செவ்வாய், 29 அக்டோபர், 2019

*🌷அக்டோபர் 29, வரலாற்றில் இன்று.*
--------------------------------------------------
*அமரர் கல்கியின்* *பொன்னியின் செல்வன்  வரலாற்றுப் புதினம்  தொடராக முதற் தடவையாக கல்கி இதழில் வெளிவர ஆரம்பித்த தினம் இன்று (1950).*


*இப்புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது. தவிர தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது. கி.பி. 1000 ஆம் ஆண்டு வாக்கில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது. *பொன்னியின் செல்வன், பல்வேறு நாடகக்* *குழுக்களால் நாடகமாகவும்*
*அரங்கேற்றப்பட்டுள்ளது.*

*இப்புதினம் புது வெள்ளம், சுழல்காற்று, கொலைவாள், மணிமகுடம், தியாக சிகரம் என 5 பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 300க்கு மேற்பட்ட அத்தியாயங்களைக் கொண்டது.*

திங்கள், 28 அக்டோபர், 2019

டெங்கு காய்ச்சல் எதிரொலி ~ பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் ~ பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு…

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு அற்ற ஆழ்துளைக் கிணறுகளை பற்றி தகவல் தர நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவு


*🌷அக்டோபர் 28, வரலாற்றில் இன்று.*
--------------------------------------------------
 *ஜோனாஸ் எட்வர்ட் ஸல்க் பிறந்த தினம் இன்று.*

*அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் 28-10-1914 அன்று பிறந்த ஜோனாஸ் எட்வர்ட் ஸல்க்,*
*நியூயார்க் மருத்துவ பல்கலைக்கழகத்தில் படித்து, பட்டம் பெற்று, சிலவகை மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தார். இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய காலகட்டமான 1950களில் உலகம் முழுவதும்* *’போலியோ’ எனப்படும் இளம்பிள்ளை வாதம் நோயின் தாக்கமும், அதனால் விளைந்த பாதிப்புகளும் உச்சகட்டத்தை எட்டியது.*

*குறிப்பாக, 1952ஆம் ஆண்டில் அமெரிக்காவில் மட்டும் சுமார் 58 ஆயிரம் மக்கள் போலியோ நோயினால் பாதிக்கப்பட்டனர்.* *இவர்களில் 3 ஆயிரத்து 145 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.*
 *21 ஆயிரத்து 269 பேர் கை, கால்கள் செயலிழந்த*) *நிலையில் முடக்குவாத தாக்கத்திற்கு ஆளாகி, மாற்றுத் திறனாளிகளாக மாறிப் போயினர்.*

*இந்த அவலநிலையை கண்டு கொதித்துப் போன டாக்டர் ஜோனாஸ் ஸல்க், போலியோவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்* *மாற்று மருந்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இரவும், பகலும் மூழ்கிப் போனார்.*
*10 ஆண்டு கால கடும் உழைப்பின் பலனாக, 1955ஆம் ஆண்டு புதிய மாற்று மருந்து ஒன்றினை வெற்றிகரமாக கண்டுபிடித்தார்.*

*அதே ஆண்டில், சோதனை முயற்சியாக 20 ஆயிரம் டாக்டர்கள், 64 ஆயிரம்* *பள்ளி* *ஊழியர்கள், சுமார்*
*2 லட்சம் தன்னார்வ தொண்டர்கள் கொண்ட போலியோவிற்கு எதிரான தற்காப்பு படையினர்,* *அமெரிக்காவில் உள்ள 18 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு ஜோனாஸ் ஸல்க்-கின் புதிய கண்டுபிடிப்பான ‘போலியோ சொட்டு மருந்து’ போட்டு தீவிர பிரசார முகாமினை தொடங்கினர்.*

*இந்த மருந்தின் செயலாற்றலின் விளைவாகதான். இன்றைய உலகில் போலியோ இல்லாத இளய சமுதாயத்தை பார்க்க முடிகிறது. இந்த அரிய கண்டுபிடிப்புக்கான காப்புரிமை (பேட்டண்ட் ரைட்ஸ்) தனக்கு தேவை இல்லை என்று கூறிவிட்ட டாக்டர் ஜோனாஸ் ஸல்க், அதனை மனித சமுதாயத்துக்கு பரிசாக வழங்குவதாகவும் மகிழ்ச்சியுடன் அறிவித்தார்.*

*அவர் மட்டும் இந்த சொட்டு மருந்துக்கான காப்புரிமையை பெற முயற்சித்திருந்தால் 1960களிலேயே உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரராக உயர்ந்திருக்க முடியும். ஆனால், மிகப்பரந்த பெருந்தன்மையுடன் தனது 10 ஆண்டு ஆராய்ச்சியின் பலனை மனித குலத்துக்கு தானமாக வழங்கி, நோயற்ற சமுதாயத்துக்கான வரலாற்றில் நீங்கா தனிச் சிறப்பிடத்தை இவர் பிடித்துள்ளார்.*

*அவரது இந்த முடிவை அறிந்து வியந்துப் போன ஒரு பத்திரிகை நிருபர், ‘இந்த கண்டுபிடிப்புக்கான காப்புரிமையைப் பெற ஏன் மறுத்து விட்டீர்கள்’ என்று வினவினார். இந்த கேள்விக்கு டாக்டர் ஜோனாஸ் எட்வர்ட் ஸல்க் சற்றும் சிந்திக்காமல் கூறிய பதில் என்ன தெரியுமா...?*

*‘அடப்போங்க... சார்! சூரியனுக்கு யாராவது காப்புரிமை கோர முடியுமா..? அதேபோன்றது தான் இந்த சொட்டு மருந்தும் உலகத்தில் உள்ள அனைத்து உயிரினத்துக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்’ என்று மிகவும் தன்னடக்கத்துடன் அவர் பதில் அளித்தார்.*

*அவர் மட்டும் இந்த மருந்தினை பொதுவுடமை ஆக்கியிராதிருந்தால்... கடந்த 50 ஆண்டுகளில் போலியோவால் பாதிக்கப்பட்ட பல கோடி உயிர்கள் மரணத்தை தழுவி மடிந்திருக்கும். அந்த துர்மரணத்தில் இருந்து மனித குலத்தை காத்து, வாழ்விக்கப் பிறந்த டாக்டர் ஜோனாஸ் எட்வர்ட் ஸல்க், 23-06-1995 அன்று தனது 80வது வயதில் காலமானார்.*

*பிரபல கோடீஸ்வர தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் ஆகியோருக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி செய்திகளை வெளியிடும் உலக ஊடகங்கள், டாக்டர் ஜோனாஸ் எட்வர்ட் ஸல்க் என்ற இந்த ‘மாமனிதர்’ மனித குலத்துக்கு ஆற்றிய மகத்தான சேவையை இருட்டடிப்பு செய்துவிட்டதாகவே பலரும் கருதுகின்றனர்.*

*தனது இறுதி மூச்சு வரை உயிர்க் கொல்லி நோயான எச்.ஐ.வி.க்கு எதிரான தடுப்பு மருந்தினை கண்டுபிடிக்கும் அரிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த டாக்டர் ஜோனாஸ் ஸல்க். தனது இலக்கினை எட்டாமலேயே இறந்துப் போனது மனித குலத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பு என்றே கருத வேண்டும்.*
*🌷அக்டோபர் 28, வரலாற்றில் இன்று.*
--------------------------------------------------

*ஜெர்மன் அறிஞர் பெட்ரிக் மாக்ஸ் முல்லர்*
*(Friedrich Max Muller)*
*நினைவு தினம் இன்று.*

*இந்தியாவுக்கு வராமலேயே இந்திய நாட்டின் உயர்ந்த நூல்களை மொழிபெயர்த்து உலகறியச் செய்தவர், ஜெர்மன் நாட்டு அறிஞர் மாக்ஸ் முல்லர். அவரது நண்பர் மலபாரி, அவரை இந்தியாவுக்கு வரவேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அதற்கு மாக்ஸ் முல்லர், "நான் வருவதற்கில்லை! ஏனெனில், புராதனமான பண்பாடு நிறைந்த, முனிவர்கள் வாழ்ந்த இந்தியாவிலேயே அவர்களது உன்னதத் தத்துவ நூல்கள் மூலம் வாழ்ந்துவிட்டேன். நான் அங்கே வந்தால் மீண்டும் ஜெர்மன் திரும்ப முடியாது" என்று கூறி மறுத்துவிட்டார்.*
*🌷அக்டோபர் 28, வரலாற்றில் இன்று.*
-------------------------------------------------
*சர்வதேச அனிமேஷன் தினம் இன்று.*

*அசையும் படங்களை கொண்டு உருவாக்கப்படும் அனிமேஷன் திரைப்படம் ஆரம்ப காலத்தில் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தவையாக இருந்தாலும், தற்போது அனைத்துலக மக்களின் விருப்ப தேர்வில் ஒன்றாக திகழ்கிறது.*
*வெகு வேகமாக வளர்ந்து வரும் 3D தொழில்நுட்பமும், அனிமேஷன் துறையை சார்ந்தது தான். இந்த அனிமேஷன் தொழில்நுட்பத்தில் உருவாகும் திரைப்படங்கள் மற்றும் இத்துறையில் பணியாற்றும் ஊழியர்களை ஊக்குவிக்கும் விதமாக “சர்வதேச அனிமேஷன் தினம்” கொண்டாடப்படுகிறது.*

*1892இல் சார்லெஸ் எமிலி ரெனால்ட் என்பவர் கிரெவின் மியூசியத்தில் முதன் முதலில் திரையரங்கு ஒன்றில் அனிமேஷன் திரைப்படத்தை திரையிட்டதை நினைவு கூறும் விதமாக இந்த சர்வ தேச அனிமேஷன் தினம் அமைந்துள்ளது.*
*சமீப காலங்களாக இந்நாள் 50க்கும் மேற்பட்ட நாடுகளால் கொண்டாடப்*
*படுகின்றன. UNESCOவின் ஒரு அங்கமான சர்வதேச அனிமேஷன் திரைப்பட சங்கம்(International Animated Film Association-* *ASIFA), 2002இல் இந்நாளை அறிமுகப்படுத்தியது.*
*இந்நாளன்று உலகின் பல பகுதிகளில், அனிமேஷன் திரைப்படங்கள் மற்றும் குறும்படங்களை ஊக்குவிக்கும் விதமாக, புதிய அனிமேஷன் குறும்படங்கள் மற்றும் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.*

ஞாயிறு, 27 அக்டோபர், 2019

*🌷அக்டோபர் 27, வரலாற்றில் இன்று.*
--------------------------------------------------

*இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் பிறந்த தினம் இன்று.*

*கே. ஆர். நாராயணன் என்று அறியப்படும் கொச்செரில் ராமன் நாராயணன் (பிறப்பு - கோட்டயத்தில் உள்ள உழவூர் (கேரளா), அக்டோபர் 27, 1920; இறப்பு - புது தில்லி, நவம்பர் 9, 2005) பத்தாவது இந்தியக் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் இப்பொறுப்பை வகித்த ஒரே மலையாளி ஆவார்.*
*🎇அக்டோபர் 27, வரலாற்றில் இன்று*
-------------------------------------------------
*உலக ஒலிஒளி பாரம்பரிய தினம் இன்று.*
*(World Day for Audiovisual Heritage)*

*யுனெஸ்கோ அமைப்பானது இத்தினத்தை 2005ஆம் ஆண்டில் அங்கீகரித்தது. ஆடியோ ஆவணங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினம் கொண்டாடுவதன் நோக்கம். தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம், ஆடியோ சங்கங்கள், தொலைக்காட்சி, வானொலி நிலையங்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு இடையே கூட்டு முயற்சி ஏற்படுத்த இத்தினம் முதன்முதலாக 2007இல் கொண்டாடப்பட்டது.*

*🎇🍥💥💐தீபாவளி வாழ்த்துக்களுடன் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,நாமக்கல் மாவட்டம்.*
*🎇அக்டோபர் 27, வரலாற்றில் இன்று.*
-------------------------------------------------
*காலாட்படை தினம் இன்று.*

*இத்தினம் இந்திய ராணுவத்தால் கடைபிடிக்கப்படுகிறது.*

*சுதந்திரம் பெற்றபின் 1947ஆம் ஆண்டு இதே நாளில், ஸ்ரீநகர் விமானநிலையத்தை கைப்பற்ற தீவிரவாதிகளின் ஊடுருவலை முறியடிக்கும் விதமாக இந்திய ராணுவ வீரர்கள் போரிட்டு முதல் முறையாக வெற்றி பெற்றனர்.*

*இதைப் போற்றும் விதமாக இந்திய காலாட்படை தினம் கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.*

தங்களுக்கும், தங்களது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் -& தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்-நாமக்கல் மாவட்டம்.


தங்களுக்கும், தங்களது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் விழாக்கால இனிய வாழ்த்து.💐🙏
-முருகசெல்வராசன்.