திங்கள், 2 செப்டம்பர், 2019

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

ஆசிரியர்கள் தேவையுள்ள நிலையில் கல்வி மாவட்டம் விட்டு கல்வி மாவட்டம், ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணியில் மூத்த இடைநிலை ஆசிரியர்களை பந்தாடுவது என்ன வகை நியாயம்?! உபரியின் மெய்ப்பொருள் என்ன?!கலந்தாய்வின் உண்மையான அர்த்தமென்ன?! நோக்கமென்ன?!

தமிழகரசே!
 கல்வித்துறையே! ஒன்றியத்திற்குள் கல்வி பயிலும் மாணாக்கர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 
ஆசிரியர்கள் தேவையுள்ள நிலையில்
 கல்வி மாவட்டம் விட்டு கல்வி மாவட்டம்,
ஒன்றியம் விட்டு ஒன்றியம்
 பணியில் மூத்த  இடைநிலை ஆசிரியர்களை பந்தாடுவது என்ன வகை நியாயம்?! உபரியின்  மெய்ப்பொருள் என்ன?!கலந்தாய்வின் உண்மையான அர்த்தமென்ன?!  நோக்கமென்ன?!

நாமக்கல் மாவட்டத்தில் 30.08.2019 இடைநிலை ஆசிரியர்கள் பணிநிரவலில் முறைகேடு - விதிகள் பின்பற்றாமல் ஆசிரியர்கள் இடமாற்றம் - தவறிழைத்தவர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஆசிரியர் மன்றம் வலியுறுத்தல்

தமிழக அரசே!
 பள்ளிக்கல்வித்
துறையே!
நாமக்கல் மாவட்டத்தில்
31.07க்கும், 01.08க்கும்,
30.8க்கும், 31.08க்கும், 01.09.க்கும்
பெரு வித்தியாசம் தெரியாத
எருமப்பட்டி வட்டாரக்கல்வி அலுவலரால் பந்தாடப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியைக்கு
நீதி வழங்குக!
கல்வித்துறை மாண்பினை பாதுகாத்திடுக!

EMIS - இணையத்தில் புதிதாக ஏற்ற வேண்டிய தகவல்கள் என்ன? எப்படி ஏற்ற வேண்டும்?

தற்போது Emis இனைய தளத்தில் school profile  பகுதியில் மேற்காணும் PDF format ல் உள்ள படத்தில் உள்ளவாறு

1) Additional profile details

2) UDISE+Declaration


என்ற இரண்டு பகுதிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது .

கீழே உள்ள Pdf file- ஐ Download செய்து தெரிந்துகொள்ளவும் .





தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்டம்(கிளை)~விரைவு மாவட்டச்சிறப்புச் செயற்குழுக்கூட்டம் அழைப்பு…

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்டம்(கிளை)
------------------------------------ விரைவு மாவட்டச்சிறப்புச் செயற்குழுக்கூட்டம் அழைப்பு...
------------------------------------
வணக்கம்.

இடம்:  
ஆர்.வி.கூட்ட அரங்கம்,
ஓட்டல் லட்சுமி விலாசு,
இராசீபுரம்.
(பழைய பேரூந்துநிலையம்,
அரசு மருத்துவமனை எதிரில்)

நாள்:
01.09.19(ஞாயிறு)

நேரம்: 
பிற்பகல் 03.00மணி

தலைமை: 
திரு.க.ஆசைத்தம்பி ,
மாவட்டத்தலைவர்.

முன்னிலை:
திரு.பெ.பழனிசாமி ,மாநிலத்தலைமை நிலையச்செயலாளர்.

கூட்டப்பொருள்:
1)மாவட்ட மன்றச் செயல்பாடுகள்.

2)ஜாக்டோ-ஜியோ நடவடிக்கைகள்.

3)ஆசிரியர் கோரிக்கைகள்.

4)மாவட்டச் செயலாளர் கொணர்வன . 

தங்களின் 
பங்கேற்பும், பங்களிப்பும் அன்புடன் வேண்டுகிறேன். 
                       நன்றி.
            -முருகசெல்வராசன்,             மாவட்டச்செயலாளர்.