சனி, 19 அக்டோபர், 2019

*🌷அக்டோபர் 19, வரலாற்றில் இன்று.*
-------------------------------------------------

*🌷நாமக்கல் கவிஞர் வே.ராமலிங்கம் பிள்ளை பிறந்த தினம் இன்று.*

      *வே.ராமலிங்கம் பிள்ளை(அக்டோபர் 19, 1888 - ஆகஸ்ட் 24, 1972) “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” போன்ற தேசபக்தி பாடல்களைப் பாடி தேசியத்தையும், காந்தியத்தையுயும் போற்றியவர். முதலில் பாலகங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட இவர் பின்னர் மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்டபின் அகிம்சை ஒன்றினால் மட்டுமே விடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்தவர்.*

*இராமலிங்கனார் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டம், தற்போதைய நாமக்கல் மாவட்டம்* *மோகனூரில் அம்மணிம்மாள், வெங்கடராமன் ஆகியோருக்கு பிறந்தார்.* *திருச்சிராப்பள்ளி மாவட்ட காங்கிரஸின் செயலாளராகவும், கரூர் வட்டாரக் காங்கிரஸ்* *தலைவராகவும், நாமக்கல் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றியவர்.* *தேசபக்திமிக்க தமது பேச்சினால் பல இளைஞர்களை தேசத் தொண்டர்களாக மாற்றியவர். அரசின் தடையுத்தரவையும் மீறி,* *கூட்டங்களில் சொற்பொழிவு ஆற்றியவர்.* *1932ல் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரக்ப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஓராண்டு சிறைத்தண்டனை* *பெற்றவர். ‘அரசவைக் கவிஞர்’ பதவியும், `பத்ம பூஷண்’ பட்டமும் பெற்றவர்.*
*‘தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா’ என்கிற வீரநடைக்கு வித்திட்ட அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாக அமைக்கப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள அரசு தலைமைச் செயலகப் பத்து மாடிக் கட்டிடத்திற்கும் இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.*

*கவிஞரின் நாட்டுப்பற்று :*

*முத்தமிழிலும், ஓவியக்கலையிலும் வல்லவர், சிறந்த விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். உப்புச்* *சத்தியாகிரகத்தில் பங்கு பெற்றதால் சிறைத் தண்டனையும் அடைந்தார்.*
*'கத்தி யின்றி ரத்த மின்றி*
*யுத்த மொன்று வருகுது*
*சத்தி யத்தின் நித்தி யத்தை*
*நம்பும் யாரும் சேருவீர்’*
*என்னும் பாடலை உப்புச் சத்தியாகிரகத் தொண்டர்களின் வழிநடைப் பாடலாகப் பாடிச் செல்வதற்கு இயற்றிக் கொடுத்தார்.*

*மத்திய அரசும் , மாநில அரசும் செய்த சிறப்பு :*

*கவிஞரின் நாட்டுப் பற்றைப் போற்றும் வகையில் மாநில அரசு அவரை அரசவைக் கவிஞராகவும், பின்னர் தமிழக சட்ட மேலவை உறுப்பினராகவும் நியமித்துச் சிறப்பித்தது. மத்திய அரசு அவருக்கு பத்ம பூஷன் விருதளித்துப் போற்றியது.*

*நினைவு இல்லம் :*

*தமிழ்நாடு அரசு இவர் வாழ்ந்த நாமக்கல்லிலுள்ள இல்லத்தை நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லம் ஆக்கியுள்ளது. இதில் நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.*

NTSE 2019 -தேசிய திறனாய்வு தேர்வு நுழைவுச் சீட்டு 21.10.2019 முதல் பதிவிறக்கம் செய்யலாம்



வெள்ளி, 18 அக்டோபர், 2019

உயிர் எழுத்துக்கள் படம் சொற்கள்

மத்தியரசு ஊழியருக்கு உடைப்படித் தொகை ரூ5000/-ஆக தொடர்கிறது


*அக்டோபர்-18,வரலாற்றில் இன்று*

*🌷அக்டோபர் 18, வரலாற்றில் இன்று.*

---------------------------------------------
*பிபிசி வானொலி ஆரம்பிக்கப்பட்ட தினம் இன்று(1922).*

*அக்டோபர் 18-வரலாற்றில் இன்று*

*🌷அக்டோபர் 18, வரலாற்றில் இன்று.*
-------------------------------------------------
*சார்லஸ் பாபேஜ் நினைவு தினம் இன்று.*


*சார்லஸ் பாபேஜ் (Charles Babbage) பிரித்தானிய பல்துறையறிஞர்* *கணிதவியலாளர், கண்டுபிடிப்பாளர்,* *பகுப்பாய்வுத் தத்துவவாதி, இயந்திரப் பொறியாளர்* *என்று பல பரிமாணங்கள் கொண்டவர். இன்றைய கணினிகள் பயன்படுத்தும் எந்திரக் கணக்கியல் இயந்திரங்களைக் கண்டுபிடித்தவர்.*
*1991இல் பிரித்தானிய விஞ்ஞானிகள் இவர் திட்டமிட்டபடி வித்தியாசப் பொறியினை (difference engine) வடிவமைத்தனர். அது சரியாக இயங்கியமை இவரது திறமையை நிரூபித்தது.*

*சார்ல்ஸ் பாபேஜின் கண்டுபிடிப்புகள்*

*புகையிரதத்தின் தைனமோ மீட்டர்*

*நியமத் தொடருந்துப் பாதை (railway track) அளவுக்கருவி*

*சீரான அஞ்சல் கட்டண முறை*

*கலங்கரை விளக்கு ஒளி*

*கீறிவிச் ரேகைக் குறியீடு*

*சூரிய ஒளி கொண்டு கண்களைச் சோதிக்கும் கருவி*

*அக்டோபர் 18-வரலாற்றில் இன்று.

*🌷அக்டோபர் 18, வரலாற்றில் இன்று.*

----------------------------------------------
*தாமஸ் ஆல்வா எடிசன் நினைவு தினம் இன்று*

*தாமஸ் ஆல்வா எடிசன் (பிப்ரவரி 11, 1847 – அக்டோபர் 18, 1931)   உலக வரலாற்றில் அதிக கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர்  இவர்.  ஒளி விளக்கு, ஒலிவரைவி, திரைப் படக்கருவி உள்ளிட்ட பல கருவிகளை உருவாக்கினார். திரள் உற்பத்தி, ஒன்றுபட்ட பெரிய குழுப்பணி ஆகிய கோட்பாடுகளைப் பயன்படுத்திய முதல் கண்டுபிடிப்பாளர்களுள் ஒருவர். 1880 ல் எடிசன் அறிவியல் சார்ந்த இதழ் ஒன்றைத் தொடங்கியவர். இது 1900-ஆம் ஆண்டில் அறிவியல் முன்னேற்றத்துக்கான அமெரிக்கக் கழகத்தின் (American Association for the Advancement of Science) இதழானது.*

வியாழன், 17 அக்டோபர், 2019

அரசாணை (நிலை) எண்.324 Dt: October 17 .10.2019தனிப்பட்ட உயர்வு – திருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் – 1 7 2019 முதல் மற்றொரு தனிப்பட்ட உயர்வு - ஆணைகள் - வெளியீடு




நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செயல்முறை நாள் 17.10.2019


பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பட்டியல் வெளியீடு-& பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறை நாள் 17.10.2019