திங்கள், 5 நவம்பர், 2018

தீபாவளி பண்டிகையையொட்டி தீயணைப்பு படை வீரர்களுக்கு 2நாட்கள் விடுமுறை இல்லை~ 24 மணி நேர கண்காணிப்பில் இருக்க உத்தரவு…

பயோகெமிஸ்ட்ரி படித்தால் பி.எட்., சேர்க்கை இல்லை~ ஆசிரியர் பல்கலைக்கழகம் அறிவிப்பு…

அறிவியல்-அறிவோம்: கண்ணீர் காரணம் அறிவோம்...

பொதுவாக அழுதால்தான் கண்ணீர் வரும்என்று நாம் நம்புகிறோம். ஆனால், சாதாரணமாகவே கண்ணில் கண்ணீர் (Tears) சுரந்துகொண்டுதான் இருக்கிறது என்றாலும், நாம் அதை பெரும்பாலும் உணர்வதில்லை.

நெற்றியில் புருவம் தொடங்குமிடத்துக்குப் பக்கத்தில் கண்ணுக்கு ஒன்று வீதமாக இரண்டு கண்ணீர் சுரப்பிகள் இருக்கின்றன. கண்ணீர் சுரப்பியில் சுரக்கும் கண்ணீர், கண்இமைத்தலின் மூலமாக மேல் மற்றும் கீழ் இமைகளின் விளிம்போரத்தில் இருக்கும் சிறிய திறப்பு வழியாக, கண்ணீர் நாளக்குழாய் மூலம் கண்ணீர்ப்பையை (Lacrimal Sac) அடைகிறது. பிறகு அங்கிருந்து மூக்குக்கும் தொண்டைக்கும் சென்று ஆவியாகிவிடுகிறது. இது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஒரு செயல்.


ஒருவர் அழும்போது உணர்ச்சிவசப்படுவதால் கண்ணீர் சுரப்பிகள் தூண்டப்பட்டுக் கண்ணீர் அதிகமாகச் சுரக்கிறது. இதனால், திடீரென வெள்ளப்பெருக்குபோல் உற்பத்தியாகும் கண்ணீர், இமைகளில் உள்ள திறப்புவழியாக முழுவதுமாக வெளியேற முடியாத நிலையில், எஞ்சிய கண்ணீர் கண்ணிலிருந்து தாரை தாரையாகக் கன்னங்களில் வடிகிறது. இதுபோன்ற நேரத்தில்தான், கண்ணீரை நாம் உணர்கிறோம். அழும்போது அதிகப்படியான கண்ணீர் உள்ளே செல்வதால்தான் மூக்கும் ஒழுகுகிறது.


இயல்புக்கு மாறான கண்ணீர்
பிறந்த குழந்தைக்கும் சிலநேரம் இயல்புக்கு மாறாகக் கண்ணிலிருந்து நீர் வடியலாம். கண்ணில் ஏற்பட்ட (Infection) நோய்த்தொற்று, இதற்குக் காரணமாக இருக்கலாம். 

சில நேரம் கண்ணீர்ப்பையில் ஏற்பட்ட அடைப்பும் காரணமாக இருக்கலாம். 

கண்ணில் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால் சொட்டுமருந்து மூலம் சரிசெய்யலாம். 

கண்ணீர்ப்பையில் அடைப்பு ஏற்பட்டிருந்தால், சிலருக்குச் சொட்டுமருந்துடன் மருத்துவர் சொல்கிறபடி மூக்குக்கு அருகில் 'மசாஜ்' செய்ய வேண்டிவரும். ஒருசில குழந்தைகளுக்குச் சிறிய அறுவைசிகிச்சையும் செய்ய வேண்டியிருக்கலாம்.


பள்ளி செல்லும் வயதில் குழந்தைகளுக்குக் கண்ணில் நீர் வடிவதற்கு, பார்வைக் குறைபாடு காரணமாக இருக்கலாம். கண் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து, தேவைப்பட்டால் கண்ணாடி போட்டாக வேண்டும். தாமதித்துச் செல்லும்போது, கண்ணாடியின் 'பவர்' அதிகமாகிவிட வாய்ப்புள்ளது. இது எதிர்காலத்தில் பார்வையைப் பாதிக்கலாம்.

 கண்ணின் இமையோரங்களில் நோய்த்தொற்று இருந்தாலும் நீர் வரலாம். குழந்தைகள் சுயசுத்தத்தை பராமரிக்காததாலும் சத்துக்குறைபாடு காரணமாகவும் இப்பிரச்சினை பெரும்பாலும் ஏற்படுகிறது. சிலருக்குக் கண் இமையோர முடி, கண்ணுக்கு உட்புறமாக வளைந்து விழிக்கோளத்தை உரசுவதன் மூலமும் நீர் வரும். 

இதையெல்லாம் ஒரு கண்மருத்துவர் கண்டறிந்து, உரிய சிகிச்சையைத் தர முடியும்.

மின்னணு சாதனங்களும் கண்ணீரும்
தொலைக்காட்சியில் வைத்த கண் வாங்காமல் நிகழ்ச்சிகளை நீண்டநேரம் பார்க்கும்போது, குழந்தைகள் நீண்டநேரம் வீடியோ கேம்ஸ், மொபைல் கேம்ஸ் விளையாடும்போதும் கண் விரைவாகக் களைத்துப் போய்விடும். இன்றைக்கு டாப்லெட் கணினியிலோ, கைப்பேசியிலோ முகநூல், இணையதளங்களைப் பலரும் மேய்ந்துகொண்டே இருக்கிறார்கள். போதாக்குறைக்கு இப்போது வாட்ஸ்அப் வேறு வந்துவிட்டது. நேரங்காலம் தெரியாமல் நள்ளிரவு 12, 1 மணிவரையிலும், மீண்டும் அதிகாலை 4, 5 மணிக்கெல்லாம் வாட்ஸ்அப்பில் மூழ்கிவிடுகிறார்கள். கண்ணுக்கு நாம் தரும் இதுபோன்ற அதிகப்படியான வேலைப்பளு தொடர் நெருக்கடியால் கண்ணிலிருந்து நீர் வடியலாம்.

சிலர் கண்ணில் நீர் வடிந்தால் உடனே சொட்டுமருந்து வாங்கிப் போடுவார்கள். நீர்வடிதலுக்குக் காரணம், ஒருவேளை கண்ணில் இருக்கும் சிறு தூசியாகக்கூட இருக்கலாம். தூசி இருப்பதை எல்லா நேரமும் கண்டறிந்துவிட முடியாது. இந்தத் தூசி மேல் இமையின் உட்புறத்திலோ அல்லது கருவிழியிலோ ஒட்டியிருக்கக்கூடும். சொட்டுமருந்து போடுவதன் மூலம் தூசி வெளியேற வாய்ப்பில்லை. அந்தத் தூசியைக் கண்ணுக்குப் பாதிப்பின்றிக் கண்மருத்துவரால் மட்டுமே எடுக்கமுடியும். அதை விடுத்துச் சுயமாகச் சொட்டுமருந்தைப் போட்டுக்கொண்டே இருந்தால், தூசி வெளியேறாமல் கருவிழியில் புண் ஏற்பட்டுப் பிரச்சினை மோசமடையவும் சாத்தியம் உண்டு. இது தவிரக் கண்ணில் ஏற்படும் ஒவ்வாமை பிரச்சினைகளாலும் நீர் வடியலாம்.

அறுவைசிகிச்சையும் நீர்வடிதலும்
கண்புரை, கண்நீர் அழுத்த உயர்வு, மாறுகண் என்று பலவிதக் காரணங்களுக்காகக் கண்ணில் அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் அறுவைக்குப் பின் நாள்பட்ட நிலையில் கண்ணிலிருந்து நீர் வடிய வாய்ப்பு உண்டு. நோய்த்தொற்றோ அல்லது அறுவைக்குப் போடப்பட்ட தையலின் எச்சங்களோ இருந்தாலும் நீர் வடியலாம்.
கண்ணீர்ப்பை பிரச்சினைகள்
கண்ணிலிருந்து உற்பத்தியாகும் நீர், மேல்-கீழ் இமைகளில் உள்ள சிறிய திறப்புகள் வழியாக வெளியேறி நீர்ப்பையை அடைகிறது. இந்த நீர் செல்லும் பாதையான கண்ணீர் நாளக்குழாயில் எங்கேயாவது தடங்கல் ஏற்பட்டாலும் அல்லது நீர்ப்பையில் நோய்த்தொற்று ஏற்பட்டாலும் நீர் வடியலாம். மருந்தின் மூலமோ அல்லது பிரச்சினைக்கேற்பவோ அறுவைசிகிச்சை செய்ய வேண்டியிருக்கும்.
மற்றக் காரணங்கள்
அதிக ஒளியைப் பார்த்தாலும் சிலருக்குக் கண்ணீர் அதிகமாக வரலாம். தரமான குளிர்க்கண்ணாடி (Sun Glass) அணிவதன் மூலம் இதிலிருந்து விடுபடலாம். அதேபோல வெல்டிங் போன்ற அதிக வெப்பம், அதிக ஒளியில் தொடர்ந்து நீண்ட நேரம் வேலை செய்பவர்கள், அதற்குரிய பாதுகாப்புக் கண்ணாடியை அணிந்துதான் வேலை செய்ய வேண்டும். இது கண்ணை அதிக வெப்பத்திலிருந்து பாதுகாத்து நீர்வடிதலை கட்டுப்படுத்துவதுடன், நாளடைவில் கண்ணின் கருவிழி கெட்டுப்போகாமலும் பாதுகாக்கிறது.
சிலருக்குப் பயம் காரணமாகக் கண்ணீர் வரும். இன்னும் சிலருக்கு எந்தக் காரணமும் இன்றி கண்ணீர் வந்துகொண்டேயிருக்கும். அவர்கள் தீவிர மனச்சோர்வு / மனச்சிதைவால் பாதிக்கப்பட்டிருக்கலாம். முறையான கவுன்சலிங் மூலம் அவர்களை ஆற்றுப்படுத்திக் கண்ணீர் வருவதை நிறுத்தலாம்.

ஞாயிறு, 4 நவம்பர், 2018

ஸ்மார்ட்போன் அதிக நேரம் உபயோகித்தால் கேன்சர் அபாயம் உண்டு

ஸ்மார்ட்போன்களில் RFR எனும் ரேடியோ கதிர்வீச்சு அதிகளவில் இருப்பதால் அதை அதிகம் பயன்படுத்துவோருக்கு இதயம், மூளை மற்றும் அட்ரீனல் சுரப்பிகளில் புற்றுநோய் கட்டிகள் வர வாய்ப்பு இருப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



அமெரிக்காவைச் சேர்ந்த நேஷனல் இன்ஸ்ட்டியூட் என்னும் ஆராய்ச்சி நிறுவனம், ரேடியோ கதிர்களின் விளைவுகள் குறித்து NTP (National Toxicology Programme) எனும் ஆராய்ச்சியை மேற்கொண்டது.



அந்த ஆராய்ச்சியில் எலிகளின் உடலில் ரேடியோ கதிர்களைச் செலுத்தி அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சோதனை செய்தது.




சோதனையின் முடிவில் RFR கதிர்வீச்சின் பாதிப்பால் ஆண் எலிகளுக்கு இதயம், மூளை மற்றும் அட்ரீனல் சுரப்பிகளில் புற்றுநோய் கட்டிகள் உண்டாகின.



ஆனால், பெண் எலிகளுக்குக் குறைவான அளவிலேயே பாதிப்புகள் உண்டானது.



இந்த ஆராய்ச்சி குறித்து பேசிய ஜான் பச்சர் (NTPயின் ஆராய்ச்சியாளர்), “இந்த ஆராய்ச்சியில் எலிகளுக்கு ஏற்பட்ட விளைவுகளையும், ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால் மனிதர்களும் ஏற்படும் விளைவுகளையும் நேரடியாகத் தொடர்புபடுத்த முடியாது.



ஏனெனில் இந்தச் சோதனையின்போது எலிகளுக்கு உடல் முழுவதும் ரேடியோ கதிர்வீச்சுகள் செலுத்தப்பட்டது.



ஆனால், மனிதர்கள் விஷயத்தில் அவர்கள் எந்த இடத்தில் ஸ்மார்ட்போன்களை அதிகம் வைக்கிறார்களோ அங்கு இவ்வகை பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது.



இந்த ஆராய்ச்சியின் முடிவில் ஆண் எலிகளுக்கு ஏற்பட்ட விளைவுகளே மனிதர்களுக்கு ஏற்பட வாய்ப்பிருப்பதாக நம்புகிறோம்” என்று கூறியுள்ளார்.

மகனை அங்கன்வாடியில் சேர்த்து முன்னுதாரணமாக விளங்கும் டெல்லி IAS தம்பதி




புதுடெல்லி.                                                         

தமது இரு வயது மகனை அரசு அங்கன்வாடியில் சேர்த்த ஐஏஎஸ் தம்பதியர் சிறந்த முன் உதாரணத்தை ஏற்படுத்தி உள்ளனர். உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் நிகழ்ந்த இந்த அதிசயம் பலரது பாராட்டுகளைக் குவித்து வருகிறது.


உத்தராகண்ட் மாநிலத்திலுள்ள சமோலியின் மாவட்ட ஆட்சியராக இருப்பவர் ஸ்வாதி வாத்சவா. அதன் அருகிலுள்ள அல்மோராவின் ஆட்சியராக அவரது கணவர் நிதின் பதவுரியா உள்ளார். இந்த ஐஏஎஸ் தம்பதிக்கு இரண்டு வயதில் அபயுதா எனும் பெயரில் ஒரு மகன் இருக்கிறார்.

இதுபோன்ற அதிகாரிகளின் குழந்தைகள் பிரபல பள்ளிகள் அல்லது சிறந்த தனியார் உறைவிடப் பள்ளிகளில் சேர்க்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், மகன் அபயுதாவை சமோலியின் கோபேஷ்வர் நகரில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகமான அங்கன்வாடியில் ஐஏஎஸ் தம்பதியர் சேர்த்துள்ளனர். நேற்று செய்தியாக வெளியான இந்த தகவல், கேட்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து ஸ்வாதி கூறும்போது, “அனைத்து வசதிகளுடன் ஒரு முழுமையான அங்கன்வாடியாக அது மாநில அரசால் செயல்படுத்தப்படுகிறது. இதில் தங்கி விட்டு மாலையில் வீடு திரும்பும் என் மகன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறான். பொருளாதார ஏற்றத்தாழ்வு எதுவும் இன்றி குழந்தைகளுக்கு நல்ல வளர்ச்சியை தரும் சூழல் இங்கு கிடைப்பதால் அங்கன்வாடியை தேர்ந்தெடுத்தோம்’ என்றார்.

ஆங்கிலேயர் காலம் முதல் விடுதிகளில் தங்கிப் பயிலும் கான்வென்ட் பள்ளிகளுக்கு உத்தராகண்ட் மாநிலம் புகழ் பெற்றது. காங்கிரஸ் தலைவர் ராகுல், அவரது சகோதரி பிரியங்கா உள்ளிட்டோரும், மேலும் பல பிரபலமானவர்களின் குழந்தைகளும் இதுபோன்ற கான்வென்ட்டுகளில் பயின்றவர்களே. எனினும், அதே மாநிலத்தில் பணியில் இருந்து கொண்டு ஸ்வாதி-நிதின் தம்பதி தம் மகன் அபயுதாவை சாதாரண அரசு அங்கன்வாடியில் சேர்த்திருப்பது ஒரு சிறந்த முன் உதாரணத்தை ஏற்படுத்தி பலரது பாராட்டுகளை பெற வைத்துள்ளது.





நீட் தேர்வு நேரம் மாற்றம், புதிய கட்டுப்பாடுகளும் அறிவிப்பு...

நீட் தேர்வுக்கான 'ஆன்லைன்' விண்ணப்பப் பதிவு நேற்று துவங்கியது. இந்த ஆண்டு, தேர்வு நேரம், காலையில் இருந்து, பிற்பகலுக்கு மாற்றப்பட்டு உள்ளதுடன், புதிய கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இளநிலை மருத்துவ படிப்புகளில் (எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ்) சேருவதற்கான நீட் 2019 தேர்வு, அடுத்த ஆண்டு, மே மாதம் 5 -ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. இத்தேர்வுக்கான அறிவிப்பை தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) வெளியிட்டுள்ளது. 

இதற்கு நவம்பர் 30 வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். தேர்வு முடிவுகள் 2019 ஜூன் 5 - ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

இந்த தேர்வுக்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று காலை 11:30 மணிக்கு துவங்கியது. வரும் 30 கடைசி நாளாகும்.

இந்தத் தேர்வுக்கான கட்டணம் ரூ. 1,400. எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் ரூ. 750 செலுத்தினால் போதுமானது. கட்டணத்தை டிசம்பர் 1 இரவு 11:30 மணி வரை செலுத்தலாம்.

இந்த ஆண்டு நீட் தேர்வு, மே, 6, காலை, 10:00 மணி முதல், 1:00 மணி வரை நடந்தது. ஆனால், 2019க்கான தேர்வு நேரம், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை என மாற்றப்பட்டுள்ளது. தேர்வுக்கு, பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன. 

அதன் விபரம்: ஆன்லைன் விண்ணப்ப பதிவின் போது, பெற்றோரின் கல்வித்தகுதி, தொழில் மற்றும் வருமானம் குறிப்பிடப்பட வேண்டும். 

'ஆதார்' எண் கட்டாயம் இல்லை. பட்டியலிடப்பட்ட, ஏதாவது ஒரு அடையாள எண்ணை பதிவு செய்யலாம். ஆதார் எண் பதிவதாக இருந்தால், கடைசி நான்கு இலக்க எண்களை மட்டுமே பதிய வேண்டும். 

வருகை பதிவேட்டில் கையெழுத்திடும் போது, விரல் ரேகையையும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். 

தேர்வு மையத்துக்குள், தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்து வரக் கூடாது. இந்த கட்டுப்பாட்டை மீறுவோர் மற்றும் காப்பி அடித்து பிடிபடுவோருக்கு, மூன்று ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதிக்கப்படும்.

பி.எஸ்சி., பட்டப்படிப்பு முடித்தவர்கள், பிளஸ் டூ இயற்பியல், வேதியியல், உயிரியல் படித்திருந்தால், நீட் தேர்வில் பங்கேற்கலாம். 

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் மத்திய அரசு நடத்தும் தேசிய திறந்தநிலை பள்ளியில், பிளஸ் டூ முடித்தவர்கள், நீட் தேர்வு எழுத தகுதி இல்லை.

இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின் படி, அனைத்து மாநில பாடத்திட்டங்களை இணைத்து, பொதுவான வினாத்தாள் தயாரிக்கப்படும். பாடத்திட்ட விபரங்கள் மற்றும் ஆன்லைன் பதிவு விபரங்களை https://ntaneet.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

கடந்த ஆண்டில் தமிழகத்திலிருந்து 1.07 லட்சம் மாணவ, மாணவிகள் நீட் நுழைவுத் தேர்வில் பங்கேற்றனர். இந்த முறையும், இதே அளவிலான மாணவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC - Executive Officer Grade 3 & 4 Recruitment Notification( Last Date : 03.12.2018)...

JACTTO-GEO ~ இணைப்பு கலந்தாய்வுக் கூட்ட அழைப்பு...

சனி, 3 நவம்பர், 2018

TNPSC 65 Executive Officer Grade IV Recruitment 2018-2019


TNPSC Executive Officer Grade IV Online Application Form 2018 | TNPSC invites Online Application for the post of 65 Executive Officer Grade IV included in Group VIII Services Posts. TNPSC Executive Officer Grade IV Jobs Notification 2018 Released. TNPSC invites online applications for appointment in following Executive Officer Grade IV post in Tamil Nadu Public Service Commission. Opening Date and time for Submission of Application is 02.11.2018 and end up by 03.12.2018. You can check here TNPSC Recruitment Eligibility Criteria, Pay Scale, Application Fee/Exam Fee, TNPSC Selection Process, How to apply, TNPSC Syllabus, TNPSC Question Paper, TNPSC Admit Date Release Date, TNPSC Exam Date, TNPSC Result Release Date & other rules are given below.
TNPSC Recruitment 2018-2019 Notification Highlights

Organization Name: Tamil Nadu Public Service Commission

Job Category: Tamilnadu Govt Jobs
No. of Posts: 65 Vacancies
Name of the Posts: Executive Officer Grade IV included in Group VIII Services & Various Posts

Qualification: 10th, 12th

Job Location: Tamilnadu

Selection Procedure: Written Exam, Interview

Official Website: www.tnpsc.gov.in
Last Date: 03.12.2018

Application Apply Mode: Online
Name of the Post & No of Vacancies:
Executive Officer, Grade-IV (Post Code: 1655) – 65 Posts

Eligibility Criteria for TNPSC Executive Officer Grade IV:
Salary Details:

Executive Officer Grade IV – Level -8 Rs.19500 – 62000/-

TNPSC Executive Officer Grade IV Selection Procedure:
Written Exam
Interview

Application Fee/Exam Fee:

Registration Fee:
For One Time Registration (Revised with effect from 01.03.2017 vide G.O.(Ms).No.32, Personnel and Administrative Reforms (M) Department, dated 01.03.2017).
Note: Applicants who have already registered in One Time Registration system within the validity period of 5 years are exempted.
Rs.150/-

Examination Fee
Note: The Examination fee should be paid at the time of submitting the online application for this recruitment if they are not eligible for the fee concession noted below
Rs.150/-

How to apply TNPSC Executive Officer Grade IV Vacancy?
Step 1: Log on to TNPSC Careers Page at official website to www.tnpsc.gov.in
Step 2: Eligible candidates are advised to open Notification
Step 3: Read the Advertisement carefully to be sure about your eligibility
Step 4: Click on “Click here for New Registration”, if you are a new user.
Step 5: Fill your Academic Qualification & Other Related Information as per the instructions
Step 6: Ensure the information provided is correct
Step 7: Complete the Registration & Click on “Submit” & Make Payments
Step 8: Take a print out of online application for future use.
Important Dates to Remember:
Starting Date for Submission of Application: 02.11.2018

Last date for Submission of Application: 03.12.2018

Last Date for Payment of Application Fees: 05.12.2018

Online Application & Official Notification Links:
TNPSC Official Website Career Page: Click Here

TNPSC Official Notification PDF: Click Here

TNPSC Online Application Form: Click Here

Apply Mode: Online

இந்திய அரசியலமைப்பு செய்திகள்