சனி, 28 செப்டம்பர், 2019
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்-நாமக்கல் மாவட்டம் கிளை ஒன்றியச் செயலாளர்கள் கூட்டம் நாள் 29.09.19 ஞாயிறு காலை
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம்
நாமக்கல் மாவட்டம் (கிளை)
*********************
விரைவு ஒன்றியச் செயலாளர்கள்
கூட்ட அழைப்பு
********************
அன்புடையீர்! வணக்கம்.
இடம்:
மன்ற அலுவலகம்,
பரமத்தி-வேலூர்.
நாள்: 29.09.19 (ஞாயிறு)
நேரம்: முற்பகல் 10.00மணி
கூட்டப்பொருள்:
1.உறுப்பினர்பதிவு
2.வரவு-செலவு
3.ஜாக்டோ-ஜியோ போராளிகளுக்கு பாராட்டு விழா
4.ஜாக்டோ-ஜியோ நடவடிக்கைகள்
5.ஆசிரியர்கோரிக்கைகள்
6.மாவட்டச் செயலாளர் கொணர்வன
தங்களின் வருகையை அன்புடன் எதிர்நோக்குகிறேன். தவறாது வருக !
நன்றி!
முருகசெல்வராசன்.
நாமக்கல் மாவட்டம் (கிளை)
*********************
விரைவு ஒன்றியச் செயலாளர்கள்
கூட்ட அழைப்பு
********************
அன்புடையீர்! வணக்கம்.
இடம்:
மன்ற அலுவலகம்,
பரமத்தி-வேலூர்.
நாள்: 29.09.19 (ஞாயிறு)
நேரம்: முற்பகல் 10.00மணி
கூட்டப்பொருள்:
1.உறுப்பினர்பதிவு
2.வரவு-செலவு
3.ஜாக்டோ-ஜியோ போராளிகளுக்கு பாராட்டு விழா
4.ஜாக்டோ-ஜியோ நடவடிக்கைகள்
5.ஆசிரியர்கோரிக்கைகள்
6.மாவட்டச் செயலாளர் கொணர்வன
தங்களின் வருகையை அன்புடன் எதிர்நோக்குகிறேன். தவறாது வருக !
நன்றி!
முருகசெல்வராசன்.
வெள்ளி, 27 செப்டம்பர், 2019
திராவிடம் கற்போம்-திருவல்லிக் கேணி முதல் திருவாரூர் வரை நூல் சென்னையில் வெளியீடு...
கண் இருந்தும் பார்க்க மாட்டோம். காது இருந்தும் கேட்கமாட்டோம். என திராவிட இயக்கத்தின் மீது ஒவ்வாமை கொண்டவர்கள் தங்கள் ஒற்றை வாயை இரண்டு மூன்று மடங்காக்கி பழிபோடுவது மட்டும் காலந்தோறும் நடந்து வருகிறது.
அண்ணா தி.மு.க. என்ற கட்சியில் அமைச்சராக இருப்பவரே மும்மொழிக் கொள்கையை அண்ணா ஆதரித்தார் என்பது அறியாமையா-ஆணவமா என்பதைத் தாண்டி, அவரது கருத்தைக் கேட்டவர்களுக்கு ஏற்படும் குழப்பமும் மயக்கமும் வரலாற்றுத் திரிபுகளுக்கு வழி வகுக்கிறது. அதனால் திராவிட இயக்க வரலாற்றினைத் திரும்பத் திரும்ப பதிவு செய்வதும், அது குறித்து உரையாடுவதும் அவசியமாகும்.
அத்தகைய பணிகளில் ஒன்றாக, கௌரா ராஜசேகர் அவர்களின் சீதை பதிப்பகத்தின் சார்பில் 'திருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை' என்ற திராவிட இயக்க வரலாற்று நூல் 28-9-2019 சனி (நாளை) மாலை சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் வெளியிடப்படுகிறது.
கலைஞரின் படைப்புகளில் தொடங்கி, திராவிட இயக்கம் சார்ந்த நூல்களை வெளியிடுவதை தனது தொழில் சார்ந்த அறமாகக் கடைப்பிடித்து வருகிறார் கௌரா ராஜசேகர்.
'திருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை' என்ற இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் அர.திருவிடம். இவரும் கௌரா ராஜகேசரைப் போலவே திருவாரூர்க்காரர். திருவிடம் அவர்களின் தந்தை திருவாரூர் அரங்கராசன் எனப்படும் 'தண்டவாளம்' ரெங்கராஜ், பழைய தஞ்சை மாவட்டத்தின் பெரியார் பெருந்தொண்டர். கலைஞரின் இளமைக்கால அரசியல் பணிகளில் வழிகாட்டி ஊக்கப்படுத்திய சிங்கராயர், வி.எஸ்.எம்.யாகூப் போன்ற பெரியார் தொண்டர்கள் வரிசையில் தண்டவாளம் ரெங்கராஜ் முக்கியமானவர்.
கலைஞருக்கு திராவிடம் பயிற்றுவித்தவரின் மகன், கலைஞரிடம் திராவிடம் பயின்றார். திருவிடத்தின் தந்தை கலைஞருக்கு ஆசான் என்றால், தண்டவாளம் ரெங்கராஜின் மகனுக்கு கலைஞரே ஆசான். அதனால்தான் திராவிட இயக்கத்தை குடும்பக் கட்சி என்று யாராவது சொன்னால், "ஆமாம்.. அப்படித்தான்" என கெத்தாக சொல்ல முடியும்.
5 பாகங்களாக ஏறத்தாழ 1300 பக்கங்கள் அளவிற்கு அர.திருவிடம் எழுதியுள்ள இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழாவை இளம் திராவிடர்கள் அமைப்பான திராவிட சிறகுகள் வெளியிடுகிறது. நூலை அறிமுகம் செய்து பேசுகிறார் தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.
அறிமுகம் செய்வது என்றால், திராவிட இயக்க வரலாற்று நூலான இதனை அவர் புரட்டிப் படித்திருக்க வேண்டியது அவசியமாகிறது. அதன் வழியாக, கலைஞரிடம் திராவிடம் பயின்ற அர.திருவிடத்தின் வாயிலாக, கலைஞரின் பேரன் திராவிடம் பயில வேண்டிய காலம் இது.
மேடையில், கலைஞரின் கல்லக்குடிக் களத்தின் சிறைத்தோழர் காரைக்குடி இராம.சுப்பையாவின் மகன் அண்ணன் சுப.வீரபாண்டியன், தி.மு.க.வின் தொடக்க கால வரலாற்றில் அண்ணாவுடன் இணைந்து நின்று கழகம் வளர்த்த சி.வி.எம்.அண்ணாமலை அவர்களின் பேரனும் காஞ்சிபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சி.வி.எம்.பி.எழிலரசன், கலைஞரின் நண்பரும் திராவிடப் பொருளாதார அறிஞருமான நாகநாதன் அவர்களின் மகன் மருத்துவர் எழிலன் ஆகியோர் நூல் திறனாய்வு செய்கின்றனர்.
கலைஞரின் பேரன் நாளை பங்கேற்க இருப்பது அவரது வழக்கமான பரிவாரங்களுடனான இன்னொரு நிகழ்ச்சி அல்ல. அண்ணாவின் வார்த்தைதகளில் சொல்வது என்றால், 'மாலை நேரப் பல்கலைக்கழகம்'.
பயன்படுத்தட்டும். பயன்படட்டும்.
திருவள்ளுவர் ஆண்டு 2050 புரட்டாசி 10,
//கோவிலெனின் முகநூல்பதிவு//
ஐ.நா. பருவநிலை மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்களை பார்த்து உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்? என முழங்கிய 16 வயது சிறுமிக்கு நோபலுக்கு இணையான விருது வழங்கப்பட உள்ளது...
அமெரிக்காவின் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் கடந்த திங்கள்கிழமை (செப்டம்பர் 23) ஸ்வீடன் நாட்டை சேர்ந்த கிரேட்டா தன்பெர்க் என்ற 16 வயது சிறுமி (பருவநிலை மாற்ற ஆர்வலர்) பங்கேற்றார்.
அந்த மாநாட்டில் பேசிய அந்த சிறுமி கூறியதாவது:-
நான் இங்கே இருந்திருக்கக் கூடாது. இந்த பெருங்கடலின் மறுமுனையில் இருக்கும் பள்ளியில் நான் இருந்திருக்க வேண்டும்.
ஆனாலும் நீங்கள் அனைவரும் நம்பிக்கையோடு எங்களிடம் வருகிறீர்கள். உங்களுக்கு எவ்வளவு தைரியம்?
உங்களது வெற்று வார்த்தைகளால் எனது கனவுகளை, எனது குழந்தைப் பருவத்தைக் திருடி விட்டீர்கள். ஆனாலும், நான் பாக்கியசாலிகளில் ஒருத்தி தான்.
மக்கள் துன்பப்படுகிறார்கள், செத்து மடிகிறார்கள்.
மொத்த சூழலியலும் உருக்குலைந்துவிட்டது. அழிவின் தொடக்கத்தில் நாம் இருக்கிறோம்.
ஆனால், பணம் குறித்து... நிரந்தர பொருளாதார வளர்ச்சி குறித்த கற்பனை கதைகளைப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.
உங்களுக்கு எவ்வளவு தைரியம்?
நீங்கள் எங்களை வஞ்சித்துவிட்டீர்கள்
உங்களது துரோகத்தை இளைஞர்கள் புரிந்து கொள்ளத் தொடங்கிவிட்டார்கள்.
எதிர்கால தலைமுறையினரின் விழிகள் உங்கள் மீது தான் உள்ளன.எங்களுக்குத் துரோகம் செய்ய நினைத்தால்,நான் இப்போது சொல்கிறேன், "நாங்கள் உங்களை மன்னிக்க மாட்டோம்"
என ஆக்ரோஷமாக முழங்கினார். அவர் பேசிய வார்த்தைகள் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், கிரேட்டா தன்பெர்க் 'வாழ்வாதார உரிமை விருது'-க்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஸ்வீடன் நாட்டை சேர்ந்த மனித உரிமைகள் விருதுக்கான தேர்வுக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் 'வாழ்வாதார உரிமை விருது' நோபல் பரிசுக்கு நிகராக கருதப்படுவதால் இது 'மாற்று நோபல் விருது' என்றும் அழைக்கப்படுகிறது.
கிரேட்டா தன்பெர்க் 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 'வெள்ளிக்கிழமைகள் எதிர்காலத்திற்கானது' என்ற இயக்கத்தின் பெயரில் 'பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த பள்ளிகள் வேலைநிறுத்தம் செய்கின்றன' என்ற பதாகைகளுடன் ஸ்வீடன் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்த போராட்டத்தின் வளர்ச்சியாக கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20) 'உலக பருவநிலைமாற்ற போராட்டம்' என்ற பெயரில் உலகம் முழுவதும் 150-க்கும் அதிக நாடுகளில் பருவநிலைமாற்ற ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலத்தரப்பட்ட மக்கள் இணைந்து போராட்டம் நடத்தினர்.
பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை உலகம் முழுவதும் கொண்டு சென்று ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் ஆதரவு குரல்களை வெளிப்படுத்த காரணமாக இருந்து உலக தலைவர்கள் மத்தியில் நிலைமையை எடுத்து கூறியதற்காக கிரேட்டா தன்பெர்க்கு 'மாற்று நோபல் விருது' என அழைக்கப்படும் 'வாழ்வாதார உரிமை விருது' வழங்கப்படுவதாக இந்த விருது வழங்கும் வாழ்வாதார அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
2019ம் ஆண்டுக்கான விருதுக்காக 4 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதில் ஸ்வீடனைச் சேர்ந்த சிறுமி க்ரேடா தன்பெர்க்கும் ஒருவராவார்.
பிரேசிலை சேர்ந்த பழங்குடியின தலைவர் டேவி கோபநாவா சீனாவை சேர்ந்த மகளிர் உரிமைகள் வழக்கரைஞர் குவோ ஜியான்மெய் மேற்கு சஹாரா மனித உரிமைகள் பாதுகாப்பாளர் அமினாதோ ஹைதர் ஆகியோரும் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)