வியாழன், 31 ஜனவரி, 2019

வாக்காளர் பட்டியல் - நாமக்கல் மாவட்டத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியல் - 31.01.2019 (வியாழக்கிழமை) வெளியிடுதல்-வாக்குச்சாவடி மையங்களாக உள்ள மேல்நிலை , உயர்நிலை, நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகளை திறந்தது வைத்தல் - தொடர்பாக ...

மாணவர்கள், மக்கள் நலன் கருதி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும்~மு.க.ஸ்டாலின்...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்டச் செயலாளர்கள் கவனத்திற்கு...

ஜாக்டோ-ஜியோவின் உயர்மட்டக்குழு கூடி வேலைநிறுத்தப்போராட்டம் தற்காலிகமாக திரும்பப் பெறப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்போர், ஜாமீனில் விடுவிக்கப்பட்டோர், தற்காலிக பணிநீக்கத்தில் இருப்போர்,ஜாமீனில் விடுவிக்கப்பட்டு பணியில் சேராதோர் மேலும் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டோரின் சம்பந்தமான விபரங்கள், பணிநீக்க ஆணை முதலியவற்றை அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் தங்கள் மாவட்டத்திற்குட்பட்ட (எதுவும் விடுபடாமல்)அனைத்து விபரங்களையும் சேகரித்து  உடனே தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளாருக்கும் விரைவு தபாலில் உடன் அனுப்பி வைக்கவும்...

 காலை 11மணிக்குள்
 ஜாக்டோ ஜியோ போராட்ட வழக்கு தொடர்பான பணிநீக்கம் தொடர்பான  ஆணை நகல் மற்றம்  நடவடிக்கை தொடர்பான  நகல்களை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநிலத் தலைவர் அவர்களின் Whatsapp எண்ணிற்கு உடன் அனுப்பவும்...

இவண்
க.மீனாட்சிசுந்தரம்,
பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
மாநில ஒருங்கிணைப்பாளர், ஜாக்டோ ஜியோ.

ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது...

மாணவர்கள் நலன்கருதியும், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோளுக்கிணங்கவும், மாண்புமிகு தமிழக முதல்வர், மாண்புமிகு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் , அனைத்துக்கட்சித் தலைவர்கள் வேண்டுகோளுக்கிணங்கவும், நீதிமன்ற அறிவுறுத்தலின் படியும் ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான துறைரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் ரத்துசெய்து, ஜனவரி 21 அன்று இருந்த நிலையே தொடர தமிழகஅரசுக்கு வேண்டுகோள்விடுக்கிறோம். 

மேலும் 9 நாட்கள் நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் அரசூழியர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

~பாவலர் க.மீனாட்சி சுந்தரம் Ex.MLC,
பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.

புதன், 30 ஜனவரி, 2019

இடைநிலை ஆசிரியர்கள் அங்கன்வாடி பள்ளிக்கு செல்ல மதுரை நீதிமன்றம் வழங்கிய தடை ஆணை...

தேசிய தொழுநோய் ஒழிப்புத்திட்டம் - ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு 30.01.2019 - தொழுநோய் ஒழிப்பு தின உறுதிமொழி எடுத்துக்கொள்ள கோருதல் - தொடர்பாக...

தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழி - 30.1.2019 அன்று காலை 11.00 மணிக்கு தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக் கொள்ளுதல் மற்றும் இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்துதல் - தொடர்பாக...

EMIS இணையதளத்தில் பள்ளி விவரங்கள்,ஆசிரியர் விவரங்கள்,ஆசிரியரல்லாத பணியாளர் விவரங்கள் மற்றும் மாணவர் விவரங்களை 10.01.2019 அன்றுக்குள் முழுமையாக முடித்தல்-தொடர்பாக...

National Leprosy Eradication Programe - Sparsh Leprosy Elimination Campaign 2019-on 30-01-2019 ~Taking Pledgeon Leprosy-reg...