில் தகவல் பரிமாற்றத்தில் வாட்ஸ் ஆப் முதலிடத்தில் உள்ளது. மாதத்திற்கு சுமார் 20 கோடி பேர் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதை அதிகமானோர் பயன்படுத்துவதால் மோசடி நபர்கள் போலி செய்தி அல்லது விளம்பரங்களை இதில் பரப்பி வருகின்றனர்.

 இந்த பிரச்னையை எதிர்கொள்ள வாட்ஸ் ஆப் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் மற்றொரு நபரில் தகவலை நாம் பகிர்ந்தால் அதில் 'ஃபார்வேர்டட்' என்று அடையாளம் குறிப்பிடப்பட்டிரு க்கும். இது தகவலை அனுப்புவோருக்கும், பெறுவோருக்கும் தெரியும் வகையில் இடம்பெறும்.இதன் மூலம் இந்த குறிப்பிட்ட ஒரு தகவல் பலரால் பகிரப்படுகிறது என்பதை அடையாளம் காண உதவியாக இருக்கும்.

இதற்கு வாட்ஸ் ஆப் 2.18.179 என்ற புதிய வெர்சனை அப்டேட் செய்ய வேண்டும். இதன் மூலம் வாட்ஸ் ஆப் பயனீட்டாளர்கள் செய்திகளை உண்மை தன்மை அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.
போலியான தகவல்கள் பெரும்பாலான மக்களை சென்றடைவதை இது கட்டுப்படுத்தும் என்று வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர் பொதுமாறுதல் 2018-19 சார்ந்து ஒன்றிய ஆசிரியர்களின் கோரிக்கைகள் இருப்பின் விரைந்து தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் ~முருகசெல்வராசன்.


அன்பானவர்களே! வணக்கம்.

ஆசிரியர் பொதுமாறுதல் 2018-19 சார்ந்து ஒன்றிய ஆசிரியர்களின் கோரிக்கைகள் இருப்பின் விரைந்து  தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

1)இடமாறுதல் கல்விமாவட்ட அளவில் நடைபெறாது;
வருவாய்மாவட்ட அளவில் நாமக்கல் ,அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்  நடைபெறுகிறது.

2)பணிநிரவலில் பாதிக்கப்பட்டோருக்கு காலிப்பணியிடம் இருப்பின் வாய்ப்பும்,முன்னுரிமையும் வழங்கப்படுமென தமிழக அரசின் ஆணையில்,தொடக்கக்கல்வித்துறை  இயக்குநரின் செயல்முறைகளில் கூறப்பட்டுள்ளது.

3)உபரிபணியிட நிரவல்  மாறுதல் 01.09.2017 இன் அடிப்படையில் நடைபெறும் எனச்சொல்லப்பட்டுள்ளது.

4)கூடுதல் பணியிடங்கள் பணியிடநிரவலுக்கு மட்டுமே;இடமாறுதலுக்கு இல்லை என கூறப்படுகிறது.

5)வேறு ஏதேனும் கோரிக்கைகள்,ஐயப்பாடுகள் இருப்பின் தொடர்புக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
                   நன்றி.
           ~முருகசெல்வராசன்.