வியாழன், 17 அக்டோபர், 2019

பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பட்டியல் வெளியீடு-& பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறை நாள் 17.10.2019






NMMS இணையதளத்தில் 21 .10 .2019 முதல் 31.10. 2019 பதிவேற்றம் செய்யலாம் மற்றும் வழிகாட்டுதல் நெறிமுறைகள்






*🌷தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அரசாணை நிலை எண்.323 நாள் 17.10.2019 ன்படி அகவிலைப்படி 12% த்திலிருந்து 5 % உயர்ந்து 17% ஆக உயர்ந்துள்ளது*






*அக்டோபர் 17,வரலாற்றில் இன்று*

*🌷அக்டோபர் 17, வரலாற்றில் இன்று.*

*🌷சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சர்*
*ஆர். கே. சண்முகம் பிறந்த தினம் இன்று.*

*சர் ஆர். கே. சண்முகம் செட்டியார் (அக்டோபர் 17, 1892 – மே 5, 1953) இந்தியப் பொருளாதார நிபுணர். இந்தியாவின் போற்றத்தக்க பாராளுமன்ற வாதி, சிறந்த பேச்சாளர், தமிழிசை இயக்கத்தை உருவாக்கி வேரூன்றச் செய்தவர்.*


*1947 ஆம் ஆண்டு இந்திய விடுதலைக்குப் பின்னர் பதவியேற்ற இந்திய அரசின் முதல் நிதியமைச்சர், மற்றும் இந்திய நாடாளுமன்றத்தின் முதல் தமிழ் சபாநாயகர் என்ற பல பெருமைகளை உடையவர். நாட்டுப் பிரிவினை போது எழுந்த கணக்கு பிணக்குகளுக்கு சரியான முடிவு கண்டவர்.*

 *கோயம்புத்தூர் நகரில் பல தொழிற்சாலைகளுக்கு உரிமையாளர்களான வாணிய செட்டிக் குடும்பத்தில் ஆர். கந்தசாமி செட்டியார் - ஸ்ரீரங்கம்மாள் தம்பதிக்கு மூத்த மகனாகப் பிறந்தார். சண்முகனாருடன் பிறந்தவர்கள் மூன்று தம்பிகள், இரண்டு தங்கைகள்.*

*கோவை யூனியன் உயர்நிலைப் பள்ளியில் தமது பள்ளிக் கல்வியைப் பயின்றார். பின்னர் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பட்டப் படிப்பையும், சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பையும் முடித்தார். மிகக் குறுகிய காலமே வழக்குரைஞராகப் பணியாற்றி, பின்னர் பொதுவாழ்வில் ஈடுபட்டார்.*


 *வாழ்வில் பல முக்கிய பொறுப்புகளை வகித்தார். கோவை நகர் மன்ற உறுப்பினராகவும், நகர் மன்றத் துணைத் தலைவராகவும், சென்னை ராஜதானியின் சட்டமன்ற உறுப்பினராவும், இந்திய தேசிய சட்ட சபையின் (அன்றைய பாராளுமன்றம்) உறுப்பினராகவும் திறம்படப் பணியாற்றினார்.*

*சர் ஆர்.கே.சண்முகம் செட்டி 1920இல் அன்னி பெசன்ட் அம்மையாருடன் சில மாதங்கள் இங்கிலாந்து சென்று பல பொதுக் கூட்டங்களில் உரையாற்றி, இந்திய சுயாட்சிக்காக தமது கருத்துகளை வெளியிட்டார்.*


*1931 முதல் 1945 வரை கொச்சி அரசின் திவானாகப் பணிபுரிந்தார். அவரது ஆட்சிக்காலத்தில் அனைத்து துறைகளிலும் நிர்வாக சீர்மை மேம்பட்டது. அவரது கண்காணிப்பில் கொச்சி அரசின் தலைமையகம் நவீனப்படுத்தப்பட்டது.*

*1929 இல் பன்னாட்டு தொழிலாளர் நிறுவன மாநாட்டில் இந்தியப் பிரதிநிதியாக கலந்து கொண்டார். 1923 முதல் 1929 வரை மத்திய சட்டமன்ற கீழவையில் உறுப்பினராக இருந்தார். அந்த அவையின் துணைத்தலைவராக 1931-33 ஆண்டுகளிலும், தலைவராக 1933-34களிலும் பதவியில் இருந்தார். 1938 ஆம் ஆண்டு ஜெனிவாவில் உலகநாடுகள் சங்க (League of Nations) கூட்டத்திற்கு இந்தியாவின் சார்பாக சென்றிருந்தார். 1944ஆம் ஆண்டு பிரெட்டன் வுட்ஸ் உலக நாணய மாநாட்டிலும் கலந்து கொண்டார். 1945 ஆம் ஆண்டு மன்னர்கள் சங்கத்திற்கு அரசியலமைப்பு ஆலோசகராகப் பணியாற்றினார். இந்திய அரசியலமைப்பு சட்டமன்றத்திலும் உறுப்பினராகப் பங்கேற்றார்.*


*நாடாளுமன்றத்தின் சுயராஜ்யக் கட்சியின் (காங்கிரஸ்) தலைவராக நேருவும், செயலாளராக சித்தரஞ்சன் தாசும், கொறடாவாக ஆர்.கே.சண்முகனாரும் பணியாற்றிச் சிறப்பித்தனர்.*


*இளம் வயதிலேயே பல மொழிகளைக் கற்றறிந்தார். கோவை மாநகரில் ரேஸ் கோர்ஸ் பகுதியில் இருந்த இவரது ஹவார்டன் எனும் இவரது இல்லத்திலிருந்த நூலகம் இந்தியாவிலுள்ள வீட்டு நூலகங்களில் மிகப்பெரிய வீட்டு நூலகங்களில் ஒன்று.*

*கோவை அவினாசி சாலையில் 1953ஆம் ஆண்டு தனது தாயார் சீரங்கம்மாள் நினைவாக ஆர்.கே. சீரங்கம்மாள் கல்வி நிலையம் என்று 6 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை போதிக்கும் கல்வி நிறுவனம் ஒன்றைத் துவக்கினார். ஆனால், பள்ளி துவக்க விழாவிற்கும் அதன் செயல்பாட்டினைக் காணும் நிலையில் 1953 மே 5ஆம் நாள் இயற்கையெய்தினார்.*


*இந்திய தேசிய சட்ட சபையின் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், இந்திய நாடாளுமன்றத்தின் முதல் தமிழ் சபாநாயகர் என்ற பெருமைக்குரியவர்.*

*அவர் போராட்டங்களின்றி சட்டவழியே தன்னாட்சி மற்றும் விடுதலை பெறுவதை விரும்பினார். அவர் நீதிக்கட்சியில் சிலகாலம் உறுப்பினராக இருந்தார். பின்னர் சுதந்திராக் கட்சியின் முதன்மை கொறடாவாகவும் இருந்தார்.*

*இந்திய விடுதலையின்போது "உலக நிகழ்வுகளின் முதன்மைக் காரணத்தாலும், இதுவரை ஆட்சி புரிந்தவர்களின் பெருந்தன்மையான விட்டுக்கொடுத்தலினாலும் வெளிநாட்டு ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றுள்ளோம் " என்று கூறியுள்ளார்.*

*1941இல் இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, இந்தியாவின் நிரந்தர வர்த்தகப் பிரதிநிதியாக ஐக்கிய அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டார். பன்னாட்டு நிதியம், உலக வங்கி ஆகிய அமைப்புகளைத் தோற்றுவிக்க இவர் ஆற்றிய பணிகள் பல.*


*1947இல் இந்தியா விடுதலை அடைந்த பின்னர், மகாத்மா காந்தியின் விருப்பப்படி முதல் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். உலகப் போரின் பின்னர் பெரும் பொருளாதார வீழ்ச்சி அடைந்த அந்தக் கால கட்டத்தில் உலக வரலாற்றில் இந்தியப் பிரிவினையின் காரணத்தால் நடைபெற்ற மிகப்பெரிய மதக் கலவரங்கள், இனப் படுகொலைகள், பலக

*அக்டோபர் 17,வரலாற்றில் இன்று*

*🌷அக்டோபர் 17, வரலாற்றில் இன்று.*
-----------------------------------------------
*🌷கண்ணதாசன் நினைவு தினம் இன்று.*

*திரைப்பட பாடல்கள் என்றாலே நம் நினைவுக்கு வருவது கண்ணதாசன் தான்.இலக்கியங்களை பாமரரும் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிமையாக்கி தந்தவர் அவர்.*


*கண்ணதாசன் (ஜூன் 24 1927 - அக்டோபர் 17 1981)  நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.*

*அக்டோபர்-17,வரலாற்றில் இன்று*

*🌏அக்டோபர் 17, வரலாற்றில் இன்று.*
-----------------------------------------------
*🌷உலக வறுமை ஒழிப்பு தினம் இன்று.*

*ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 17 ஆம் தேதி உலக வறுமை ஒழிப்பு தினமாக உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.*

*இந்நாள் 1987 ஆம் ஆண்டுதான் முதன் முதலாக பிரான்சின் பாரிஸ் நகரில் கடைப்பிடிக்கப்பட்டது.*

*இருந்தபோதிலும் உலகளாவிய ரீதியில் வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி பசிக்கொடுமையில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபை 1992ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 17ஐ வறுமை ஒழிப்பு நாளாக  அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டது.*

*உலகில் வறுமை நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ வேண்டியதன் அவசியம் குறித்து அனைத்து தரப்பினரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் வறுமை ஒழிப்பு தினத்தில் பல்வேறு செயல் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.*

*ஒரு நாட்டின் அல்லது இடத்தின் அடிப்படை வாழ்க்கைத் தரத்துக்குக் கீழ் வாழும் மக்களை ஏழ்மை நிலையில் அல்லது ஏழ்மை நிலைக் கோட்டின் கீழ் வாழ்பவர்கள் எனலாம்.*

*பொதுவாக ஒரு குறிப்பிட்ட அளவு வருமானத்தை வைத்தே ஏழ்மை நிலை அளவு சார்ந்து மதிப்பிடப்படுகின்றது.*

*இருப்பினும் ஏழ்மை நிலை உணவு, சுத்தமான நீர், உடை, தங்குமிடம், கல்வி, சுகாதாரம், சமூக வாய்ப்புக்கள், மனித அரசியல் உரிமைகள் தொடர்பான நிலையைக் குறிக்கின்றது.*

புதன், 16 அக்டோபர், 2019

மெதுவாக கற்போருக்கு தமிழ் எளிமை சொற்கள்



க வரிசை சொற்கள்
Clickhere....
https//drive.google.com/file/d/1At-k46_7uQEl-44Kca69G_v5IcSNK4Bl/view?usp=drivesdk

ச வரிசை சொற்கள்
Clickhere.....

த வரிசைசொற்கள்
Clickhere......

ந வரிசைசொற்கள்
Clickhere.......

ப வரிசை சொற்கள்
Click here.......

ம வரிசை சொற்கள்
Clickhere......

வ வரிசை சொற்கள்
Clickhere.......

நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செயல்முறை நாள் 16.10.2019


முதலமைச்சர் காப்பீடு திட்டம் அறுவைசிகிச்சை பொது தடுமாறாமல் இருக்க முன்கூட்டியே இவற்றை செய்து கொள்ளுங்கள்

உபயோகமான தகவல்:
பொதுமக்களில் பலர் உடல் நலமில்லாமல் மருத்துவமனைகளில் அனுமதிக் கப்பட்டு அறுவை சிசிச்சை செய்ய முயலும் போது முதலமைச்சர் காப்பீடு உள்ளதா? என்று கேட்கிற நேரத்தில், இல்லை என தடுமாறுகிறார்கள். எனவே, இந்த மனுவை காப்பி எடுத்து தங்கள் பகுதி கிராமநிர்வாக அலுவலர் (VA 0)விடம் இவ்விண்ணப்பத்தில்  ஆண்டு வருமானம் ₹ 72 ஆயிரம் என கையெழுத்து வாங்கிக் கொண்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் குடும்பத்தினர் அனைவரும் சென்று போட்டோ எடுக்க வேண்டும். அங்கு ஒரு நம்பர் தருவர். அதை குறித்து வைத்துக்கொண்டு மருத்துவ மனைக்கு சென்று நம்பரை கூறினால் ஆபரேசன் செய்வார்கள். தேவைப்படுவோர் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

Attendance app மூலம் முழுமையாக வருகைபதிவு செய்யாத பள்ளி தலைமையாசிரியர் மீது நடவடிக்கை - CEO