செவ்வாய், 21 மே, 2019
*தமிழக கல்வித்துறை தொலைக்காட்சி ஜூனில் ஒளிபரப்பு தொடக்கம்*
*🌷தமிழக கல்வித்துறை டிவி சேனலில் 55 ஆயிரம் பள்ளிகள் இணைப்பு: ஜூனில் ஒளிபரப்பு தொடக்கம்*
*🌷பள்ளிக் கல்வித்துறைக்காக தனியாக ஒரு டிவி சேனல் (TAC TV) தொடங்குகிறது. இதையடுத்து 53 ஆயிரம் பள்ளிகளுக்கு கல்வி சேனலின் கேபிள் இணைப்பு கொடுக்கப்பட உள்ளது.*
*🌷இந்த சேனலை மாணவர்கள் வீடுகளிலும் பார்க்க முடியும். தமிழக அரசு பள்ளி கல்வித்துறை மாணவர்களுக்காகவே புதிய டிவி தொடங்குகிறது. இதன் மூலம் மாணவர்கள் கல்வித் தொடர்பான தகவல்கள், கல்வித்துறை நிபுணர்கள் நடத்தும் சிறப்பு வகுப்புகளை ஒரே இடத்தில் இருந்து பார்க்க முடியும்.*
*🌷இதன் ஒளிபரப்பு வரும் ஜூன் மாதம் முதல் துவங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை அரசு கேபிள் நிறுவனம் செய்து வருகிறது. இதை பொதுமக்களும் பாக்கலாம்.*
*🌷இந்நிலையில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை, மேனிலைப் பள்ளிகள் என சுமார் 53 ஆயிரம் பள்ளிகளில் இந்த சேனல் தெரியும் வகையில் இணைப்பு வழங்கப்பட உள்ளது.*
*🌷அதற்காக 55 ஆயிரம் பள்ளிகளில் புதியதாக டிவி பெட்டிகள் வாங்க வேண்டும் அல்லது ஏற்கெனவே உள்ள டிவி பெட்டிகளை சீர்செய்ய வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.*
*🌷இதற்கான செலவுகளை அக்குமிலேஷன் நிதி, பெற்றோர் ஆசிரியர் கழக நிதிகளில் இருந்து செலவிட வேண்டும். உள்ளூர் அரசு கேபிள் டிவி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் மூலம் பள்ளிகளில் இணைப்பு பெற வேண்டும்.*
*🌷பள்ளிக் கல்விக்கான சேனல், அரசு கேபிள் நிறுவன அலைவரிசை எண் 200ல் பார்க்க முடியும்.*
*🌷ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்பு வரை உள்ள பாடங்கள், கல்வி தொடர்பான நிகழ்வுகள், ஒவ்வொரு பாடத்திலும் வல்லமை பெற்ற ஆசிரியர்களை கொண்டு பாடம் நடத்தி அதை ஒளிப்பரப்புவது என்று பல்வேறு நிகழ்வுகள் இந்த சேனலில் வர உள்ளன.*

திங்கள், 20 மே, 2019
*1.30 லட்சம் ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்ட பயிற்சி வகுப்புகள்-தமிழக கல்வித்துறை*
*🌷1.30 லட்சம் ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்ட பயிற்சி வகுப்புகள் - தமிழக கல்வித்துறை*
*பள்ளிக் கல்வியில் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் 1 லட்சத்து 30 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க எஸ்இஆர்டி முடிவு செய்துள்ளது.*
*பள்ளிக் கல்வியில் இதுவரை நடைமுறையில் இருந்த பாடத்திட்டத்தை, மாற்றி தற்கால வளர்ச்சியை அடிப்படையாக கொண்ட புதிய பாடத்திட்டத்தை உருவாக்க முன்னாள் துணை வேந்தர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் கல்விக் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு கடந்த ஆண்டு 1,6,9,பிளஸ் 1 வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்தை உருவாக்கியது. அதன்பேரில் புதிய பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு, பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.*
*மீதம் உள்ள 2,3,4,5,7,8,10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பாடத்திட்டம் தயாரிக்கும் பணி நடந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அந்த பணிகள் முடிக்கப்பட்டு, புதிய பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டன. தற்போது அந்த புத்தகங்கள் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இது தவிர தனியார் சில்லறை விற்பனை கடைகளுக்கும் வினியோகம் செய்யப்படுகிறது.*
*இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கும் போது அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 10, பிளஸ் 2 வகுப்புகளில் பாடம் நடத்தும் ஆசிரியர்கள் புதிய பாடத்திட்டத்தை புரிந்து கொண்டால் தான், மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியும். அதனால் 1 லட்சத்து 30 ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டத்தின் தயாரிக்கப்பட்ட பாடப்புத்தகங்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சி வரும் ஜூன் மாதம், மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித்துறையின் மூலம் நடத்தப்படுகிறது.*

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)