ஞாயிறு, 11 நவம்பர், 2018

தமிழ்நாடு இந்து அறநிலையத்துறையில் வேலைவாய்ப்புகள் Grade - 4




தமிழ்நாடு இந்து அறநிலையத் துறையில காலியாக எக்சிகியூட்டிவ் ஆபீசர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பதவி: EXECUTIVE OFFICER, GRADE-IV
காலியிடங்கள்: 65
சம்பளம்: மாதம் ரூ.19500 - 62000
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது பல்கலைக்கழக மானிய குழுவால் அங்கிகரிக்கப்பட்ட தமிழ் புலவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பக் கட்டணம்: ரூ.150. இதனை ஆன்லைனில் செலுத்தவும்.
விண்ணப்பிக்கும் 

முறை:www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2018_32_notyfn_EOGrade_IV.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 3.12.2018

தமிழ்நாடு அரசு இந்து அறநிலையத்துறை Grade 3 காலிபணியிடங்கள்



தமிழ்நாடு இந்து அறநிலையத் துறையில காலியாக எக்சிகியூட்டிவ் ஆபீசர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பதவி: EEXECUTIVE OFFICER, GRADE-III
காலியிடங்கள்: 55
சம்பளம்: மாதம் ரூ.20.600 - 65,500
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: தேர்வுக் கட்டணம் ரூ.150, பதிவுக் கட்டணம் ரூ.150. இதனை ஆன்லைனில் செலுத்தவும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2018_31_notyfn_EOGrade_III.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 3.12.2018

இந்திய ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்புகள்- பாதுகாவலர் பணியிடம்- 10ம் வகுப்பு தேர்ச்சி


இந்திய ரிசர்வ் வங்கி 

வங்கிகளின் வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 270 பாதுகாவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பதவி: Security Guards
காலியிடங்கள்: 270 (சென்னை 19)
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சில் பெற்றிருக்க வேண்டும்.  முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 1.11.2018 தேதியின்படி கணக்கிடப்படும். 
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை ஆன்லைனில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை:www.rbi.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.11.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/FADVTSG0911201800C8D6B502AE4328AAB79D0777A33777.PDF என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

சிலிண்டருக்கான மானியதொகை சரியாக வருகின்றதா சரிபார்ப்பது எப்படி?


LPG சப்சிடி பணம் சரியாக வருதா இல்லையா அது எப்படி தெரிந்து கொள்வது ?

கேஸ் சிலிண்டர் வாங்கினால் மானிய பணம் சரியான முறையில் அக்கவுண்ட்ல வருதா எப்படி தெரிந்துகொள்வது 
மத்திய அரசு மாதம் தோறும் நாம் வாங்கும் சிலிண்டருக்கு மானியம் வழங்குகிறது, அந்த பணம் நமது வங்கி கணக்கிற்கு தான் அந்த மானியம் வரும்.

ஆனால் நமது விரைவான வாழ்வில் நமது மானிய தொகை நம் வங்கி கணக்கிற்கு மாதம் தோறும் வருகின்றதா என்று பலரும் சரிவர கவனிப்பதில்லை
ஒரு சிலர் பணம் வரவில்லை என்று கேஸ்கம்பெனி வாசலில் காத்திருக்கின்றார்கள். ஆனால் அதனை நீங்கள் எங்கும் அலையாமல் வீட்டில் இருந்தே மாதா மாதம் நம் மானிய தொகை சரியாக வந்துவிடுகின்றதா என்று சரிபார்த்துகொள்ளலாம். அதேபோல் மானிய தொகை வரவில்லை என்றால் அதற்கும் புகார் கொடுக்கலாம். எப்படி என்று பார்ப்போம்
 முதலில் நீங்கள் www.mylpg.inவெப்சைட்டில் செல்ல வேண்டும்,
அங்கு உங்களுக்கு 3 கேஸ் நிறுவனத்தின் பெயர் இருக்கும், அதில் உங்களின் கேஸ் கனெக்சன் பெயரை க்ளிக் செய்ய வேண்டும். அதில் நீங்கள் NEW USER சென்று உங்கள் விவரங்களை பதிவு செய்யுங்கள். பிறகு லாக் இன் செய்து உள் நுழையுங்கள்.
உள் நுழைந்த பிறகு LPG லிருந்து சம்பத்தப்பட்ட அனைத்து தகவல்களும் உங்களுக்கு கிடைத்து விடும, 

அதில்  TRACK YOUR REFILL என்று உள்ளதை கிளிக் செய்தால் நீங்கள் கேஸ் வாங்கியது ,அதற்கு  சப்சிடி தொகை வழங்கப்பட்டதும், எவ்வளவு தொகை வழங்கப்பட்டது என்ற தகவலை நீங்கள் பெறுவீர்கள்.


மேலும் அதில் நீங்கள் கேஸ் புக் செய்யலாம் அதற்கு ஆன்லைனில் பணம் கட்டிகொள்ளலாம். 


 மேலும் மானியம் தொகை உங்கள் அக்கவுண்ட் காட்டிலும் வேறு ஒருவரின் அக்கவுண்டில் போனால், அதன் புகாரை ஆன்லைனில் பதிவு செய்யலாம்,

மேலும் நீங்கள் 18002333555 என்ற எண்ணுக்குகால் செய்து நீங்கள் புகார் செய்யலாம.

 இதுவரை நீங்கள் உங்கள் சிலிண்டருக்குண்டான மானியதொகை பெறவில்லை என்றால் சிலிண்டர் கனெக்‌ஷன் யார் பெயரில் உள்ளதோ அவர்கள் ஆதார்கார்டு, மற்றும் வங்கி கணக்கு புத்தகம் இரண்டையும் உங்கள் கேஸ் கம்பெனிக்கு எடுத்து சென்று விண்ணப்பியுங்கள். 




அறிவியல் ஆசிரியர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் பரிசு மற்றும் விருது வழங்கப்பட உள்ளது...


தமிழ்நாடு அறிவியல் நகரம் சார்பில், நடப்பாண்டு முதல், பத்து அறிவியல் ஆசிரியர்களுக்கு, 25 ஆயிரம் ரூபாய், பரிசுத் தொகையுடன், 'சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது' வழங்கப்பட உள்ளது.

கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், இயற்கை அறிவியல் போன்ற துறைகளில், சிறந்த பத்து ஆசிரியர்களுக்கு, சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதும், 25 ஆயிரம் ரூபாய் பரிசும் வழங்கப்படும் என, ஏற்கனவே அரசு அறிவித்திருந்தது.அதை செயல்படுத்த, பரிசுத் தொகைக்கு, 2.50 லட்சம் ரூபாய்; இதர செலவினங்களுக்கு, 1.30 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்து, பட்டியலை நவ., 30க்குள் அனுப்பும்படி, தமிழ்நாடு அறிவியல் நகரம் துணைத் தலைவர் சகாயம், பள்ளிக் கல்வித் துறைக்கு, கடிதம் அனுப்பி உள்ளார்.அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மட்டுமே, இவ்விருது வழங்கப்பட உள்ளது.

அனைத்து வகை பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டங்கள் தொய்வின்றி நடைபெற அறிவுறுத்துதல் சார்ந்து...

வாட்ஸ்ஆப்-ல் நீங்கள் பேசினால் எழுத்துக்களாக மாற்றும் முறை...

உலகிலேயே முதல் முறையாக செய்தி வாசிக்கும் ரோபோக்கள்~ சீனவில் அறிமுகம்…

உலகத்திலேயே முதல் முறையாக செய்தி வாசிக்கும் செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

செய்திகள் வாசிக்கும் ஏஐ (artificial intelligence) ரோபாக்களை சின்ஹுவா செய்தி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 

சீன செய்தி வாசிப்பாளர்களின் தோற்றத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஏஐ ரோபோக்கள், திரையில் ஓடும் எழுத்துகளைப் படிக்கும். செய்திகளுக்கு ஏற்றவாறு தொடர்ந்து அவற்றின் வாய் அசையும் வகையில் ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஆங்கிலம் மற்றும் சீன மொழி என இரு மொழிகளில் செய்திகளை வாசிக்க தனித்தனியாக இரண்டு ஏஐ ரோபோக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேடுதல் பொறிகள் மற்றும் குரலைக் கண்டுணர்தல் தொழில்நுட்பங்களின் மூலம் இவை உருவாக்கப்பட்டுள்ளது.
" இந்த ஏஐ ரோபோக்கள் 24 மணி நேரமும் அயர்வின்றித் தொடர்ந்து வேலை செய்யும். முக்கியச் செய்திகளை விரைந்து தடுமாற்றமில்லாமல் வாசிக்கும். இவை நிஜ ஏஐ ரோபோக்களைப் போல சுயமான சிந்தித்து முடிவெடுக்காமல், செய்தியைப் படிக்க மட்டுமே செய்யும் " என்று சின்ஹூவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சனி, 10 நவம்பர், 2018

வீட்டு மனை வரன்முறை அவகாசம் நீட்டிப்பு - தமிழக அரசு



சென்னை: தமிழகத்தில் அங்கீகரிக்கப்படாத மனைப் பிரிவுகள் தொடர்பான ஆவணப் பதிவு குறித்த விவரங்களை நவம்பர் 16 ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டுமென தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அங்கீகரிக்கப்படாத மனைப் பிரிவுகளை பதிவு செய்வதற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்த நிலையில், அங்கீகரிக்கப்படாத மனைப் பிரிவுகள் குறித்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த 2016 -ஆம் ஆண்டு அக்டோபர் 20 -க்கு முன்பாக வீட்டுமனையாக பதிவு செய்யப்பட்ட மனைகளைப் பொருத்து உள்ளாட்சி அமைப்பினரால் அங்கீகரிக்கப்பட்ட மனைப் பிரிவுகள், தடையின்மைச் சான்று வழங்கப்பட்ட மனைகளைப் பொறுத்தும் பதிவு செய்யலாம் எனத் தெரிவித்திருந்தது.

எனவே, அங்கீகரிக்கப்பட்ட மனைப் பிரிவுகள் தொடர்பான ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தால் அதுகுறித்த சார் பதிவகத்தின் பெயர், வீட்டுமனைகளாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் எண்ணிக்கை போன்ற விவரங்களைத் தெரிவிக்க கடந்த 3 ஆம் தேதியுடன் காலக்கெடு முடிவடைந்திருந்த நிலையில், காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று பலர் மனு அளித்திருந்தனர்.

இந்நிலையில், அங்கீகரிக்கப்பட்ட மனைப் பிரிவுகள் தொடர்பான ஆவணங்கள் பதிவு செய்யப்பட்ட விவரங்களை வரும் 16 ஆம் தேதி ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என காலக்கெடு நீட்டித்துள்ளது தமிழக அரசு. மேலும் http://www.tnlayoutreg.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


நவம்பர் 15-ம் தேதி முதல் பயோ மெட்ரிக் முறை அமல் : பள்ளி கல்வித்துறை அறிவிப்பு




சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் முறை அமல்படுத்துவது குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நவம்பர் 15-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் காணொளி காட்சி மூலம் அமல்படுத்தப்படுவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.